தேசம்நெற் வலைத்தளத்தில் மீராபாரதி எழுதிய பதிவிற்கு சுதா அளித்த பின்னூட்டமும் அதனூடாக மீராபாரதியின் பதிவும் அதனூடான உரையாடலும்.
சாதிய விடுதலைக்கான முன்நிபந்தனை?
நம் அடையாளங்களுக்கு விடை கொடுத்தல்:
-மீராபாரதி-
இலண்டனில் 2008 ஆண்டு பெப்பிரவரி மாதம் 16 - 17 நதிகதிகளில் நடைபெறவுள்ள இரண்டாவது தலித் மாநாட்டிற்கான இந்த கட்டுரை எழுதப்படுகின்றது. துனிப்பட்ட காரணங்களினால் மாநாட்டில் பங்குபற்ற முடியாமையினால், இக் கட்டுரை மாநாட்டிற்கும் மற்றும் பிற சஞ்சிகைகளுக்கும் அனுப்பப்படுகின்றது. கட்டுரை எழுதியவர் தொடர்பான அறிமுகம் தேவையானவர்களுக்கு கட்டுரையின் இறுதியில் உள்ளது.
சுமூக, பொருளாதார விடுதலைப் போராட்டமோ அல்லது தேசிய விடுதலைப் போராட்டமோ சாதியின் பெயரால் அடக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையிலும் விடுதலையைப் பெற்றுத்தரப் போவதில்லை. இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆயுதங்தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சாதி விடுதலையை முன்னெடுத்து விடுவிக்கும் என்பதற்கான எந்த சாத்தியப் பாடுகளும் இல்லை. தேசிய விடுதலையையே பெற்றுத்தராது விடப்போகும் இன்றைய போராட்டமும் அதன் அணுகுமுறையும் சாதிய விடுதலையை பெற்றுத் தரும் என எவ்வாறு எதிர்பார்ப்பது. ஆகவே பல்வேறு வகைகளில் அடக்கப்படும் ஒவ்வொரு மனிதரும் தம் மீதான அடக்குமுறைகளை களைந்தெறிவதற்கு தமக்கமான பொருத்தமான வழிமுறைகளை முன்னெடுப்பது தவிர்க்க முடியாததே. இதனடிப்படையில் தலித் மாநாடு வரவேற்கத்தக்கதே.
உலகத்தில் இன மத மொழி சாதி பால்….என ஒவ்வொரு வகையிலும், பல்வேறு வகைகளில், அல்லது எல்லா வகைகளிலும் அடக்கப்படும் ஒவ்வொரு மனிதரும் விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க உரிமையுடையவர்களே. இவ்வாறான மாநாடுகள் சாதிக் கொடுமைகள் பற்றியும் அதன் அமைப்பு முறை செயற்பாடுகள் தொடர்பாகவும் மேலும் ஆழமாக அறிவதற்கும் பரப்புரை செய்வதற்கும் விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும். இதனடிப்படையில் தலித் மாநாடு வரவேற்கத்தக்கதே.
ஆனால் இச்செயற்பாடுகளின் மூலம் மட்டும் சாதி அடிப்படையில் அடக்கப்பட்ட மனிதர்கள் விடுதலை பெறுவார்களா? இதற்கு வழி செய்யுமா? இல்லை எனில் எது வழி? நாம், நமது சிந்தனைகள் செயற்பாடுகளை கடந்த காலங்களுடன் முறித்துக்கொண்டு புதிய சிந்தனைகள் புதிய பார்வைகளை நோக்கி நமது தேடல்களை விரிவுபடுத்த வேண்டிய தேவை இன்று உள்ளது. ஏனனில் மீண்டும் மீண்டும் நம் மீதான அடக்குமுறைகளை உடைத்து எறிவதற்கும் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கும் அடக்கு முறையாளர்களுக்கு எதிரான கருத்துகளை நிலைநாட்டுவதையும் வன்முறை செயற்பாடுகளையுமே இதுவரை எதிர் செயற்பாடாக முன்னெடுத்து வந்திருக்கின்றோம். இந்த முறைமையே காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இது எந்த வகையிலும் முன்னேறிய அல்லது சிறந்த சமூக அமைப்பை உருவாக்க தவறிவிட்டது என்பது நாம் காணும் ஒரு உண்மை. புரட்சிகள் பல நடந்த பல நாடுகளும் துமிழ் தேசிய விடுதலைப்போரட்டத்தின் இனறைய நிர்க்கதி நிலைமையும் இதை நிறுபிக்கின்றன.
மனிதர்கள் மீதான பல்வேறு வகை அடக்குமுறைகளான இன, மத, மொழி, சாதி, பால் அடக்குமுறைகளுக்கு முகங்கொடுக்கும் மனிதர்கள் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக வன்முறை செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு முதல், ஒவ்வொருவரும் தான் விடுதலை பெறுவதற்கும் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு தனது பங்கு பொறுப்பு என்ன என்று சிந்திப்பது உணர்வது மிக மிக முக்கியமானதும் அவசியமானதுமாகும். இதுவே கூட்டு முயற்சியின் அடிப்படையில் விடுதலை பெறுவதற்கு வழிவகுக்கும். அல்லது அடக்கப்படும் மனிதர்களின் விடுதலைக்காக ஒரு சிலர் போராடி விடுதலையை சுதந்திரத்தை பெற்றுத்தர முனைவர்.
