பெயரிலின் அலைஞனின் அலைகள் தளத்தில் இடம்பெற்ற உரையாடல்.
I'm Changing My Name to Chrysler (Arlo Guthrie)
சிறீரங்கனது பின்னூட்டம்.
மிக அருமையான கருத்துப்படம்-பாடல்.பலநூறு பக்கங்களில் சொல்லும் இன்றைய பங்குச்சந்தை-சந்தைப் பொருளாதாரச் சூதாட்டத்தை மிக இலகுவான வரிகளினாலும்-கருத்துப்படங்களினாலும் விமர்சித்து,அதன் மக்கள் விரோத நிலையைச் சுட்டுவது அருமையான முயற்சி.
பெயரிலியின் பின்னூட்டம்.
ஸ்ரீரங்கன்,
இரண்டோ மூன்றோ ஆண்டுகள் முன்னதாக இதே பதிவிலே இதே பாடல் பற்றி இரண்டு வரிகள் பேசினோம்; ஞாபகமிருக்கக்கூடும்.
இம்முறை நல்ல கருத்துப்படங்களோடு அகப்பட்டுக்கொண்டது.
சிறீரங்கனது பின்னூட்டம்.
//இரண்டோ மூன்றோ ஆண்டுகள் முன்னதாக இதே பதிவிலே இதே பாடல் பற்றி இரண்டு வரிகள் பேசினோம்; ஞாபகமிருக்கக்கூடும்.//
நான் மறந்திட்டேன்.ஞாபகம் வருகிறது உங்கள் சுட்டிக்காட்டுலுக்குப் பின்.பெயரிலி, ஏன் உங்கள் பதிவினது பின்னூட்டங்கள் தமிழ் மணத்தில் தெரிகிறதில்லை?
சிவப்பு மார்க்சியனினது பின்னூட்டம்.
பெயரிலி,
இன்னும் 2,3 வருடத்திற்குப் பின் இப்பாடலை நீங்கள் போட்டாலும் சிறீரங்கன் இதே மாதிரி பின்னூட்டம் இடுவார்.
இதில் இருந்து என்ன தெரிகிறது?
பொருளாதாரத்தால் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்காக என்றும் குரல் கொடுக்கக் கூடிய ஒருவர் அவரே.. ஆகையால் தான் அன்றும் இன்றும் ஒரே பாடலுக்கு பின்னூட்டம் விட்டு தனது ஏகாதிபத்திய எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்.
எமது மார்க்சியத்திலும் மார்க்சியவாதிகளிலும் உள்ள அழகு என்னவென்றால், அவர்கள் ஒரு பாடலுக்காக 2,3 வருடம் என்ன 20,30 வருடங்களே தமது எதிர்ப்பத் தெரிவிப்பார்கள். அவர்களின் வாரிசுகளும் இதே பாடலுக்காக இதே மாதிரி எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள்.
இப்படியான மார்க்சியர்களைப் பெற நாம் என்ன தவம் செய்துவிட்டோம்?
முதலாளித்துவம் ஒழிக.
மார்க்சியம் வாழ்க..
மக்கள் எழுச்சி ஓங்கட்டும்
புதிய ஜனநாயகம் வளரட்டும்.
-சிவப்பு மார்க்சியன்
சிறீரங்கனது பின்னூட்டம்.
//இன்னும் 2,3 வருடத்திற்குப் பின் இப்பாடலை நீங்கள் போட்டாலும் சிறீரங்கன் இதே மாதிரி பின்னூட்டம் இடுவார்.
இதில் இருந்து என்ன தெரிகிறது?
பொருளாதாரத்தால் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்காக என்றும் குரல் கொடுக்கக் கூடிய ஒருவர் அவரே.. ஆகையால் தான் அன்றும் இன்றும் ஒரே பாடலுக்கு பின்னூட்டம் விட்டு தனது ஏகாதிபத்திய எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்.
எமது மார்க்சியத்திலும் மார்க்சியவாதிகளிலும் உள்ள அழகு என்னவென்றால், அவர்கள் ஒரு பாடலுக்காக 2,3 வருடம் என்ன 20,30 வருடங்களே தமது எதிர்ப்பத் தெரிவிப்பார்கள். அவர்களின் வாரிசுகளும் இதே பாடலுக்காக இதே மாதிரி எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள்.//
சிவப்பபு மார்க்சியன்,
வணக்கம் மார்க்சியரே-வணக்கம்!
இன்றுவரை மார்க்சியம் குறித்து நீங்கள் மட்டுமல்ல,உலகம் பூராகவும் எதிர்ப்பைக் கருத்தியல் மற்றும் வன்முறைசார் கருத்தியற்றளத்திலும் முன்னெப்படுபவர்கள் இருக்கும்வரை, நமது தலைமுறையும் இருக்கும்-பயப்படாதீர்கள்!,உலகை ஆள்பவர்கள் பல் நூறு ஆண்டுகளாக மார்ச்சிய-இடதுசாரிய அமைப்புக்களை எதிர்த்துக் கருத்தாடுவதும்-தாக்குவதும் ,தண்டனைக்குட்படுத்துவதும் தொடர்கிறதே,அது ஏனங்க?
கடந்த சனிக்கிழமை உலகம் பூராகவுமுள்ள நாசிகள் ஜேர்மனியப் பெரு நகரான-கோல்ன் மாநகரில்(கேளினில் Koeln) இஸ்லாமியப் பள்ளிவாசல்கட்டுவதை எதிர்த்துக் கூட்டம்போட்டார்கள்.இத்தகைய கூட்டத்தை ஜனநாயகத்தின் பெயரால் அனுமதித்த ஜேர்மனிய அரசு,நாசிகளைப் பாதுகாக்கப் பொலிசை ஏவிவிட்டது.இத்தகைய இருண்ட மானுட விரோதத்தை எதிர்த்து இடதுசாரிகள் வழிமறித்து அவர்களைத் தடுத்துப் பெருவாரியான மக்களை அணி திரட்டிப்போராடி, நம்மையெல்லாம் காத்தார்கள்.இறுதியில் நாசிகளை விட்டுவிட்டு, இடது சாரிகளையும் அவர்களது குழந்தைகள்-குட்டிகளையும் கூட்டுக்குள் அடைத்து இரண்டு நாட்கள் கழித்து வீட்டுக்கனுப்பியது போலீசு.இதுவெல்லாம் எதைச் சொல்கிறது சிவப்பு மார்க்கு?
கடந்த கிழமை திவாலாகிப்போன வங்கிகளுக்கு மக்களின் வரிப்பணத்தைக் கோடிகோடியாய் அள்ளிக்கொடுத்துத் தமது ஆதிகத்தைத் தக்கவைக்கும் புஷ், எதற்காக இங்ஙனஞ் செய்கிறார்?-இந்தக் கொடுக்கல் வாங்கலுக்குப்பின் நேற்றுமட்டும் ஒரு பெறல் மசகு எண்ணை 150.டொலர் வரை உயர்ந்து,25 டொலரை ஒரு தினத்தில்மட்டும் அள்ளி வழங்கியதே இஃது எப்படிச் சாத்தியமானது?; இதன் சூத்திரம் புரியாதிருக்கும்வரை நாங்களும் எல்லாவற்றையும் குறித்து ஓலமிட்டுக்கொண்டுதான் இருப்போம்.இது தவிர்க்கமுடியாத போராட்டம்.நீங்க சில இலட்சம் மக்களின் வாழ்வு மேம்பாட்டைக் கனவுகொள்ளும் கருத்துக்களோடு உலாவருவதாக உங்கள் எழுத்தின்வழி அறிகிறேன்.நாங்கள்(...) கோடிக்கணக்கானவர்களாகிய நமது வறுமைக்கு வழி தேடுகிறோம்-அவ்வளவுதாம்; இங்கே-வித்தியாசம்!மற்றும்படி நீங்கள் சிவப்பா அல்லது கருப்பா என்பதல்ல நமது நோக்கு.இதுவெல்லாம் தங்களது சோப்புக் கண்களுக்குப் புலப்படாதவரை நாமும் இருப்பதன் அவசியம் தொடரும்.
இப்படிக்கு,
காக்கா,கா...கா..காக்காக்கா,கா கா கா கா...அண்டங்காக்க கா,கா கா கா
சிவப்பு மார்க்சியனது பின்னூட்டம்.
அப்போ 20,30 வருசமல்ல 200,300 வருடங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க போகின்றேன் என்கிறீர்கள். என்ன செய்ய எல்லாம் விதி.
உங்களிலோ உங்களது கருத்திலோ எனக்கு முரண்பாடு இல்லை தலைவா. ஆனால், உங்களது சில செய்கைகள் முதலாளித்துவத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. அது புரியலையே உங்களுக்கு. :( ஒரு பாட்டுக்கு 2,3 வருசத்துக்கு ஒருக்கா பின்னூட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தா எப்படிங்க நாம மாற்று பொருளாதார முறையை நடைமுறைப்படுத்துறது.?
ஜேர்மனில கூட்டம் போட்டவங்களைப் பிடிச்சுக் கொண்டு போறவங்களை நான் ஏனுங்க ஆதரிக்கப் போறன். நம்ம வேகம் போதாதுங்க. அதை தான் சொல்றேன். நீங்க பாயின்ட விட்டு எங்கயோ போறீங்களே..! முதலாளித்துவம் என்னமா தன்னை மாற்றி மாற்றி நிலைநிறுத்துது பார்த்தீங்களா? அதை உடச்சு நொருக்க நமக்கு வேகம் போதாது. நம்மட்ட முறையான நகர்வுகள் இல்லங்க. இதைச் சொன்னா உடன நீங்க மார்க்சிய விரோதி ங்கிற மாதிரி பட்டம் கட்டுறீங்களே..!