இன்று தமிழ் மக்களை விடுதலை செய்ய புலிகள் உட்பட பல ஆயுதக் குழுக்கள் போராடுவதைப் போல் அதாவது மனிதர்களின் விடுதலைக்காக மனிதர்கள் போராடாமல் பிரதிநிதிகள் போராடுவது. இது ஒரு இறவல் விடுதலை அல்லது சுதந்திரம். இது முழுமையானதல்ல. ஏனனில் இந்த விடுதலை சட்டப் புத்தகங்களிலும் மற்றும் பெற்றுக் கொடுத்தவர்களின் வாக்கு வங்கிக்கான ஒரு துரும்பாக அல்லது அவர்களின் புகழைக் கூறும் ஒரு வாசகமாக வரலாற்றில் இடம்பெறும். ஆனால் இவ்வாறான ஒரு விடுதலையின் பின்பும் அடக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் அடிமை மனநிலையில் வாழ்வர்கள் என்தற்கான சாத்தியக் கூறுகளே அதிகம். ஏன்? இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
மனிதர்கள் மீதான ஒவ்வொரு அடக்கு முறைக்கும் மிக நீண்ட கால வரலாறுகள் உண்டு என்பது நாம் அறிந்தது. இவ்வாறான நீண்ட நெடிய கடினமான பயணத்தில் நமது இரத்தத்தில் மட்டுமல்ல எலும்பு மச்சைக்குள்ளும் கலந்துள்ளது நமது அடிமை வாழ்வு. இதிலிருந்து நமது அடக்குமுறையை அகற்றுவதே பெறும் பணி மட்டுமல்ல முக்கியமான பணி கூட. ஆகவே சட்டப் புத்தகத்தில் எழுதப்படும் விடுதலை அல்லது சுதந்திரம் ஒரு பகுதி வெற்றியே. இது தவிர்க்க முடியாததாயினும் முழுமையானதல்ல. ஆகவே முழுமையான விடுதலையை நோக்கி எவ்வாறு பயணிப்பது?
குறிப்பாக சாதிய அடக்குமுறை தொழில் சார்ந்து ஆதிக்க சக்திகளால் அடையாளப்படுத்தப்பட்டு தமது வாழ்வின் வசதிக்காக உருவாக்கப்பட்டது. இதனடிப்படையில் மனிதர்கள் மீது சுமத்தப்பட்ட அல்லது பச்சை குத்தப்பட்ட ஒரு அடையாளமே இந்த சாதி. இன்றும் சாதிய அடக்குமுறை காவிச் செல்லப்படுவதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று பரம்பரை தொழிலிலிருந்து விடுபடாமை அல்லது விடுபடமுடியாமை. இரண்டாவது பரம்பரை தொழிலிலிருந்து விடுபட்டாலும் நமது; சாதிய அடையாளத்தை விரும்பியோ விரும்பாமலோ விடமுடியாமை. இந்த இரண்டு காரணங்களையும் சாதியால் அடக்கப்பட்வர்கள் தம்மக்குள் ஆழமாக ஊடுருவியிருக்கும் வேரை தம்மிலிருந்து களைய முடியுமாயின் முழுமையான விடுதலைக்கான சுதந்திரத்திற்கான சாத்தியம் உண்டு.
புரம்பரை தொழில் தொடர்பாக இரண்டு கருத்துக்களை முன்வைக்கலாம். சுமூக இயக்கத்திற்கு மனிதரின் வழமான வாழ்வுக்கு நடைமுறைகளில் உள்ள பல்வேறு தொழில்கள் மிக முக்கியமானவை. ஆகவே தொழில்களுக்கு; எதிராக நமது பார்வையை திருப்பத் தேவையில்லை. முhறாக அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை கட்டாயமாக்குவது. ஆகக்குறைந்தது 12ம் வகுப்பு (மிகக் குறுகிய எதிர்காலத்தில் ஒரு துறை தொடர்பான பட்டப்படிப்பே ஆகக் குறைந்த தகுதியாக இருக்கும்) வரை கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்துவது. இது ஒரு தொழிலை (பரம்பரை தொழில் உட்பட) ஒரு மனிதர் தன் சுய விருப்பில் தெரிவு செய்வதற்கான தகுதியை வழங்குகின்றது. இதற்கான உரிமை ஒரு மனிதரின் அடிப்படை மனித உரிமை தொடர்பானது.
இரண்டாவது அனைத்து தொழில்களையும் குறிப்பாக தலித்துக்கள் எனப்படும் மனிதர்கள் செய்யும் தொழில்களாயினும் சரி பிற சாதிகள் எனப்படும் மனிதர்கள் செய்யும் தொழிலாயினுமு; சரி அனைத்துக்கும் சமூக அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். இவற்றுக்கு வழங்கப்படும் உயர்வான ஊதியம் இந்த மாற்றத்தை உருவாக்குவது மட்டுமல்ல இம் மனிதர்களின் வாழ்வு நிலையையும் இது மாற்றியமைக்கும். குறிப்பாக துப்பரவுத் தொழிலாளர்கள் வேலை செய்யாது விடுவார்களாயின் அதன் விளைவுகள் இன்றைய சூழலில் கற்பனை கூட செய்ய முடியாதளவு பயங்கரமானது. ஆகவே இது போன்ற தொழில்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். அதாவது பிற தொழில்களான முளை உழைப்புடன் சரி சமனாக கவனிக்கப்பட வேண்டும். இது உடல் உழைப்பாயினும் பிற உடல் அல்லது மன அல்லது முளை வேளைகளுடன் சரிசமமானது என்று ஏற்கும் மன நிலை வரவேண்டும்.