புஷ் பணத்தைக் கொட்டி தன்னை தக்க வைப்பான். நாமளும் அப்பிடிச் செய்யணும். செய்யிற மாதிரி வளர்த்துக்கணும். அதை தனே நான் சொல்றேன். நீங்க என்னை புஷ் ட பக்கத்துக்கு துரத்தி விடுறீங்களே.! நியாயமா?
முதலாளித்துவத்தின் தேவை. ஓலமிடுபவர்களே.!! அவர்கள் இருக்கும் வரை முதலாளித்துவம் உயிர்வாழும். இருந்து பாருங்களேன்.
நீங்க கோடிக்கணக்கான மக்களுக்காக குரல் கொடுத்திட்டு இருப்பீங்க. ஆனா அவங்கட வறுமை தொடர்ந்து கொண்டே இருக்கும். இதுதான் என்னுடைய கேள்வி. நீங்க கொடுத்த குரல்லால இன்னும் கொஞ்சம் அதிகமன ஆகள் வறுமையாகிடுவாங்க.
நான் குரல் கொடுத்தா உனக்கு என்ன பிரச்சனை எண்டு நீங்க கேக்கலாம். உங்கட ஓலத்துக்கு பினால ஓலம் போடுறதுக்கு ஒரு கூட்டம் வருதே. அதுதான் நமக்கு பிரச்சனையா இருக்கு. எல்லா இடத்திலயும் ஒரே ஓலம். மனிசர் நிம்மதியா வேலை செய்ய முடியல. உங்க ஓலம் எலாரையும் பழதாக்குது தலைவா.
உங்கட எல்லாம் எண்ட சோப்புக் கண்ணுக்கு விளங்கிச்சு. விளங்கி என்ன பண்றது எண்டு யோசிச்சு யோசிசு மண்டை காஞ்சு போச்சு தலைவா. எல்லா சூத்திரமும் நல்லா புரியும் தலைவ எனக்கு. புரிஞ்சுட்டு அப்புறம் என்ன பண்றது எண்டு யோசிக்க மண்டை விறச்சு போகுது. சூத்திரம் விளங்கிட்டுது எண்டு புல்லரிச்சு போய் தூங்குற விருப்பம் எனக்கில்லை. சூத்திரம் புரிஞ்சா அதை மாத்தணும் தலைவா. மாத்திறதுக்கு வெளிக்கிட்டா கொஞ்ச பேர் ஓலம்வாத் தொடங்குறாங்க. :(
2, 3 வருசத்துக்கு ஒருக்கா ஒரே பாட்டுக்கு பின்னூட்டம் விட்டு விளையாடுறது தான் உங்கட தவிர்க்க முடியாத போராடம் எண்டு கருதினால் நான் என்னங்க செய்யிறது? அதுக்கு மேல கனக்க இருக்கு தலைவா.
/நாங்கள்(...) கோடிக்கணக்கானவர்களாகிய நமது வறுமைக்கு வழி தேடுகிறோம்-அவ்வளவுதாம்/
அப்படி வழி தேடினால் நான் கையெடுத்துக் கும்பிடுவேன். ஆனா எனக்கப்படித்த் தெரியலயே தலைவா. ஏதோ பொழுது போக்கிற மாதிரியெல்லோ தெரியுது.
நான் கேக்கிறது உங்களை கையெடுத்துக் கும்பிட செய்யுங்க. அவ்வளவுதான்.
-----------------------------------------------------------------------
நான் ஏதோ சொல்லப் போக நீங்க எங்கயோ போயிட்டீங்க.
2,3 வருசத்துக்கு முதலே விளங்கிட்டுது உங்களுக்கு. சரி. விளங்கினாப் பிறகு என்ன பண்ணனும்? இதுக்கு எனக்கு விடை கொடுத்தா நான் இண்டைக்கே உங்களைப் போல பிளாக் தொடங்கி உங்களை மாதிரியே எழுதுறேன் தலைவா.
சரி உங்க ஜாலியை கெடுத்துட்டன் போல இருக்கு..
ஏதோ பாட்டு பாட தொடங்குனீங்க நான் பாடுறன் நீங்க ஆடுங்க என்ன?
"அண்டக்காக்கா கொண்டைக் காரி ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க..
அச்சுவெல்ல சிரிப்புக்காரி.. ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க"
முதலாளித்துவம் ஒழிக.
மார்க்சியம் வாழ்க..
மக்கள் எழுச்சி ஓங்கட்டும்
புதிய ஜனநாயகம் வளரட்டும்.
-சிவப்பு மார்க்சியன்
சிவப்பு மார்க்சியனினது பின்னூட்டம்.
சிறீரங்கர்,
இன்னுமொரு விசயம். மக்கள் போராட்டம் மக்கள் போராடம் எண்டுறீங்களே அது என்னங்க?
புலம்பெயர்ந்த பன்னிகள் எல்லாம் சேர்ந்து ஒவ்வொரு நாளும் சிறீலங்கா எம்பசிக்கு முன்னால போய் நிண்டு தங்கட எதிர்ப்பை ஏன் வெளிக்காட்டேல்லை.? எல்லா சூத்திரமும் புரிஞ்ச நீங்களாவது ஏதாவது பண்ணலாமே..! புலம்பெயர்ந்த 10 லட்சம் பேரும் ஒரு மாதத்துக்கு ரோட்டுக்கு இறங்கினா என்ன நடக்கும்? உங்களுக்கு தெரிஞ்ச ஆக்களைக் கொண்டு போய் இண்டைக்கே தொடங்குங்கோ பாப்பம். கோடிக்காணகான மக்களின் வறுமையைத் தீர்க்கிறதை விட்டுப் போட்டு முதல் 1 லட்சம் மக்களின் உயிரைக் காப்பாத்தப் பாருங்க தலைவா.
இந்த சூத்திரங்களை விளங்கி வச்சு ஒரு பலனும் இல்லை. இப்பல்லாம் இந்த சூத்திரங்கள் கனபெருக்கு விளங்குது.
சிறீரங்கனது பின்னூட்டம்.
//ஜேர்மனில கூட்டம் போட்டவங்களைப் பிடிச்சுக் கொண்டு போறவங்களை நான் ஏனுங்க ஆதரிக்கப் போறன். நம்ம வேகம் போதாதுங்க. அதை தான் சொல்றேன். நீங்க பாயின்ட விட்டு எங்கயோ போறீங்களே..! முதலாளித்துவம் என்னமா தன்னை மாற்றி மாற்றி நிலைநிறுத்துது பார்த்தீங்களா? அதை உடச்சு நொருக்க நமக்கு வேகம் போதாது. நம்மட்ட முறையான நகர்வுகள் இல்லங்க. இதைச் சொன்னா உடன நீங்க மார்க்சிய விரோதி ங்கிற மாதிரி பட்டம் கட்டுறீங்களே..!
புஷ் பணத்தைக் கொட்டி தன்னை தக்க வைப்பான். நாமளும் அப்பிடிச் செய்யணும். செய்யிற மாதிரி வளர்த்துக்கணும். அதை தனே நான் சொல்றேன். நீங்க என்னை புஷ் ட பக்கத்துக்கு துரத்தி விடுறீங்களே.! நியாயமா?
முதலாளித்துவத்தின் தேவை. ஓலமிடுபவர்களே.!! அவர்கள் இருக்கும் வரை முதலாளித்துவம் உயிர்வாழும். இருந்து பாருங்களேன்.//
சிவப்பு மார்க்சியன்,மீளவும் வணக்கம்.தங்கள் எழுத்தின்வழி சிலவற்றைக் குறித்துரைப்பது அவசியம்.
நீங்க ஊன்றியுறைக்கச் சொல்லும்:
//முதலாளித்துவம் ஒழிக.
மார்க்சியம் வாழ்க..
மக்கள் எழுச்சி ஓங்கட்டும்
புதிய ஜனநாயகம் வளரட்டும்.//
மேற்காணும் கோசம், வெறுமனவே கோசமாகிப்போனதென்பதன் உணர்வினது நிலையில் நீங்கள் மீளவும்-மீளவுஞ் சொல்கிறீர்கள்!இத்தகைய போக்குப் பெயரிலியிடமும் உண்டு.
மேற்காணும் கோசத்தைத் தூக்கிப்பிடித்தபடி தமிழகத்தில் மக்கள் கலை இலக்கியக்கழகம் மற்றும் புதிய ஜனநாயக்கட்சி தமது போராட்டத்தைப் பல தளங்களில் செய்தபடி கைதாகிச் சிறைவரை சென்று மீள்கிறார்கள்-மடிந்தும் போகிறார்கள்!இங்கே-புலம்பெயர் தேசங்களில்-ஓலம்போட்டபின் நாம் ஒடுங்கி விடுவதாகச் செயற்றளம் இருப்பதற்கான காரணம் நீங்கள் அறிந்ததே.தனிநபகர்களின் புரட்சிகர மனது ஒருபோதும் செயற்பாட்டுக்கு வழிவகுப்பதில்லை.இதனால் உங்களது எள்ளலுக்கு நாம் ஆட்படுவது தவிர்க்க முடியாதுதாம்!
உலக ஆளும் வர்க்கமானது மனித சமூகத்தை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டது இருஷ்சியப் போல்ஸ்விக்கட்சியின் வெற்றிக்குப் பின்பான உலகமாற்றங்களின் காலவர்த்தமானத்தில் ஒரு தேசம் இப்படியும் உருவாக முடியுமென்ற நிதர்சனத்தில்.
"இன்றைக்கு அதே இருஷ்சிய மக்களிடம் கடந்த புரட்சிபற்றிக் கேட்டால்,அன்றைய இருஷ்சியப் புரட்சியானது சாரம்சத்தில் புரட்சியல்ல.அது, பிரஞ்சுப் புரட்சியைப்போல் பார்க்கமுடியாதது.மற்றும்படி,ஜேர்மனிய மன்னன் கைசர் வசமிருந்து பெற்ற பணத்தில் லெனின் இருஷ்சிய ஆளுமையை உடைத்தார்-ஐரோப்பாவில் பலம்பொருந்திய இருஷ்சிய யார் மன்னனையும்,அவனது ஆளுமை-ஆதிக்கத்தை உடைக்கவெண்ணிய டொச்ச கைசர் லெனின் மூலம் இதைத் செய்ததாக இன்று சொல்லித் திருகிறார்கள் இருஷ்சியர்கள்".