இன்று உலக சமூகம் நோக்கும் பல பிரச்சகைகளுக்கு அடிப்படையாகவும் முக்கியமானதாகவும் இருப்பது அடையாளம் சார்ந்த ஒருமைப்பாடும் அதன் விளைவாக உருவான முரண்பாடுகளும் பிரச்சனைகளுமே. இங்கு ஒரு மனிதரின் அடையாளம் எனக் கூறும்பொழுது இது இன, மத, மொழி, சாதி, நாடு, தேசம், பால், வர்க்க …. எனப் பல அடையாளங்களுடன் பிணைந்துள்ளது. கால நேர சூழ் நிலைக்கு ஏற்ப ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்கள் ஒரு மனிதருக்கு முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த அடையாளங்கள் அனைத்தும் மனிதராக பிறக்கும் ஒவ்வொருவருக்கும் இயற்கையாக இருந்ததல்ல. செயற்கையாக பலவந்தமாக சமூகத்தால் அதிகாரத்தில் இருந்தவர்களால் வழங்கப்பட்ட வகைகளே இந்த அடையாளங்கள். இந்த அடையாளங்களிலும் சிலவற்றை நாமாக வலிந்து ஏற்றுக்கொள்வது நாம் வாழும் சூழலுக்காகவும் வாழ்க்கையை தொடர்ந்தும் பிரச்சனைகள் முரண்பாடுகள் இல்லாது சமரசமாக வாழ்வதற்காகவும் இசைவாக்கமடைகின்றோம். இதனால் நன்மைகள் அதிகமாக கிடைக்கலாம். பாதிப்புகள் குறைவாக இருக்கலாம்.
ஆனால் சாதிய அடையாங்களைப் போன்ற அடக்கப்பட்ட அடையாளத்தை தொடர்ந்தும் நாம் கடைபிடிப்பது ஆதிக்க சாதிகளுக்கும், மனிதர்களுக்கும் நன்மையாகவும் அடக்கப்படும் சாதிகளுக்கும் மனிதர்களுக்கும் பாதகமாகவும் முடிகின்றது. ஆகவே அடக்கப்படும் சாதிகள் தமது அடையாளத்தை இழப்பது அல்லது தூக்கி ஏறிவது அல்லது அடியோடு வேருடன் அழிப்பதே ஒவ்வொருவரும் புதிய மனிதாராக பிறப்பதற்கு வழிவகுக்கும்.
இந்த அடிப்படையில் சாதியத்துக்கு எதிராகப் போராடும் நாம் தலித்துக்கள் என்ற டிப்படையில் இணைந்து செயற்படுவதை தவிர்த்து மனிதர்கள் என்ற அடிப்படையில் முன்நோக்கி செயற்படுவதே சாதிய அடையாளங்களை களைவதற்கு வழிவகுக்கும். அல்லது மீண்டும் மீண்டும் தலித்துக்கள் என்றும் வேறுபெயர்கள் கொண்டும் ஒன்றினைவது இருக்கின்ற சாதிய; அமைப்பைக் கட்டிக்காப்பதற்கு வழிவகுக்குமே அல்லாது மனிதர்களின் விடுதலைக்கு வழிவகுக்காது.
வுhழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நமது சாதிய அடையாளத்தை களைந்து மனிதர் என்ற அடையாளத்தை ஆணித்தரமாக உறுதியாக பயமின்றி துணிவுடன் முன்வைக்க வேண்டும். ஏனனில் நமது இயற்கை அடையாளமான மனிதர் என்பது மறக்கப்பட்டு மிக நீண்ட காலம் சென்றுவிட்டது. முதலில் நாம் மனிதர் என்பது உணரப்பட வேண்டும். மதிக்கப்பட வேண்டும். நூம் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் மனிதராக அடையாளங் கண்டு மதிப்போமாயின் இன்று நடைபெறும் பல பிரச்சனைகள் தாமாக இல்லாது போய்விடும். மொழி சார்ந்து அடையாளப்படுத்துவதற்கு மாறாக நாம் அறிந்த மொழிகளினுடாக உயர்ந்த இலக்கியங்கைளப் படைப்பதே எந்த மொழியையும் அழியவிடாது வரலாற்றில் உயர்ந்து நிற்க்கச் செய்யும்.
இதேபோல் மனிதர்களின் உடல் மனம் ஆன்மா என்பவற்றை ஒன்றினைத்து சுத்தமாக்கி மனிதரை மேன்மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல மேலும் பரிணாம வளர்ச்சியடைய வழி காட்ட வேண்டிய மதங்கள்; மதம் பிடித்து அலைவது மட்டுமல்ல மனிதரை மனிதர் கொன்று குவிப்பதற்கு வழிகாட்டுகின்றன. ஆகவே மத அடையாளங்கள் களையப்பட்டு ஒவ்வொரு மனிதரும் தமக்கான தனித்துவமான பாதைகளில் மேலும் பரிணாம வளர்ச்சியடைவதற்காக தாம் தெரிவு செய்யும் பாதையே ஒவ்வொருவரதும் ஆன்மீகப் பாதையாகும். இது இன்று நடைமுறையில் இருக்கும் மத வியாபார நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டதாக தொடர்பில்லாததாக இருக்கும். இந்த நிறுவனங்களும் மனிதர்களின் மத அடையாளத்தை வலியுத்துவது மனிதர்களின் மீதான அக்கறையினாலோ அல்லது நலன்களினாலோ அல்ல. முhறாக தமக்கான அங்கத்துவ எண்ணிக்கையை அதிகரித்து உறுதியான வியாபாரத்தை ஒழுங்காக நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்வதே. ஆகவே சாதிய அடையாளங்களைப் போல் மத அடையாளங்களும் மனிதர்களுக்கு பாதகமாகவே இருக்கின்றன.