இதிலிலிருந்து ஒரு உலகத்தைப் புரிய முடியும்.லெனின் ஜேர்மனிய மன்னனின் பண உதவியைப் புரட்சிகரக் கட்சிக்கும்,புரட்சிக்கும் பயன்படுத்திப் புரட்சியை சாதிக்கும் தந்திரபோயத்தில் அன்று செயற்பட்டதை இன்று இங்ஙனம் புரிவதற்கான சமூக உளவில் என்ன?
இதற்கான விடையில்தாம் நாளை புரட்சிகரக் கட்சியின் தோற்றுவாய் சாத்தியமாகும்(...).
//முதலாளித்துவம் என்னமா தன்னை மாற்றி மாற்றி நிலைநிறுத்துது பார்த்தீங்களா? அதை உடச்சு நொருக்க நமக்கு வேகம் போதாது. நம்மட்ட முறையான நகர்வுகள் இல்லங்க//
இன்று, மனிதர்கள் எல்லோருமே அதீத தனிநபர் வாதத்தில் மூழ்கிச் சுதந்திரத்தைத் தமக்குள் கோருகிறார்கள்.இது,தனித்துவம் எனும் தேர்வில் மிக விருத்தியாகும் மிலேச்சத்தனமான தனிநபர் அகங்காரம் இந்த முதலாளித்துவ வர்த்தகச் சமுதாயத்தின் சந்தைப் பொருளாதாரத்தின் மிக வேகமான தயாரிப்பு.இது,ஒரு வகையான மனிதர்களை உருவாக்கப் பற்பல சமூக நடாத்தைகளைச் சுமூகப் பொருளாதாரத்தின் கட்டங்களாகப் பிரித்து, அவைக்கேற்ற தத்துவார்த்தப் போக்குகளை கருத்தியற்றளத்தில் தோற்றுவித்துத் தமது அடிமட்ட அமைப்பைக் காத்து வருகிறது.எனவே,முதலாளித்துவம் "தன்னை மாற்றி,மாற்றி"ப் புதுப்பிக்கும்-புனர் நிர்மாணிக்கும் நிலைமை மிகவும் இயல்பானவொரு கட்டமாக உருவாகிறது.இவர்கள் இத்தகைய மாறுகாலக்கட்டங்களை வெறுமனவே கருத்தியல்-வன்முறைசார் கருத்துநிலைகளுக்குள் நிகழ்த்தவில்லை.மாறாகத் தமது பொருளாதார உற்பத்திப் பொறிமுறைக்குள்ளும் இவற்றைச் செய்து பார்க்கும்போது மேற்காணும் புதிய மனிதத் தெரிவு ஒவ்வொரு தனிப்பட்டவர்களுக்குள்ளும் முளையரும்புகிறதாக நான் கருதுகிறேன்.
//முதலாளித்துவத்தின் தேவை. ஓலமிடுபவர்களே.!! அவர்கள் இருக்கும் வரை முதலாளித்துவம் உயிர்வாழும். இருந்து பாருங்களேன்.//
இதன் தொடர்பான ஆளும் வர்க்கமானது ஒவ்வொரு தனிநபர்களையும் இந்தச் சமுதாயத்தை; தூற்றவும்,முதலாளித்துவத்தைச் சலித்துக்கொள்ளவும் அதை விமர்சித்துப் புரட்சிகரமாகச் சிந்திக்கவும் சதா அனுமதிக்கிறது.இந்த அனுமதிப்பில் சமூகத்திலிருந்து தன்னை விடுவித்து,ஒற்றை மனிதர்களாகப்பட்ட"அதீத சுதந்திர"மனிதர்கள் இந்த முதலாளிய உற்பத்திப் பொறிமுறையிலிருந்து அந்நியப்படுகிறார்கள்.இத்தகைய மனிதர்கள் எவ்வளவுதாம் புரட்சிகரமாகச் சிந்தித்தாலும் கூட்டுழைப்புக்கு எதிரானர்வர்கள்.அங்கே,ஒவ்வொரு தனிமனிதர்களும் தமது தனித்துவத்தை மனித நடாத்தையால் பிரதியெடுக்கும்போது, இவர்களால் ஒரு கட்சியையோ அல்லது சிறு அமைப்பையோ உருவாக்க முடியாது.இந்த இடத்தில் பொருளாதார வாதத்தை முன்னிறுத்தும் தொழிலாளர் சங்கங்கள் ஒரு வடிகாலாக மாற்றங் காண்கிறது.இது, முதலாளியத்துக்குப் போதுமான பாதுகாப்பை வழங்கும் கருத்தியல் மனதை நமக்குள் உருவாக்கும்போது,நாம் தனிநபர் புரட்சிப் பாத்திரத்தோடு தடுத்தாட்கொள்ளப் படுகிறோம்.இங்கே,தனிநபர்களாக இருக்கும் எமது புரட்சிகர மனதுக்கு இந்த முதலாளித்தவத்தின் ஒவ்வொரு முகத்தையும் பார்த்துக் கொதிப்பதைத் தவிர வேறுவழியில்லை.
இதுதாம்"வேகம்"குறைவென்ற ஆதங்கம்.
உலகத்தில் எந்த மூலையிலாவது ஒரு புரட்சிகர கட்சியின் புரட்சிகர நகர்வு இந்த முதலாளிய ஜனநாயகத்தால் அனுமதித்துச் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா?-இல்லை.வெறுமனவே,போலிச் சோஷலிசக் கட்சிகள் பாராளுமன்றச் சகதிக்குள்ளும் அதன் வாதத்துக்குள்ளும் வீழ்ந்து மக்களை ஏமாற்ற அதுவே,ஷோசலிசத்தின் தோல்வியாக வர்ணிக்கப் படுகிறது.இது, இன்றைய முதலாளித்துவத்துக்கு மிகவும் ஒத்திசைவாகிறது.
இதை உடைத:துப் புரட்சிகரக் கட்சியின் தோற்றம் எங்கும் உருவாகாதிருக்க இந்த அமைப்பு பலகோடிக்களை கொடுத்துக் கருத்தியல் யுத்தத்தை ஏற்படுத்துகிறது.மறுபுறுத்தில், அணு ஆயுத்தம் தரித்த படைகளைக்கொண்டு பலமாகப் புரட்சியாளர்களைக்கொன்று குவிக்கிறது.
அதாவது,தனிநபர்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்க வைத்தவர்கள்,அவர்களை ஒரு அணிக்குள் திரண்டுவிடாது பார்த்துக்கொள்கிறர்ர்கள்.எங்கே,புரட்சிகரச் சூழலும் அதுசார்ந்து புரட்சிகரமான கட்சி உருவாகிறதோ அங்கோ பற்பல உடைவுகளைச் செய்து,தமது வன்முறை ஜந்திரத்தின்மூலம் புரட்சி ஒடுக்கப்படுகிறது,ஜனநாயகத்தினது பெயரால்.இதன் பின்,"புரட்டுசி" புரட்சிகரத் தன்மையிலான ஒரு சமூகப் பாத்திரத்தை எடுக்கு வைக்கப்படும்போது,அந்தத் தளத்தில் மக்கள் விரோதிகள் கம்யூனிசப் போராளிகளாகவும்,போதகர்களாகவும் நமக்குள் அறிமுகமாகி முதலாளித்துவத்துக்கு ஓலம் போடுகிறார்கள்.அதனால் முதலாளியம் என்றும் நிலைக்க முடிகிறது.எனினும,; அதன் பிறப்பில் அது தனது சவக்குழியைத் தொடர்ந்து தோண்டியபடியே இருக்கும்போது பாரிய சரிவுகள் இந்தச் சந்தைப் பொருளாதாரத்துக்கு ஏற்படுகிறது.அதைச் சரிக்கட்டவொரு தேசத்தைப் பயங்கரவாதிகளின் தாயகமாகக் கருத்துக்கட்டி யுத்தஞ் செய்து கொள்ளையிட்டுக் குறுகிய காலத்துக்கு உயிர்வாழ்வை நீடிக்கிறது.இது தொடர்கதை.
இத்தகைய சூழலில் தனிநபர்களான நாம் "வேகம்"பற்றி வெதும்புவது இயல்பாகிறது.இது,ஒரு புறநிலை யதார்த்தமாக இன்று இருக்கிறது.இதுவே,அகத்தில் தனிநபர் முனைப்போடு அறிதலில் உச்சம் பற்றிய மிதப்பில் ஒற்றை மனிதர்களாகி வருகிறது.இது, எவரோடும் பொருத்தமான எண்ணத்தை எப்போதும் அணுகமுடியாது அரசியல் தற்கொலையை தனக்குள் வற்புறுத்துகிறது.இதனிடம் வேதனையும்-விகாரமும்,அவ நம்பிக்கையைத் தூண்டி சமுதாயத்தின் முற்முழுதான ஆளுமையையும் மிகச் துச்சமாக மதிப்பிடும் மனதைத் தோற்றுவித்துக்கொண்டிருக்கிறது.
இனியென்ன நடக்கணும்?
ஓலம்,
அதி தீவிரம்,
வேகமான மாற்றம்,
திடீர் புரட்சி
திடீர் கட்சி,
திடீர் போராட்டம்
திடீர் வெற்றி
அதன் உலகுக்கு அவசியமாகிறது.இது தவிர்ந்த அனைத்தும் மிக வேகங் குறைந்த நிலையாக இருக்கிறது.
முதலாளியத்தின் பரப்புரையும்,வன்முறைசார் கருத்தியலும் ஒரு கணமும் ஓயாது நமக்குள் காரியமாற்றி நம்மைத் தயார்ப்படுத்திச் சமுதாயத்தைத் தனது கைக்குள் வைத்திருக்க முனைகிறது.நாளும் பொழுதும் இதுதாம் அதன் வேலைத் திட்டம்!
இந்த நிலையில் நீங்கள் சொல்வதிலிருந்து நாம் வேறுவிதமாக இந்த நடாத்தைகளை வெற்றிகொள்ள செயற்படுகிறோம்.அங்கே,மேற்காணும் நோக்குக் கிடையாது.எனவே,தனிநபர் வாதமோ அல்லது திடீர் வேகமோ இருப்பதற்கில்லை.அல்லது,இன்றைய சூழலுக்கு அவசியமானதற்ற கருத்து நிலையாகவும் இருக்கலாம்.ஆனால்,இது ஒரு கட்டத்தில் பொது வேலைத்திட்டத்தைப் புரட்சிகரமாக்கிக்கொள்ள முனைதலே புரட்சிகரக் கட்சியின் தோற்றமாக இருக்கும்.இதையும் மிக வேகமாகப் புரிந்த முதலாளியம்,தொழிலாள வர்க்கத்தை "இழப்பதற்கு அரிய வேலை உண்டு" என்று கருத்தியல் மனதை உருவாக்கி அவர்களை மிக இலகுவாக அடிமைப்படுத்துகிறது.உயிராதாரம் அனைத்தம் உழைப்பினால் தங்கி நிறைவுப்படுத்தும் உலகில்,வேலையே இழப்பதற்கரியதாக மாறுகிறது.இது புரட்சிக்கு எதிராகவே நிற்கும்.
நாம்,நிதானிப்போம்.
சிவப்பு மார்க்சியனது பின்னூட்டம்.
சிறீரங்கன் அண்ணை,
தனிநபர் வாதங்களை நீங்கள் மறுதலிக்கவும் முடியாது. நான் உங்களில் இருந்து இவ்விடங்களில் வேறுபடுகின்றேன். தனிநபர் வாதங்களை அதீதமாக நீட்டிச் செல்லும் போது நாம் வேறு வகையான புள்ளிகளை வந்தடைய முடியும் எனக்கு சில நம்பிக்கைகள் இருக்கு.
இனக்குழுக்களிடையேயும், பொதுவம்சங்கள் சிலவற்றுடன் ஒன்றிடும் குழுக்களுக்குமான அதீத சுதந்திரம் சில காலத்துக்கு முன்வரை மர்க்சியர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பாட்டாளிவர்கம் உடைந்துவிடும் என்று அவர்கள் கருதியதே அதன் காரணமாகும். இதன் காரணமாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை ஏற்றுக்கொள்ளாமல் விட்ட உதாரணங்களை நமது சூழலியே காட்ட முடியும்.
con-federal என்பதன் மூலம் ஒன்றிணைய முற்படும் நாடுகளை நாம் காண்பதற்கான சூழல் காணப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் அதன் மூலம் ஒன்றிணைந்திருக்கிறது. (தயவுசெய்து முதலாளித்துவ பொருளாதார முறையை பலப்படுத்தவே ஒன்றிணைந்தது என்பதாக கூற முற்பட வேண்டாம். எனது பிரச்சனை அதுவல்ல. அக்கட்டமைப்பில் எவ்வாறு சில விடயங்களை சாதிப்பது என்பது தான்.)
அதீத சுதந்திரத்தில் நிகழும் இணைவு வித்தியானமானது. அதிக அங்கீகரிப்பை கொடுப்பது. வித்தியான அங்கீகரிப்பை நிலைநிறுத்துவது. தம்மளவில் (வர்க்க அடிப்படையில் அல்ல) கலப்பதற்கான ஏதுவாய்களைக் கொண்டவை.
என்னைப்பொறுத்தவரை தன்னிலைகளின் பெருக்கம் என்பது மார்க்சிய கனவின் வழிப்பட்ட சிந்தனையே. இது உங்களது வழிப்பாதை அல்ல. ஆனால், முடிவுப்புள்ளி உங்களது முடிவுப்புள்ளிய அண்மித்தது.
என்னைப்பொறுத்தவரை மர்க்சியம் இந்த நூற்றாண்டின் இறுதிக்கானது அல்லது அடுத்த நூற்றாண்டுக்கான சிந்தனை. இக்காலகட்டம் தன்னிலகளை பெருக்குவதையும் தன்னிலை அங்கீகரிப்புகளை நிகழ்த்துவதற்குமான காலம். அதன் மூலம் பரஸ்பர நம்பிக்கைகளைப் பலப்படுத்துவதற்கான காலப்பகுதி. இக்காலத்தில் முதலாளித்துவத்தினூடாக- அதன் கட்டமைப்பில் இருந்தவாறு- நாம் சில விடயங்களை செய்ய முடியும். அதுவரை சாதிய அரசியல் மட்டுமல்ல ஒரு சாதிக்குள்ளயான பிரதேச அரசியலையும் நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். வேறுவழியில்லை. இவ்வகையான உடைவுகளை விரைவுபடுத்துவதும் அதனூடாக அங்கீகரிபுகளை அதிகரிப்பதும் எம்முன் உள்ள சில கட்டங்கள். அதீதமான பிளவுகளும் அங்கீகரிப்புகளும் மட்டுமே ஒன்றிணைவின் ஆரம்பப் புள்ளி. (முதலாளித்துவத்தை விரைவுபடுத்தல் என்று சிலர் இதனைக் கூற முடியும்.) இதன்வழி மட்டுமே இப்போதிருக்கும் முதலாளித்துவத்தை மாற்றியமைக்க முடியும். இண்டைக்கு இருக்கிற நிலையில முதலாளித்துவத்திற்கு பின்னல அணி திரண்டு அதன் டிரக்சனை சோசலிச சமூகம் நோக்கித் திருப்புவோம். இதுதான் எனது நிலைப்பாடு.
என்னைப் பொறுதத வரை உங்களால் செய்யக் கூடிய சிலவிடயங்கள் இருக்கின்றன.
1. ஜேர்மனில் உள்ள தமிழ்மக்களிடம் வேலை செய்வது. (அதற்கு முன்னர் புலிக்காச்சலுக்கு மருந்து எடுக்க வேண்டும். எதையும் பார்க்காமல் எல்லாவறையும் புதிதாக அணுக வேண்டும். புலி, எலி, பன்னிகள் எண்டெலாம் பார்க்கக் கூடாது.) அதற்காக சிறிது கலத்திற்கு உங்களை அரசியல் நீக்கம் செய்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் புதிதாக அணுக வேண்டும். எல்லாத்தையும் சி.ஐ.ஏ தான் செய்யுது பரவாயில்லை. நான் சி.ஐ.ஏ யில தானே வெலை செய்யிறன் எண்டு நினச்சு கொள்ளுங்கோ. ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து இது சி.ஐ.ஏ செய்யுது எண்டு கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு கொண்டு இருந்தா, அது மனசை புளங்காகிதமடைய வைக்கும். சிறிது காலத்தில் அந்த புளங்காகிதத்திற்கு அடிமையாகிவிடுவோம். அப்புறம் கண்டுபிடிப்புகளை செய்யாட்டி நம்மால சில 'திருப்திகளை' அடைய முடியாம போயிடும். இந்த திருப்திகள் எங்களை ஒண்டையும் உருப்படியா செய்ய விடாது. ஈகோ வை திருப்திபடுத்திக் கொண்டு வாழுறதுக்கு பேர் மக்களுக்காக குரல் கொடுக்கிறத? இல்லையே தலைவா.. (எல்லாம் என்ட அனுபவம்.. )
2. சும்மா சும்மா எழுதுவதை விட்டுவிட்டு உங்களிடம் இருந்து பரந்த அறிவை வைத்து ஆய்வுமுயற்சிகளைச் செய்வது. தகவல்களை கடந்து ஆய்வுகளுகான காலகட்ட்த்தை இன்னும் சில வருடங்களில் எதிர்கொள்ளப்போகின்றொம். நீங்கள் எழுதி வைத்த ஒண்டையும் கொஞ்ச காலத்துக்கு பின் ஆரும் பாக்க மாட்டாங்கள். ஆனால், ஆய்வுகள் எவ்வளவோ காலத்திற்கு உதவக் கூடியவை. நீங்கள் வெறும் தகவலுடன் உங்களை விட்டு போனல் உங்களது அனுபவங்கள், அறிவு எல்லாமே வீணாய் போய்விடும். உங்களுக்கு அடுத்து வாறவனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி விட்டு செல்ல வேண்டும். அவனையும் முதல்ல இருந்து வா எண்டிற நினலையை வைக்க கூடாது. ஒரு பொறுப்பும் இல்லாம இருக்கிறியள். :(
இல்லை நான் ஓலமிடப்போறேன். உழைக்கும் வர்க்கத்திற்கு சார்பாக எனது குரல் எப்போதும் இருக்கும் என நீங்கள் கருதி இருந்தா, நானும் இன்னும் 100 பேரில வந்து அலம்பிட்டிருப்பேன். இதால ஆருக்கும் பிரயோசனம் இல்லை. :(
இன்னுமொரு அட்வைஸ் சொல்றன் கேளுங்கோ. நீங்களும் ரயாகரன் அண்ணையும் கொஞ்ச காலத்துக்கு மனிசிமாரின் சொல்லைக் கேளுங்கோ. அதைக் கேட்டு நடந்து பாருங்கோ.
பி. கு- எங்கட உறுதியான குரலை சி.ஐ.ஏ சிவப்பு மார்க்சியனை அனுப்பி மாத்தப் பாக்குது எண்டு கற்பனை பண்ண வேண்டாம்.