நும்மை அடக்குமறைகளுக்கு உட்படுத்தும் சகல இன, மத, மொழி, சாதி, பால் அடையாளங்களை களைந்து மனிதர்களாக பரிணாமமடைவோம். இதுவே இன்றைய தேவை. நுமக்கு இன்று தேவை புதிய பார்வையும் புதிய செயற்பாடுகளும் புதிய பாதையுமே. கடந்த காலத்தில் வாழ்வதா, அல்லது நிகழ் காலத்தில் சுதந்திரமாக வாழ்ந்து, எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதா?
புழையன கழிதலும் புதியன வருதலும் இயற்கையின் நியதி. பழையதைக் கடைபிடிப்பதா புதியதை கண்டுபிடிப்பதா? தெரிவு நமது கைகளில். முதலில் நாம் மனிதர், இவ் உலகின் பிரiஐகள், என்ற அடைப்படையிலிருந்து இனிவரும் காலத்தை அணுகுவோம்.
சுதாவின் பின்னூட்டம்.
மீராபாரதி என்கின்ற அண்ணாவிற்கு,
தங்கள் கட்டுரையில் எனக்கு உடன்பாடில்லாத புள்ளிகளுடன் உங்களுடனான உரையாடலை ஆரம்பிக்கலாம் என உள்ளேன். நீங்கள் கடந்து வந்த கரடுமுரடான பாதை உங்களை இவ்வகையான ஆன்மீகரீதியான (மதரீதியான அல்ல.) தளத்துக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கலாம். ஆயினும் அவை மிகவும் விமர்சனபூர்வமாக அணுகப்பட வேண்டியவையே. சாதியம் தொடர்பாக எனக்கு பல்வேறு கருத்து நிலைப்பாடுகள் இருந்தாலும் அடையாளத்துடன் சாதியை நீங்கள் கொண்டு வந்து இணைக்கும் புள்ளி மிகவும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒன்றாகவே உள்ளது.
அடையாளம் மற்றும் சாதி தொடர்பாக உரையாடுவதற்கு முன், வி. சிவலிங்கம் அவர்களது ‘வடக்கு- கிழக்கை பிரிப்பதற்கான கோரிக்கை தமிழ் மக்களின் நலனுக்கு விரோதமானது’ என்ற கட்டுரையில் நான் இட்ட பின்னூட்டத்தில் இருந்த ஒரு குறிப்பை மீண்டும் குறிப்பிடுகிறென்.
//உதாரணமாக தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர் தான் உயர் சாதியை சேர்ந்த ஒருவரைப் போல இருக்க வேண்டும் என விரும்புதல் என்பதின் உளவியல் அவர் மீது சாதிய ஒடுக்குமுறை பிரயோக்கிக்கப்பட்டுள்ளது என்பதின் வெளிப்பாடாகும். ஒருவர் தனது அடையாளங்களையும் சுயத்தையும் பேணுவதற்கான விருப்பு எவ்வகையிலும் தடுக்கப்பட்டு விடக்கூடாதது. அதை இன்று சிலர் மிகவும் தவறாக அடையாளத்தை வலியுறுத்துதல் என்பதை தமது அரசியலாக உயர்த்திப் பிடிக்கின்றனர். அடையாளத்தை இறுக்கமாக வலியுறுத்தல் என்பது இன்னொரு வகையில் அடிப்படைவாத மனநிலைக்குள் ஒருவரைக் குறுக்குவதாக அமைந்து விடவும் வாய்ப்புள்ளது. அதன் முடிவும் வன்முறையே.// எனக் கூறியிருந்தேன்.
அடையாளம் என்பதின் பின்னாலுள்ள அரசியல் என்பதே இக்காலப் பகுதிய முக்கிய பிரச்சனையாகும். இரு விதமான தத்துவ வெளிகளுக்குள் கருத்துக்கள் நசிபடும் காலம் இது.
1. அடையாள வலிதாக்கம் தொடர்பானாது.
2. அடையாளத்தை முற்றாக மறுத்தல் என்பதுடன் தொடர்பானது
இவை இரண்டுமே அடிப்படையில் தவறென்று கருத்தியல் நிலைப்பாட்டையே என்னால் எடுக்க கூடியதாக உள்ளது.
அடையாள வலிதாக்கங்களை இலகுவாக அடிப்படைவாத மனநிலை எனச் சொல்லி நிராகரித்து விட முடியாது. அடையாளங்கள் எந்நிலையில் வலிதாக்கம் பெற ஆரம்பிக்கின்றன? எவ்வாறான வழிகளில் அவை அடையாள வலிதாக்கத்தைச் செயின்றன? போன்ற பல கேள்விகளுக் கூடாக நாம் இதை ஆராய வேண்டும். உதாரணமாக இஸ்லாமிய மக்களின் அடையாளப் பேணுகை தொடர்பாக மேற்கு நாடுகள் பலவிதமான விமர்சனங்களை முன்வைக்கின்றன. அத்துடன் அவற்றை அடிப்படை வாதம் என மிகவும் கேவலமாக ஒதுக்கித் தள்ளுகின்றன. இஸ்லாமிய மக்களது மத அடையாளங்கள் மறுக்கப்படுகின்றன என்ற உணர்வுருவாக்கமே அவர்கள் அதை வலிமையாகப் பற்றி நிற்பதற்கான உந்து சக்தியாக உள்ளது. வலிதாக்கத்தை உருவாக்கியது மட்டுமன்றி அடிப்படைவாத மனநிலைக்கு இட்டுச் செல்ல ஏதுவாக நின்ற காரணியாகக் கூட இஸ்லாமிய நிராகரிப்பைக் கொள்ளலாம். இவ்விடத்தில் அடிப்படைவாதத சார்பு நிலையில் இருந்து எனது உரையாடல் அமையவில்லை. மாறாக அதன் உருவாக்கத்தில் ‘மற்றையதன்’ பங்கு பற்றியதாகவே அமைகின்றது.
முற்றான அடையாள மறுப்பு என்பது ‘கட்டற்ற மனநிலை’ என்ற வன்முறையற்ற ஆன்மீக அனுபவத்தைச் சாத்தியமாக்கும் போதிலும், இன்றைய நிலையில் எமது ஆதிக்க சக்தியின் அடையாளங்கள் எம்மீது திணிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களை கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. உதாரண்மாக ஆங்கிலம் என்னும் மொழியால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் பல்வேறு மொழிகளை சொல்லலாம்.
இவ்வகையில் எம்முன் உள்ள கேள்வி என்னவென்றால் அடையாளங்களை மறுக்கும் மனநிலையை சாத்தியமாக்கும் தருணத்தில் எம்மீது இயல்பாகவே சுமத்தப்படும் அடையாளங்கள் தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன? நீங்கள் கூறலாம் எமக்குள் நாம் அடையாளங்களைத் துறந்துவிட்டோம். அடையாள மனநிலையை துறந்ததன் பிற்பாடு எதற்கு அடையாளம் பற்றிய கவலை என.
ஆயினும் அது கருத்தியலானது என்றவகையில் பிற்போக்கான வடிவத்தை எடுக்க கூடியதே. இயல்பாகவே சுமத்தப்படும் ஆங்கிலம் போன்ற மொழிகளை எம்மால் தவிர்க்க முடியாது. இன்னொமொரு வகையில் பார்த்தால் ஆதிக்க சக்தியின் அடையாளங்கள் நிலைபெறுதலும் ஒடுக்கப்பட்டோரின் அடையாளங்கள் மறுக்கப்படுதலும் என்ற நிலையைச் சாத்தியமாக்கிவிடும் அபாயம் இருக்கின்றது. எண்ணற்ற விளிம்புகள் மையங்களால் விழுங்கப்பட்டுக் கொண்டே இருக்கும் முடிவற்று. மையங்கள் இன்னு மின்னும் வலிமை பெற விளிம்புகள் அழிக்கப்படுதல் என்பதை வன்முறையற்ற நிலைமை என உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?
மேற்கூறிய இரு தளங்களுக்கு இடையி வைத்து எவ்வாறு இதைப் பார்க்கப் போகின்றோம் என்பது தான் எம்முன் உள்ள கேள்வி. அடையாள வலிதாக்கமா? அல்லது அடையாள மறுப்பா?
இவ்விடத்தில் இரண்டுமாக இருத்தல் என்பதாகவே எனது கருத்து உள்ளது. மேற்கூறிய நிலைப்பாட்டில் இரு வகையான முடிவுகளும், அவற்றுடன் தம்மை அடையாளப்படுத்தும் சாராரையும் பிழையான தளத்துக்கு இட்டும் செல்லும் என்பது எனது நிலைப்பாடு. தத்துவத் தளத்தில் இவை பற்றிய விவாதங்கள் இன்னும் முடிந்தபாடாயில்லை. மாறாக அவை இன்று உச்சம் பெற்றுள்ளன என்று கூறலாம்.
பலவகையான பிருவுகைஅக் கொண்டுள்ள பின்னவீனத்துவ பரப்பில் பூக்கோவினது தத்துவ மரபில் வருவோர் அடையாள மறுப்பு மற்றும் அடையாளமழிப்பு போன்ற கருத்தியலை முன்வைக்கின்றனர். ஜூடித் பட்லரின் பால் மற்றும் அடையாளம் தொடர்பான கருத்துக்கள் முக்கியமானவை. பால் என்ற வகை மாதிரிக்குள் Biological அடையாளம் தவிர்த்து மற்றய எவ்வகைக்குள்ளும் ஆண், பெண் என்ற கருத்தியலை கட்டமைக்கவே முடியாது என்பது அவரது வாதம்.
ஆயினும், மார்க்சியமும் பின்னவீனத்துவமும் ஒன்றுபடும் புள்ளிகளில் இருந்தும் அவற்றிற்கு அண்மையில் இருந்தும் சமூக ஆய்வுகளைச் செய்பவர்கள் முற்றான அடையாளமழிப்பு என்ற விடயத்தை முற்றாக மறுக்கிறார்கள். அவ்வகையான கருத்தியல் வளர்ச்சி ஆதிக்க சக்திகளது சுரண்டலை இன்னுமின்னும் ஊக்குவிக்க காரணமாக அமைந்துவிடும் என்பது அவர்கள் வாதம். என்னைப் பொறுத்தவரை அடையாளமழிப்புகளின் தேவை மிகமுக்கியமானது என்ற போதிலும் அவற்றிற்கான காலம் இன்னும் வரவில்லை.
நாம் இன்னும் தேசியவாத்தை நிராகரிக்கும் காலத்துக்கே வரவில்லை என்ற நிலையில், அடையாளமழிப்புகளை நோக்கி நகருதல் என்பது அவ்வளவு உடன்பாடானவை அல்ல. (தேசியவாத்தைன் தேவைப்பாடு இன்னும் உள்ளது. அப்படி இல்லை என்று சொல்பவர்கள் கருத்து முதல்வாதிகளே. தேசியவாத்தை எவ்வளவுக்கு எவ்வளவு எம்மில் இருந்து விரைவில் உதிர்க்கிறோமே அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.)