-சிவப்பு மார்க்சியன்
சிறீரங்கனது பின்னூட்டம்.
ஃஃஇனக்குழுக்களிடையேயும்இ பொதுவம்சங்கள் சிலவற்றுடன் ஒன்றிடும் குழுக்களுக்குமான அதீத சுதந்திரம் சில காலத்துக்கு முன்வரை மர்க்சியர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பாட்டாளிவர்கம் உடைந்துவிடும் என்று அவர்கள் கருதியதே அதன் காரணமாகும். இதன் காரணமாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை ஏற்றுக்கொள்ளாமல் விட்ட உதாரணங்களை நமது சூழலியே காட்ட முடியும். ஃஃ
//con-federal என்பதன் மூலம் ஒன்றிணைய முற்படும் நாடுகளை நாம் காண்பதற்கான சூழல் காணப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் அதன் மூலம் ஒன்றிணைந்திருக்கிறது. (தயவுசெய்து முதலாளித்துவ பொருளாதார முறையை பலப்படுத்தவே ஒன்றிணைந்தது என்பதாக கூற முற்பட வேண்டாம். எனது பிரச்சனை அதுவல்ல. அக்கட்டமைப்பில் எவ்வாறு சில விடயங்களை சாதிப்பது என்பது தான்.)ஃஃ
ஃஃ ,,,என்னைப்பொறுத்தவரை மர்க்சியம் இந்த நூற்றாண்டின் இறுதிக்கானது அல்லது அடுத்த நூற்றாண்டுக்கான சிந்தனை.ஈஈஈ இக்காலகட்டம் தன்னிலகளை பெருக்குவதையும் தன்னிலை அங்கீகரிப்புகளை நிகழ்த்துவதற்குமான காலம். அதன் மூலம் பரஸ்பர நம்பிக்கைகளைப் பலப்படுத்துவதற்கான காலப்பகுதி. இக்காலத்தில் முதலாளித்துவத்தினூடாக- அதன் கட்டமைப்பில் இருந்தவாறு- நாம் சில விடயங்களை செய்ய முடியும். அதுவரை சாதிய அரசியல் மட்டுமல்ல ஒரு சாதிக்குள்ளயான பிரதேச அரசியலையும் நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். வேறுவழியில்லை. இவ்வகையான உடைவுகளை விரைவுபடுத்துவதும் அதனூடாக அங்கீகரிபுகளை அதிகரிப்பதும் எம்முன் உள்ள சில கட்டங்கள். அதீதமான பிளவுகளும் அங்கீகரிப்புகளும் மட்டுமே ஒன்றிணைவின் ஆரம்பப் புள்ளி. (முதலாளித்துவத்தை விரைவுபடுத்தல் என்று சிலர் இதனைக் கூற முடியும்.) இதன்வழி மட்டுமே இப்போதிருக்கும் முதலாளித்துவத்தை மாற்றியமைக்க முடியும். இண்டைக்கு இருக்கிற நிலையில முதலாளித்துவத்திற்கு பின்னல அணி திரண்டு அதன் டிரக்சனை சோசலிச சமூகம் நோக்கித் திருப்புவோம். இதுதான் எனது நிலைப்பாடு. ஃஃ
சிவப்பு மார்க்சியன், தங்கள் கருத்துகளை எந்த முடிந்த முடிவுகளோடான தீர்ப்புகளோடு கொன்றுவிடுதல் மிகவும் அபத்தமானது.எனவே,உங்களைக் குறித்துச் "சி.ஐ.ஏ.என்ற பொதுப்புத்திக்கு" நீங்கள் கோடிட்டுக்காட்டுவது சரிதாம்.இன்று,பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் காலத்தில் புதிய தெரிவுகளோடு மனித உருவாக்கம் நிகழ்வது குறித்து, நான் அதிகஞ் சிந்திப்பதுண்டு.இத்தகைய தருணங்களினது மனிதர்களின் மனமென்பது மென்மைத்தன்வகையான விருத்தியின்பால் புனிதத்தினது தூதுவர்களாகின்ற நிலையைப் பின் நவீனச் சமுதயங்களாக ஏற்றுக் கொள்ளபட்ட இன்றைய மனித நடத்தையில் தங்களது கருத்தின் மெய்நிலைகள் தொடர்கின்ற தொனிப்பை அவதானிக்கிறேன்.மனிதர்கள் தமது பாதயைத் தொடர்ந்து தெரிந்துகொள்கிறார்கள்.உள்ளொளியின் குரலை மேலும் தனித்துவமானதென்பதாகத் தொடர்ந்து, அதற்கானவொரு பாதையைத் தெரிகிறார்கள்.நேர்மையைச் செல்லுபடியாக்கும் செயலூக்கத்தில் முயற்சிகளைத் தொடருகிறார்கள்.அதற்கும் எல்லை இன்னொரு தலைப்பட்சமாக"நியாயப்படுத்தலில்"வந்து விடுகிறது.
இந்தப் பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் முக்கியமான கோரிக்கைகள் சுயதெரிவோடு தன்னிலைகளைப் பெருக்குவதன் வாயிலாக அங்கீகரித்தலென்பதை இன்னொரு புறவயமான காரணிகளிடமிருந்து பெறுவதிலும்பார்க்க அகவயமான உள்ளொளியோடு சங்கமித்து அதன் அங்கீகாரத்தைப் பெறுதலென்ற போக்கு இன்றைய மேற்குலகில் காரசாரமாக இடம்பெறும் உரையாடல்.இதுகுறித்து அறியப்பட்ட பிராங்பேர்ட்பள்ளி யூர்கன் ஹபர்மார்ஷ் இந்தப் பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்கள் குறித்து, தனது உரையில்(பதிப்பகப் பரிசு 2001 க்கான உரை,பிராங்பேர்ட் சென் பவுல் தேவாலயம்) தன்னிலை அங்கீகரித்தலோடான தேடுதலும் கண்டடைதலும் என்பது சுயபெறுமானங் குறித்த பிரச்சனையாக மனவெளியில் மனிதர்களை அலைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.இதன் ஆரம்பம் புனிதம் என்ற பிம்பத்தில் தனது சுய தெரிவை உரைப்பதற்கெடுக்கும் முயற்சியில் மனிதர்கள் மீளவும் சடங்குச் சங்கதிக்குள் சென்று நித்தியத்தின் மகிமையைத் தேடுவதற்காகவும்-மதத் தாயகமொன்றை உருவாக்கி விடுவதில் தமது நிறைவுகளை தேடுவதாகச் சொல்கிறார்.
இந்த நிலைகளை கடப்பதில் "அங்கீகரப்புக்களை"வலியுறுத்துவதென்பது ஒரே நேர்கோட்டுப்பாதையாகச் சமுதாயத்தில் அதன் அடித்தளத்தில் நிலவும் பொருள்வாழ்விலிருந்து முற்றுமுழுதாகத் துண்டித்துச் சென்றுகொண்டிருப்பதாக எண்ண முடியவில்லை.இத்தகைய தன்னிலைகளின் பின்னே படியெடுக்கப்படும் ஒரு "பொது நிலை"மீளவும் அந்தத் தன்னிலைகளைக் குறித்துக் குழப்பகரமான மறுத்தல்களைச் செய்வதை நாம் பார்க்கின்றோம்.
உதாரணமாக இன்றையபொழுதில் "இஸ்லாமியப் பயங்கர வாதம்"என்ற சமூக உளவியலுக்குப்பின் படையெடுக்கும் மேற்குலக உழn-கநனநசயட துருக்கியை இதுவரை "ஐரோப்பிய ஜனநாயகத்துக்கு"முரணற்ற மக்கள் சுமுதாயமாக அங்கீகரிக்வில்லை.ஐரோப்பிய மையவாத்தின் மொத்த இயல்புகளுக்குள் இன்னொரு தேசத்தையும் அதன் மக்களையும் அங்கீகரித்தலென்பதன் இன்னொரு தொடர் அண்மிக்கும் இடம் இனம்சார்ந்த பெருமைகளாக விரிகிறது.இது, எந்தத் தன்னியல்புகளையும் தனது அண்மையப் பெருமைகளுக்கமைய அங்கீகரத்துவருவதை நாம் பார்க்கிறோம்.இன்றைய இலங்கைப்பிரச்சனையில் சாதிய-பிரதேசவாரியான வாதங்களின் பின்னே ஒளிந்திருக்கும் அரசிய(;(In Moral Consciousness and Communicatative Action-Habermas) முழுமொத்த தமிழ்பேசும் மக்களினதும் உரிமைகளையும் வேட்டையாடுவதில் "தன்னிலை அங்கீகரிப்புகளை"கோருகிறது!
"சுய ஊசலாட்டம்";"(mit instabilen Ich)எங்கள் மக்கள் கூட்டத்தில் பிரதேசரீதியான வேறுபாட்டு முனைப்பைக் கோரிக்கொண்டது.மிகவும் தற்காலிகமான இந்த வாதம் அங்கீகரிப்புக்காக எடுத்த வைத்த அரசியல் சமாந்திரமாக விரிவடைந்து இன்றைய அரசியல் போக்கில் பாரியவொரு தாக்கத்தைச் செய்கிறது.இதை முன்கூட்டி அறிவதிலுள்ள மார்க்சியப் பொருளாதார முறைமை அத்தகையவொரு வெளியினது தெரிவைப் புறக்கணித்திருக்கும் அரசியல் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை வெறும் உணர்வுத் தளத்தில் பார்க்காத போக்கின் விருத்தியே.இது,இலங்கையின் இன்றைய அரசியலில் சரியானதாகவே படுகிறது.