இன்னும், சாதியத்துடன் அடையாளத்தை இணைத்துப் பர்க்கும் நிலையிலும் நான் மேற்சொன்ன விடயங்கள் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன். தலித் மாநாட்டுக்கான தேவை எம்முன் இன்றும் உள்ளது. ஆயினும் சுகன் போன்றோர் சொல்வது போன்று தனியே தலித்துக்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதில் உடன்பட முடியாது. ஒருவகைக் குறுகலைச் சாத்தியப்படுத்தி அடிப்படைவாத மனநிலைக்கு இட்டுச் சென்றுவிடும் என்பதே எனது நிலைப்பாடு. அது உண்மையான சாதிய விடுதலையைச் சாத்தியமாக்காமல், வெறும் உணர்வுத் தளத்தில் சாதிய அரசியலைக் குறுக்கிவிடும் பேராபாத்தை தன்னகத்தே கொண்டிருக்கிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் எவ்வாறு தனியே இனம் சார்ந்த பார்வைக்குள் குறுகியதோ அவ்வாறான நிலைமையை மட்டுமே சாத்துயமாக்கும். மாநாட்டுக்கு சமாந்தரமாக செயற்பாட்டு தளத்தை விரிவுபடுத்தத் தவறினால், ஒரு கட்டத்தில் மத வழிபாட்டு தளத்திற்கு சாதிய விடுதலையை இட்டுச் சென்று அதுவே கடையில் சாதிய ஒடுக்குமுறையை ஊக்குவிக்கும் காரணியாக அமைந்துவிடும். (எமது போராட்டத்துடன் இணைத்துப் பார்க்கவும்.)
//ஆனால் சாதிய அடையாங்களைப் போன்ற அடக்கப்பட்ட அடையாளத்தை தொடர்ந்தும் நாம் கடைபிடிப்பது ஆதிக்க சாதிகளுக்கும், மனிதர்களுக்கும் நன்மையாகவும் அடக்கப்படும் சாதிகளுக்கும் மனிதர்களுக்கும் பாதகமாகவும் முடிகின்றது. ஆகவே அடக்கப்படும் சாதிகள் தமது அடையாளத்தை இழப்பது அல்லது தூக்கி ஏறிவது அல்லது அடியோடு வேருடன் அழிப்பதே ஒவ்வொருவரும் புதிய மனிதாராக பிறப்பதற்கு வழிவகுக்கும்.// என்ற உங்களது கருத்து மிகவும் வன்முறையாக உள்ளது.
நீங்கள் கூறும் புதிய மனிதர் ஆதிக்க சக்தியைப் போல இருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்களா? தமது ‘இயல்பை’ இழக்க சொல்லிக் கேட்பது எவ்வளவு வன்முறையானது. சிங்கள பேரினவாதமும் இதைத் தானே சொல்கின்றது. இலங்கையர் என்ற அடையாளங்களுடன் வாருங்கள். தமிழ் அடையாளத்தை அழியுங்கள் என. ஆனால், இலங்கை என்பது சிங்கள அடையாளத்துடன் இருக்கும். நீங்கள் அடையாளமழிப்பை இவ்வாறு சொல்வது மிகவும் தவறு எனவே நான் நினைக்கின்றேன்.
இன்று, புத்தமதம் போன்றவற்றை மத அடையாளமாக முன்னிறுத்தி பின்னவீனத்துவத்தை தத்துவ பின்பலமாக கொண்டு தமிழ்நாட்டில் நடைபெறும் சாதிய விடுதலை அரசியலில் இருந்து கற்றுக்கொண்டு, சிலவற்றை தவிர்த்தும் சிலவற்றை உள்வாங்கியும் நாம் செல்ல வேண்டி உள்ளது. இருக்கின்ற மதங்களுக்குள் பௌத்தமத்தையே முற்போக்கான மதமாக கொள்ளலாம். (பௌத்த மதம் என்ற பொதுமைக்கு மன்னிக்கவும். பௌத்த தத்துவவியலையே முதன்மைப்படுத்த எத்தனிக்கின்றேன்.)
அடையாளமழிப்பு என்ற கருத்தியலைக் கொண்டது என்ற வகையில் அது அடையாளங்கள் மூலம் உருவாகும் வன்முறைகளை நிராகரிக்கின்றது. (Self is construction என்க்கூறுகிறது பௌத்தம்). அவ்வகையில் சுயஅடையாள உருவாக்கம் என்பதே கட்டமைக்கப்பட்டது எனக்கூறுகின்ற பௌத்தம் இருக்கும் சுயம் அழிவதற்கான தற்காலிக படிநிலைகளை ஆதரிக்கினறது. அவ்வகையில் அண்ணா நாங்கள் கட்டம் கட்டமாகவே நகரவேண்டி உள்ளது. உரையாடல் தொடரும் பட்சத்தில் இதை இன்னும் தொடர்வோம்.
பி.கு- எனக்கு 5, 6 வயாதாயிருக்கும் போது சந்தித்த பாரதி அண்ணாவை எனது வாழ்க்கையில் இன்றைக்கு தான் சந்திக்கின்றேன். எனது மாமாவுடன் வீட்டுக்கு வரும் பாரதி அண்ணா என்னுடன் ஓரிரு வார்த்தைகள் பேசியிருக்க கூடும். இன்றும் அவரது முகம் ஞாபகம் இருக்கினறது. கதைவழி, செவிவழியாக எனக்கு தெரிந்த பாரதி அண்ணனை இன்று தேசத்தில் சந்திக்கின்றேன். ஏனோ தெரியவில்லை உங்களை அப்போதிலிருந்து எனக்கு பிடிக்கும் என்பதற்கு 18 வருட ஞாபகங்களும் என்றும் அழியாமல் நிக்கும் உங்கள் பெயரும் முகமுமே சாட்சி. தேசத்திற்கு எனது நன்றிகள்.
சுதா
ஆதிக்க சக்திகளினதும் அடக்கப்பட்ட சக்திகளினதும் அடையாளமும் இயல்பும் சுய அடையாள அழிப்பே: மீராபாரதி
தேசம் மின்வலை இதழில் வெளியான எனது சாதியம் தொடர்பான கட்டுரைக்கு வெளியான கருத்துக்களுக்கான எனது பதில் கருத்துக்கள்.
எது நமது அடையாளம்?
ஓரு மனிதர் பிறந்தவுடன் சமூகமும் குடும்பமும் தமது அடையாளங்களை அதிகாரமாகவும் வன்முறையாகவும் குறிப்பிட்ட மனிதர் மீது திணிக்கின்றனர். இவ்வாறு ஐனநாயகமே இல்லாது நம் மீது திணிக்கப்பட்டது தான் நமது இன, மத, மொழி, சாதி, பால் ….அடையாளங்கள். இந்த அடையாளங்களை துறப்பதில் தயக்கம் ஏன்? இவ்வாறான அடையாளங்களை இழக்கக் கூறுவது எவ்வாறு வன்முறையாகும்?
இந்த அடையாளங்களுடன் பிரங்ஞையற்று நாம் ஒன்றித்து பற்றுதலுடன் இணைந்து வாழ்வதே இதலிருந்து வெளியேற முடியாமைக்காண காரணம். இதை நாம் புரிந்து கொண்டு வாழ்வது என்பது மனித வாழ்வின் முன்னேறிய ஒரு படி எனக் கூறலாம். மேலும் பழைய தேவையற்ற பிற்போக்கான அடையாளங்களை இழந்து புதிய அடையாளங்களை ஏற்றுக்கொள்வது அல்லது சாதராண மனித அடையாளத்துடன் வாழ்வது மனித வாழ்வின் மேலும் முன்னேறிய ஒரு படியாகும் என்றால் மிகையல்ல.
ஆகவே நமது உண்மையான இயல்பான அடையாளம் என்ன?
உதாரணமாக ஆண் பெண் என்பது உடலியல் சார்ந்த அடையாளம். இது மனித அடையாளத்தின் ஒரு பகுதியே. மறுபகுதி நமது உடலில் உருவாகும் இரசான கலவையினால் ஏற்படும் உணர்வு சார்ந்தது. அதாவது ஆண்மை பெண்மை என்ற கருத்தியல். ஒரு மனிதருக்கு ஆண் குறி இருப்பதால் உடலளவில் ஆனாக இருக்கலாம். ஆனால் ஆண்மைத்தன்மை கொண்டவராகத்தான் இருக்க வேண்டும் என உறுதியான கூறமுடியாது. இது பெண் குறி கொண்ட ஒரு மனிதருக்கும் பொருத்தமானதாகும்.
இது ஒருவரது உள் உடல் உறுப்பு மற்றும் இரசாயண தாக்கம் சார்ந்தது. இந்தக் கருத்தியலானது நமது வழமையான ஆண்மை பெண்மை என்ற பதங்களை ஆணுடனும் பெண்ணுடனும் அடையாளப்படுத்துவதை கேள்விக்குள்ளாக்கின்றது. இதைப் புரிந்து கொள்வதற்கு எவ்வளவு காலங்கள் நம் வாழ்க்கையில் சென்றிருக்கின்றன. இதுபோன்று மேலும பல புற அல்லது விளிம்பு நிலை அடையாளங்கள் சமூகத்தினால் நமக்கு அதிகாரத்துவத்தினுடாக வழங்கப்பட்டவையே. இதை நமது அடையாளம் என தவறாக எண்ணிக்கொண்டு நாம் வாழ்கின்றோம்.
ஒருவர் தனது அடையாளமாக எதைப்பேணுவது எதைத் தடுக்கக்கூடாது.?
முதலில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு எந்தவகையான அடையாளப்படுத்தல்களும் நிறுத்தப்படல் வேண்டும். பெற்றோர்களதும் சமூகத்தினதும் பொறுப்பானது குழந்தை ஆரோக்கியமான வளர்கின்றதா என்பதைக் கவனிப்பதும், பாதுகாப்பதும், அன்பும், ஆதரவும் அளிப்பதே. ஆரோக்கியமாக வளரும் குழந்தைக்கு நமது சமூகத்தின் பல்வேறு அடையாளங்கள் தொடர்பாக சிறிது சிறிதாக படிப்படியாக விளக்குவது அறிமுகப்படுத்துவது. தொடர்ந்து குழந்தை தெரிவு செய்வதை ஏற்பது. இதுவே உண்மையான ஐனநாயக தன்மையுள்ள சமூகமாகும். ஆனால் தூரதிர்ஸ்டவசமாக நாம் வாழும் சமூகம் வன்முறையால் உருவாக்கப்பட்ட அடையாளத்துவ சமூகம்.
ஆடையாள வலித்தாக்கம் என்ற காரணத்தினால் “மற்றையதன் பங்கு” விரிக்கும் விலக்குள் நாம் விழ்ந்துவிடுகின்றோம். இது எந்த வகையில் சரியானதாகும். நியாயமானதாகும். இது நமது பிரக்ஞையற்றதன் விளைவு.
இஸ்லாமிய மக்கள் அல்லது தமிழ் மக்கள், சாதியால் அடக்கப்பட்ட மக்கள் மற்றும் இவர்களைப் போன்ற அடக்கப்பட்ட அடையாளம் மறுக்கப்பட்ட மக்கள். இந்த “மற்றயதன் பங்கு” விரித்த விலக்குள் விழ்ந்தவர்களே. இதனால் நமது அடையாளத்தை உயர்ந்திப் பிடிக்க வேண்டும் என்பது நடைமுறையில் சரியானது போல் தோன்றும். ஆனால் இது ஒரு எதிர் செயற்பாடு நடவடிககை மட்டுமே. முற்றாக ஆரோக்கியமான முற்போக்கான வழியில் முன்செலுத்தப்படவில்லை.