ஃஃஅதீதமான பிளவுகளும் அங்கீகரிப்புகளும் மட்டுமே ஒன்றிணைவின் ஆரம்பப் புள்ளி. (முதலாளித்துவத்தை விரைவுபடுத்தல் என்று சிலர் இதனைக் கூற முடியும்.) இதன்வழி மட்டுமே இப்போதிருக்கும் முதலாளித்துவத்தை மாற்றியமைக்க முடியும். இண்டைக்கு இருக்கிற நிலையில முதலாளித்துவத்திற்கு பின்னல அணி திரண்டு அதன் டிரக்சனை சோசலிச சமூகம் நோக்கித் திருப்புவோம். இதுதான் எனது நிலைப்பாடுஃஃ
சிவப்பு மார்க்சியன் உங்கள் நிலையை ஏற்கிறான ஸ்ரீரங்கன்;.இது உங்கள் தெரிவு-நிலை.ஆனால்,எனது அரசியல் தெரிவென்பது இதற்கு மாறுபட்டதெனினும்"அதீதமான பிளவுகளும் அங்கீகரிப்புகளும் மட்டுமே ஒன்றிணைவின் ஆரம்பப் புள்ளி"என்ற கருத்தில் (சமூக இயங்கியல் புள்ளி) ஒன்றுபடுகிறேன்.எனினும்,முதலாளித்துவத்திற்குப் பின்னால் அணிதிரண்டு அதன் டிரக்சனை மாற்றியமைக்க முடியாது திண்டாடும் வெனிசூலா போன்ற தென் அமெரிக்க நாடுகளைப் பற்றி யோசிக்கிறேன்.
ஃஃஎன்னைப்பொறுத்தவரை மர்க்சியம் இந்த நூற்றாண்டின் இறுதிக்கானது அல்லது அடுத்த நூற்றாண்டுக்கான சிந்தனைஃஃ
மார்க்சியம் என்பது கடந்துவிட்ட ஒரு கட்டம் என்று பீட்டர் சிம்பா,தோமஸ் றைத்தனர் போன்ற அவுஸ்த்திரிய சமூகவியலாளர்கள் சொல்லிக்கொண்டிருக்க உங்கள் கருத்து இதற்கு வேறொரு தெரிவைச் செல்கிறது.என்றபோதும் இந்த நிலைகள் ஒரு உண்மையைச் சொல்கிறது.அது,அடுத்தகட்டம் உயிர்த்திருப்பதற்கான தேடுதல் நெருங்கிவரும் கட்டம்.இதற்குள் நீங்கள் குறித்த கருத்துகள் மிக அண்மித்துவரும் என்பதும் உண்மையே.
வளர்மதியின் பின்னூட்டம்.
பாடலுக்கு ஏற்றவாறு கருத்துப் படங்களைக் கோர்த்துத் தந்தது நீங்கள்தான் என்று ஊகிக்கிறேன்.
மிகவும் பிடித்திருந்தது :)
திரு. சிறீரங்கனுக்கும் 'சிவப்பு மார்க்சியனுக்கும்' இடையிலான கருத்துப் பகிர்வுகள் சுவாரசியம்.
எனது சார்பு ‘சிவப்பு மார்க்சியன்' பக்கமே என்பதை சொல்லிவிடுகிறேன் :)
இதை ஒரு பக்கச் சாய்வாகப் பார்க்காமல் விஷயத்தை நோக்குவோர்க்கு இரு பகிர்வுகளை இங்கு பதிய விரும்புகிறேன்.
1) திரு. சிறீரங்கனின் பகிர்வில்,
//மேற்காணும் கோசத்தைத் தூக்கிப்பிடித்தபடி தமிழகத்தில் மக்கள் கலை இலக்கியக்கழகம் மற்றும் புதிய ஜனநாயக்கட்சி தமது போராட்டத்தைப் பல தளங்களில் செய்தபடி கைதாகிச் சிறைவரை சென்று மீள்கிறார்கள்-மடிந்தும் போகிறார்கள்!//
எனது மறுப்பு.
அது “புதிய ஜனநாயகக் கட்சி” அல்ல.
மாநில அமைப்புக் கமிட்டி (மா - லெ) என்பது அவர்களுடைய கட்சியின் பெயர். (தற்சமயம் மாற்றிவிட்டார்களா என்பது அறியேன்.)
”புதிய ஜனநாயகம்” என்பது அவர்களுடைய 'வெகுஜன' அரசியல் இதழுக்கான பெயர். அதை வைத்து அவர்களுடைய கட்சியை அடையாளப்படுத்துவதாகாது. அவர்களுடைய உள்கட்சி இதழான “புரட்சிப் புயல்” - டன் எத்தனை பேர் அவர்களை அடையாளப்படுத்த முடியும் என்பது எதிர்க்கேள்வி.
அவர்கள் சிறைக்குச் செல்வதெல்லாம் ‘ஜுஜுபி'. அரசையெதிர்த்து உயிரைப் பலிகொடுக்கும் போராட்டங்களையெல்லாம் அவர்கள் இதுவரை நடாத்திவிடவில்லை.
2)//மிலேச்சத்தனமான தனிநபர் அகங்காரம்//
என்கிறார் சிறீரங்கன்.
“மிலேச்சத்தனம்” என்பது இந்துத்துவவாதிகள் இஸ்லாமியர்களைக் குறிக்கப் பயன்படுத்திய சொல் (மேலதிகமான விவரங்களையும் பதிவு செய்திருக்கிறேன் - சிற்றிதழ்களில்). இதை 'மார்க்சியரான' சிறீரங்கனால் எப்படிப் பயன்படுத்த முடிகிறது.
இவை ஏதோ இரண்டு சொற்கள் 'unconscious slip' - ஆக விழுந்துவிட்டன என்று நியாயப்படுத்தாமல் சிறீரங்கன் அல்ல, வாசகர்கள் யோசிக்க வேண்டுகிறேன்.
அவருடனும் அவரைப் போன்றவர்களுடனும் பகிரும் திராணி எனக்கில்லை.
மன்னிக்கவும்.
தொடர்ந்து உங்கள் பக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன் பெயரிலி.
விவாதங்களைத் தவிர்த்து ஆக்கப் பூர்வமான உங்கள் எழுத்துக்களை நம்பி :)
அன்புடன்
வளர் ...
சிவப்பு மார்க்சியனது பின்னூட்டம்.
சிறீரங்கன்,
பொது அடையாளங்களினூடு பிளவுறும் அடையாள அரசியல் என்பது கூட அடிப்படைவாத மனநிலையூடாகக் கட்டமைக்கப்பட முடியும். ஆயினும், அதனைத் தத்துவப்பிழையாகச் சொல்ல முடியாது. நாம் எதிர்ப்பக்கம் நின்று குரல் கொடுக்கிறோமா அல்லது அதனை மாற்ற முயற்சி செய்கின்றோமா என்பதிலேயே எமது சமூகப்பறுமானம் தங்கியுள்ளது எனக் கருதுகின்றேன்.
60 களில் வலுப்பெற்ற பண்பாட்டுமூலங்கள் என்பது தொடர்பான கருத்துக்கள் கூட அடிப்படைவாதமாக பார்க்கப்படக்கூடும். ஆபிரிக்க அரசியல் என்பது அவர்களது பண்பாட்டின் மூலங்களைக் கண்டுபிடிப்பதென்பதனூடாகவே வலுப்பெற்ற முடிந்தது. அமில்கர் கப்ரால் போன்றவர்கள் ஒருவகை அடையாள அரசியலையே செய்தார்கள். எந்தவொரு அடையாள அரசியலின் பின்னும் அடிப்படைவாத மனநிலை ஒழிந்திருப்பதென்பது நாம் மறுத்துவிட முடியாது. ஆயினும், அடையாள அரசியலின் அவ் அடிப்படைவாத மனநிலை தேக்கமுறுவதை தடுப்பதொன்றே எம்முன் உள்ள தெரிவு. அதனை மறுத்தல் என்பது கூட அவர்கள் 'மாற்றம்' அடைவதை தடுப்பதற்கான காரணியாகப் போய்விடும் அபாயம் உள்ளது.
**************************************************8
ஹேபர்மாசினது Public sphere என்பதன் அடுத்தடுத்த கட்டங்களாக தொழில்நுட்பத்தால் இனங்காணப்பட்ட பகுதிகள் எமக்குச் சொல்லும் செய்திகள் முக்கியமானவை. பிளவுற்ற தன்னிலையை எதிர்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தை தொழில்நுட்பம் எமக்கு அளிக்கப்போகின்றது. மார்க்சிய சிறீராங்கனுடன் virtual சிறீரங்கனது இருப்பு தவிர்க்க முடியாதது. அது மட்டுமல்ல மிகவும் இறுக்கமான தன்னுணர்வோடும் தன்னியல்போடும் virtual சிறீரங்கன் இருப்பு கட்டமைக்ப்படக் கூடும். அதன் நுண்ணிய புத்திசாலித்தனத்துடன் கூடிய நகர்வென்பது உண்மையான சிறீரங்கனது நகர்வை ஒரு கட்டத்தில் கட்டுபடுத்துவதான நிலையைச் சாத்தியமாக்கும். இங்கேயான முரண் இரு தன்னிலைகளின் 'வாழ்விற்கு' அங்கீகாரம் வேண்டி நிற்கும். தன்னிலைகளை மேலும் பிளப்பதை அனுமதிப்பதன் மூலம் மட்டுமே அந்நேரத்தைய துவித தன்னிலை முரண்களுக்கிடையில் இருந்தான 'விடுதலைக்கு' வழிவகுக்கும். artificial intelligence என்பது தவிர்க்க முடியாமல் எம்முன் காணப்படும் விநோதமான புதிய '______'. ?
பிளவுறும் தன்னிலைகள் என்பது கூட சில மறுப்புகளை வேண்டி நிற்கும் செயற்பாடே. வலிமையாகக் கட்டமைக்கப்பட தன்னிலைகளுக்கு எதிரான போரில் பிளவுறும் தன்னிலைகள் தோன்றுகின்றன. கட்டமைக்கப்பட்ட தன்னிலையின் இறுக்கம் அதனை நொருக்கி பிளக்கின்றது. தனித்த தனிலையின் இருப்பு என்பது கூட அடிப்படைவாதமாகக் கருதப்பட முடியும். இத்தன்னிலையின் இருப்பு என்பது எமது சூழலால் கட்டமைக்க்ப்படுகின்றது. சூழல் என்னும் போது கருத்துக்கள், நம்பிக்கைகள், சடங்குகள், ஆசைகள் போன்றனவற்றைக் குற முடியும். ஆக, தன்னிலை என்பது கூட ஒருவித அடிப்படைவாத அம்சமே. அக்கட்டில் இருந்து விடுபடும் நோக்கிலேயே தன்னிலைகள் பிளவுற ஆரம்பிக்கின்ற்ன. பிளவுகள் இறுக்கத்தைத் தளர்த்தும் போது சிலவிதமான சமநிலைகளை வந்தடையும். (இங்கே கட்டமைக்கப்பட்ட தன்னிலைகளில் இருந்தே மருத்துவம், பொறியியல், சட்டம் என அனைத்தும் உருவாக்கப்படுகின்றன. தன்னிலை மாற்றத்தினூடு அவற்றிலும் மாற்றங்கள் நிகழ்ந்தவாறிருக்கும்.)
**************************************************
இனி நாம் மீண்டும் விடயத்திற்கு வருவோம். அங்கீகரிப்புக்குள்ளான தன்னிலைகளுக்கு பின்னே படியெடுக்கப்படும் பொதுநிலைகள் மீண்டும் குழப்பத்திற்கு உள்ளாக்கும் சூழல் பற்றிய உங்களது கருத்து முக்கியமானது. ஆயினும் இங்கே எனது கருத்து வேறுவகையான சில விடயங்களையும் கூட உளடக்கியது. அதீத அங்கீகரிப்பின் பின் கூட 'நிரந்தர பொதுநிலை' என்பதை இயன்றவாறு மறுத்தடியிருத்தல் முக்கியமானது. நிரந்தர பொதுநிலை என்பது கூட சிலவகையான இறுக்கங்களை மீண்டும் மேற்கொள்ளத் தொடங்குதல் என்பது மீண்டும் பிழையான விடயமாகக் கூடும்.
அவ்வாறே இன்றைய இலங்கை அரசியலின் பின்னே ஒளிந்திருக்கும் வேட்டைக்காரர்கள் பற்றிய விடயம். எல்லாவிதமான அடையாள அரசியல்களும் ஆதிக்கத்தை விரும்புபவர்களால் பயன்படுத்தப்படும் என்பத்ற்கு எம்முன் இலங்கை அரசியல் மடுமல்ல இந்திய அரசியலும் சாட்சி பகருகின்றது. இதில் மக்கள் நலன் சார்ந்தவர்களுக்கு இருக்க வேண்டிய தெளிவு என்னவென்றால் அவ்வரசியலை மேற்கொள்பவர்கள் புகும் இடைவெளிகளை நிச்சயம் கருத்தில் எடுத்தே ஆகவேண்டும். அதன் போது மடுமே மக்கள் விரோத சக்திகளை துரத்தியடிக்க முடியும். தேசியவாத எழுச்சியின் போதான காலகட்டத்தின் போது ரஷ்ய சார்பு மார்க்சியர்கள் தேசியவதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயினும் மிகவும் பின்பாக அதனை ஏற்றுக்கொண்டார்கள். அன்றைக்கே அவர்கள் அதன் தேவையை ஏற்றுக் கொண்டு சிலவகையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தால் இன்றைக்கு நிலைமை வேறாக இருந்திருக்கக் கூடும். குறைந்தபட்சம் சிங்கள் மக்கள் மத்தியிலாவது தமது வேலைத்திட்டங்களை அன்று தொடர்ந்திருந்தால் சிலவேளை இன்றையநிலைமை வந்திருக்காது. தனியே கருத்தியலும், தனியே உணர்வுத்தளமும் பிளவுற்றதால் நாம் இன்றைக்கு மிகமோசமான நிலையை வந்தடைந்திருக்கிறோம். சிறிய விடயங்களுக்காக பிளவுபட்ட நாம் சாதகமான காரணிகளை நினைத்து ஒன்றுபடாமல் போய்விட்டோமே. சிறிய விடயங்களைக் கூட தேடித்தேடி விமர்சிக்கும் நாம் சாதகமான விடயங்களில் ஒன்று சேர்ந்திருந்தால் இன்றைக்கு இக்கட்டான நிலையில் இருப்போமா?
நீங்கள் சொல்லும் உணர்வுரீதியான தளத்தில் வைத்து அணுகப்படும் நிலைஎன்பது 'மிகவும் கடமைக்கப்பட்டது'. அதனை நீங்கள் சொல்வது மாதிரியான பொது அடையாளங்களூடு நிலைநிறுத்துவதென்பது கூட தற்காலிகமாக மட்டுமே சாத்தியப்படும். எமது தெரிவுகள் கலப்படைந்தவையாக இருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. நாம் தெரிவுகளை மேற்கோளும் போது மற்றைய தெரிவுகளை நிராகரிக்கின்றோம். அங்கே நாம் மக்கள் நலன் என்பதை புறக்கணிப்பதாகவே அர்த்தப்படுகின்றது.
மாற்றுக்கருத்து என்ற தளம் இறுதியில் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து வேலை செய்வது வரை எம்மைக் கொண்டுவந்துவிடது. அரசாங்கத்தையும் புலிகளையும் எதிர்ப்பாவர்கள் கூட அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்பவர்களுடன் மட்டுமே நட்புடன் இருக்க முற்படுகிறார்கள். மகேஸ்வரி வேலாயுதத்திற்கு அஞ்சலி செய்பவர்களால் திலீபனை நினைவு கூர முடியவில்லை. இங்கே புலிகள் மட்டும் பிழை செய்யவில்லை மாற்றுக்கருத்தாளர்களும் சேர்ந்தே பிழை விட்டார்கள். வன்னியில் மக்கள் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்திலும் மாற்றுக்கருத்தாளர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். புலிகளை எதிர்ப்பதாக நினைத்து ஒரு மக்கள் கூட்டம் கொன்றொழிக்கப்படுவதற்கு துணை போய்விட்டார்கள் மாற்றுக்கருத்தாளர்கள். இதில் அரசாங்கத்தை எதிர்க்கும் மாற்றுக்கருத்தாளர்களும் அடக்கம். :(
முதலாளித்துவத்துடன் கைகோர்த்துவிட்டது நேபாளம் என்ற கருத்திலோ மார்க்கியத்தின் தூய பிரதிநிதிகள் நேபாள மார்க்சியக் கட்சியினர் என்ற வாதங்களில் எனக்கு நம்பிக்கை. அவை எனக்கு தேவைப்படுவதும் இல்லை. ஆனால், நேபாளத்தில் ஓரளவுக்காவது மக்கள் நலன் சார்ந்த அரசாங்கம் நின்றுநிலக்கத்தான் போகின்றது. முதலாளித்துவன் கைகோர்த்தாவது, படுத்தாவது அவர்கள் மக்கள் நலனை முன்னிறுத்திய அரசியலை செய்யத்தான் போகின்றார்கள். அவன் தான் மார்க்சின் குழந்தை. அவன் தான் மார்க்சிஸ்ட். மக்கள் போராளி மக்கள் நலனுக்காக சமரசம் செய்வான். சமரசத்தினூடாக தனது மக்கள் அரசியலை மேற்கொள்ளுவான். புதிய உலக ஒழுங்கில் எமக்கான சாத்தியத்தை நாம் பெற்றே ஆகவேண்டும். இந்துத்துவா இந்தியா நேபாளத்தில் காலூன்ற வழிசமைப்பதை விட முதலாளித்துவத்துடன் படுத்தெழும்பிய 'மார்க்சிய' கட்சி இருப்பது மேலானது. (டக்ளஸ் செய்யும் சமரசம் மக்களுக்கானது அல்ல. அதில் யாருக்கும் சந்தேகம் இருக்கக் கூடாது.)
மார்க்சியம் புதிய வடிவில் இந்த நூற்றாண்டின் இறுதியில் தன்னை வெளிப்படுத்தும் என நான் நிச்சயமாக நம்புகின்றேன். தேசிய அரசாங்கங்களின் வளர்ச்சி என்னும் பேரில் அதிக வருமானத்திற்கான வரிவிதிப்பு என்பது அதன் முதல்கட்டமாக இருக்கக்கூடும். இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்பவை இதன் ஆரம்ப கட்டமாக இருக்கக் கூடும். இங்கே நுகர்வுக் கலாச்சாரம் உருவாக்கும் வர்க்கப்பிளவை எதிர்கொள்வதுதான் எமக்கான தேவை. fashion design இல் விளிம்புக் கதையாடல்களை புகுத்துவது கூட முக்கியமானதே.
our ultimate goal of establishing a Socialist Communism. However, in the current national and international circumstances, we have decided to move ahead by institutionalising the federal democratic republic.
- Pushpa Kamal Dahal (Prachanda) - Maoist leader
http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7596523.stm
இயங்கியல் என்பதே எப்போதும் இருப்பது.
-சிவப்பு மார்க்சியன்
கொழுவி யினது பின்னூட்டம்.
நான் சொன்னவை பொதுவாக சகல புலம்பெயர்ந்தவர்களுக்கும் பொருத்தமானதுதான். நான் உட்பட- சந்தடி சாக்கில் தகவல்களைப் பெற்று தனக்கெதிராக கொழுவி பயன்படுத்துகிறார் என்று சிறிரங்கன் கருதுவதில் உண்மையில்லை.
கொழுவி,
இந்த 3 மாசம் எல்லாரும் நல்ல உழையுங்கோ. ஜனவரி மாதம் போராட்டம் எண்டு நினச்சுக் கொண்டு உழையுங்கோ. தவிர்க்க முடியாம போராட்டம் புலம்பெயர் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுவிட்டது.
//
இதை நான் விளங்கிகொண்டது சரியானதெனில் அது இதுதான். அதாவது அங்கே இராணுவத்தின் கையோங்கி.. புலிகள் தோற்கடிக்கப்பட்டு அழித்தொழிக்கப் பட்டால் பிறகு அங்குள்ள தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் பணி புலம்பெயர் தமிழர்களின் கைகளில் என்று நீங்கள் நினைத்து இதை சொல்லியிருந்தால் ஐ யாம் வெரி சாரி..
புலிகள் அங்கு சண்டைபிடிப்பதால் மட்டுமே இங்கு வருசத்திற்கு ஒருதடவையாவது வீதியில இறங்க முடிகிறது.
ஆகக்குறைந்தது மாதம் ஒரு விமானத்தாக்குதலைத்தன்னும் அவர்கள் செய்ய வேண்டும்.
புலிகள் இல்லையெனின் -
கொஞ்ச காலத்துக்கு பிரபாகரனைச் சனம் திட்டும். என்ன பண்ணினவர் என ஏசும். பேசாமல் ரணிலை வரவிட்டிருக்கலாம் என்று அட்வைஸ் செய்யும். பிறகு உதெல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கும்.
ஒரு 5 வருசத்தில விடுமுறைக்கு சனம் ஊருக்கு போகும். முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் இருந்து ரோமிங்கில செல்போனில பேசும். விடுமுறை முடிய - சரியான கொசுக்கடியப்பா எண்டு மனிசி முணுமுணுக்க தங்கட தாயகப் பிரதேசமான ஐரோப்பா கனடா பகுதிகளுக்கு திரும்புவினம்.
சிறிரங்கன் இராயகரன் ஆட்கள் - புலிகளின் முடிவு எல்லா பாசிசங்களின் முடிவுதான் என கொஞ்ச காலத்துக்கு கட்டுரை எழுதுவினம். பிறகு அவையும் புலிகளை மறந்து விடுவார்கள். பிறகும் அவலா அவைக்கு யாரும் கிடைப்பினம். இடிக்க
ஆ.. சொல்ல மறந்து விட்டேன். அமீபா செத்து ரொம்ப நாளாகிவிட்டது. அமீபா மேல் விழும் வெளிச்சம் ஒருவித அதிகாரத்தை கட்டமைக்கின்றது என அமீபா புரிந்து கொண்டு தன்னைத்தானே சாகடித்துக் கொண்டதாயக் கேள்வி
சேகர், சுதன், சுதா, தர்மா, அந்நியன், சிவப்பு மார்க்சியன் ஆகியோரது கூட்டான பின்னூட்டம்.
கொழுவி,
எங்களின் கல்வெட்டுக்களிலும் ஏடுகளிலும் காணப்படும் வசனங்களை இச்சந்தர்ப்பத்தில் உங்களுடன் நினைவு கூருகின்றேன்.
'அமீபா என்பது எம்முன்னோர் தமக்கு தாமே வைத்துக் கொண்ட பெயராகும். அவர் பரவலாக அமீபா என்றே அழைக்கப்பட்டார். அவர் காடு, மேடு, இணையம், பார் எங்கும் அலைந்து திரிந்தார். அவரை தன்னால் எவ்விடத்திலும் பொருத்திக்கொள்ள முடியவில்லை. எல்லா இடங்களிலும் அவர் விட்டுச் சென்ற எச்சங்கள் காரணமாக, எம்மூதாதையரான தனித்த அமீபாவின் தன்னிலை இறுக்கம் கொள்ள எத்தனித்த நிலையில் அமீபா தன்னைத்தானே பிளந்துகொண்டார். அதில் இருந்து இருவகையானோர் தோற்றம் பெற்றனர். அவர்கள் நாளெல்லாம் தம்மீது படர்ந்திருந்த அமீபாவின் நிழல்களை உரிந்துகொண்டிருந்தனர். நிழல்களை உரிக்க உரிக்க அமீபாவின் நிழல்கள் தம்மீது கவிவதைக் கண்டு அச்சமுற்றனர். தம்மில் இருந்து அமீபாவின் வாசம் வருவதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அமீபாவின் நிழல்கள் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக கருத்த போர்வைகளை போர்த்தவாறு வெவ்வேறு வழிகளில் பிரிந்து சென்றனர். ஒருவர் மிகப்பெரும் புகையில் மாட்டிக் கொண்டு புகையின் வாசத்தை தனக்காக்கிக் கொண்டார். தனக்கு புகை எனப் பெயரைச் சூட்டிக் கொண்டார். மற்றவர் சுனாமியில் அகப்பட்டு, சுனாமியை நினைத்து சுனாமி என்ற பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டார்..
அவர்களால் அதே வாசத்துடனும், இயல்புகளுடனும், பெயருடனும் இறுதிவரை இருக்க்வே முடியவில்லை. அடையாளமற்று தாம் இருக்க முற்படும் போதெல்லாம் எதோ ஒருவிதமான அடையாளங்கள் தம்மீது சுமத்தப்பட்டுக் கொண்டே இருப்பதை அவர்கள் வெறுத்தார்கள். அடையாளம் இழந்து போகும்போதெல்லாம் போகும் இடங்களில் உள்ளது அவர்கள் தொடர்புபடுவதுமான அடையாளங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுக் கொண்டே இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல், தம்மைப் பிளந்து அடையாளமற்ற தன்னிலைகளை உருவாக்கி விட்டு கரைந்து மறைந்து போனார்கள். தமது மூதாதையான அமீபா உடைந்து தாம் இருவராகத் தோன்றியதை விரும்பாத இவர்கள் தம்மை ஒவ்வொருவரும் மூன்றாகப் பிளந்து கொண்டார்கள்.
சேகர், சுதன், சுதா, தர்மா, அந்நியன், சிவப்பு மார்க்சியன் ஆகிய ஆறு பேரும் தோன்றினார்கள். ஆயினும் எவரில் இருந்து யார் தோன்றினார்கள் என்பதை மறைத்துவிட்டே போனார்கள். எம்மீது சுமத்தப்பட்ட ஞாபகங்கள் கூட புகை, சுனாமி ஆகிய இருவரினதுமே. எம்மால் எம்மை வேறுபிரித்து அறிய முடியவில்லை. நம் எல்லோர் மீதும் புகையில் மணமும், சுனாமியின் பயங்கரமும் தெரிகின்றது. இந்த ஞாபகங்களை தொலைத்து ஓடிக்கொண்டிருக்கின்றோம். நாம் எம்மைச் சந்தித்துக் கொள்வதை தவிர்க்கின்றோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தளங்களில் உலாவித்திரிகின்றோம்.
ஆயினும், எமது மூதாதையான அமீபா தனது கட்டமைக்கப்பட்ட தன்னிலையை தாங்க முடியாது பிளந்த நாளில் எதேச்சதிகரமாக நாம் 6 பேரும் சந்தித்துக் கொள்கின்றோம். அமீபா எதற்காக தன்னைப் பிளந்து மறந்தாரோ, அவ்வுறுதியை நாமும் எடுத்துக் கொள்கின்றோம். நாம் தன்னிலைகள் இறுக்கமடைவதை விரும்பவில்லை. நாம் அடையாளமற்றவர்கள். எம்மீது அடையாளங்கள் சுமத்தப்படுவதை விரும்பவில்லை. ஒடுக்கப்படவர்கள் எல்லோருடனும் எம்மைத் தற்காலிகமாக எம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றோம். அது 'நிரந்தரமாக' இறுக்கம்பெறும் தருணத்தில் எம்மைப் பிளந்து மறைந்துவிடுவோம். அடையாளங்களைச் சுமப்பது எமக்கு மிகவும் வேதனை தருவதாயிருக்கிறது. ஆயினும் செல்லும் இடங்களின் மூலம் அடையாளங்கள் சுமத்தபடுவதை எம்மால் தவிர்க்க முடியவில்லை. அவ் அடையாளங்கள் இறுக்கம் பெறுவதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. நாம் ஒவ்வொரு முறையும் எம்மை அடையாள நீக்கம் செய்து கொள்கின்றோம். நாம் எம்மை ஒவ்வொரு முறையும் எம்மை அரசியல் நீக்கம் செய்து கொள்கின்றோம். நம்மை இடைகொரு முறை பால்நீக்கம் செய்து கொள்கின்றோம்.
அப்போது மட்டுமே, புதிய விடயங்களை புதிதாக அணுக முடிகின்றது. நிலைப்பட்ட விடயங்களும், தேங்கிக் கொண்டிருக்கும் அடையாளங்களும் அடிப்படைவாதத்தைத் தோற்றுவித்துவிடும் என்பதை நாம் அறிவோம். எமது முன்னோரான அமீபாவின் நோக்கம் அதாக இருந்தது எனக் கூறுகின்றார்கள்.
விரைவில் நாம் எம்மையும் பிளந்து கொள்வோம். நாம் யார் என்பது எமது பிளவுறும் தன்னிலைகளுக்கு தெரிந்துவிடக்கூடாதென்பதற்காக ஞாபகப்பரப்புக்களை அழித்துக்கொண்டேயிருக்கிறோம்.
எம்மைப்பற்றிய கட்டுக்கதைகளையும் புனைவுகளையும் அழிக்கும் நோக்கில் எமது முனோர்களான அமீபா, புகை, சுனாமி ஆகியோரை நினைவில் நிறுத்தியும்-அழித்தும் நாம் கூட்டாக இவ்விடயங்களை எல்லோருக்கும் தெரிவிக்க நினைத்தோம்.
நன்றி.
-சேகர், சுதன், சுதா, தர்மா, அந்நியன், சிவப்பு மார்க்சியன்
0 comments:
Post a Comment