எந்த அடையாளத்தை அடக்குபவர்கள் மறுக்கின்றனர்?
அடக்கப்படுபவர்கள் தமது சுய அடையாளத்தை வெளிப்படுத்தும் பொழுதே அடக்கப்படுவர்களுக்கு பிரச்னை வருகின்றது. இவ்வாறன சுய அடையாள உருவாக்கத்தை அடக்குவர்கள் மட்டுமல்ல சமூகமும் மறுக்கின்றது. இது அவர்களை பயமுறுத்துகின்றது. முற்றாக சமூக அடையாளங்களில் ஒன்றைப் பின்பற்றி ஏற்கும் பொழுது சமூகத்திற்கு அல்லது அடக்குபவர்களுக்கு முரண்பாடாக தெரிவதில்லை.
நமது அடையாளம் தொடர்பான நமது கேள்விகள் என்ன?
இதை நாம் ஒருபோதும் கேட்டதில்லை. கரணம் நமது அடையாளங்களுடன் நமக்கிருக்கும் பற்றுதலே. புதிய மனிதர் மனிதராகவே இருக்க வேண்டும். அவர்கள் போன்றோ அல்லது இவர்கள் போன்றோ இருக்க வேண்டும் என்பதல்ல. இழக்க வேண்டியது நமது புற விளிம்பு நிலை இயலபை அடையாளங்களை. ஆதிக்க சக்திகளினது அடையாளமும் இயல்பும் அடக்கப்பட்ட சக்திகளினது அடையாளமும் இயல்பும் இரு சுய அடையாள அழிப்பு கிணறுகள். ஓரு கிணற்றிலிருந்து வெளிவருவது மறு கிணற்றில் விழ்வதற்காக அல்ல.
முற்றாக செயற்கையாக உருவாக்கப்பட்ட எந்த ஒரு அடையாளம் என்ற கிணற்றிலும் விழாமல் சுய அடையாளத்துடன் வாழ்வதே. இது ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமானது. புல்வேறு மனிதர்களுடன் இணைந்து புதிய அடையாளத்தை உருவாக்குவதோ அல்லது பெறுவதோ அவரவர் தனி மனித உரிமை சார்ந்தது. நமது வாழ்வில் அடையாளங்கள் நம்மீது திணக்கப்பட்டன. இதுவே வன்முறையானது. இதனால் தான் நாமும் வன்முறையாளர்களாக வன்முறை மீது நாட்டம் கொண்டவர்களாக இருக்கின்றோம். ஆடக்குபவர்களும் சரி அடக்கப்பட்டவர்களும் சரி ( சிங்களம் தமிழ் இனம் சாதி பால் ) அனைவரும் செயற்கையாக உருவாக்கப்பட்ட வன்முறையால் நம் மீது திணிக்கப்பட்ட அடையாளங்களின் அடிமைகள். இதை நாம் அறியாது வாழ்வதே நமது சாபக்கேடு.
ஆடையாள மறுப்பு அல்ல அடையாள மீள்ருவாக்கம் மற்றும் புது உருவாக்கம் என்ற பதமே சரியானது ஆக இருக்கும்.
நாம் பிரங்கையற்று இருக்கும் நிலையில் நம் மீது நமக்கு அதிகாரம் இல்லாதிருக்கும் நிலையில் ஆதிக்க சக்திகளால் இயல்பாக மறு அடையாளத்தை திணிக்கலாம்.
ஆடிப்படையில் இயற்கையான இயல்பான மனித அடையாளத்தை நாம் நம்மில் இனங் கண்டு அதிலிருந்து நமது புறக் அடையாளக் கட்டுமானங்களை நாமே உருவாக்குவதை நோக்கிச் செல்லாம். ஆடையாளங்களுடன் பிரச்சனைகள் முரண்பாடுகள் உருவாகும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நமது அடிப்படையானதும் இயற்கையானதும் இயல்பானதுமான அடையாளத்திற்கு நாம் மீள மீள வரவேண்டும். இதிலிருந்தே புற அடையாள கட்டுமானங்களை மீள மீள வரையறை செய்ய வேண்டும். ஆனால் இதற்கு மாறாக இன்று நாம் புற அடையாளக் கட்டுமானங்களுடன் நமமை அடையாளங் காணுவது மட்டுமல்ல அதுவே இயல்பானது இயற்கையானது என்று எண்ணும் கருத்தியலே ஆபத்தானது. இதனால்தான் மனித இனம் தனது சுய அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.
நாம் மையங்களாக நமக்கு செயற்படும் பொழுது வெளி மையங்கள நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது. மேலும் நமது மையங்களிலுpருந்து கொண்டுதான் நமது எண்ணற்ற விழிம்புகளை பிரக்ஞையுடன் நாம் மீள மீள வரையறை அல்லது தெரிவு செய்வேண்டும். துரதிர்ஸ்டவசமாக நாம் இன்று, நாம் நமது மையங்களில் இல்லை. இதனால் நம்மீது நமக்கு அதிகாரம் இல்லை. ஆகNவு வெளிமையங்களின் அதிகாரங்களுக்கும் தாக்கங்களுக்கும் இயல்பாக விட்டுக்கொடுக்கின்றோம். ஆல்லது நம்மை நாம் என நாம் அடையாளங்காணும் நமது விளிம்புகளின் அடையாளமான நமக்கு சொந்தமில்லாத அடையாளத்தின் உரிமைக்காக போராடுகின்றோம். இதுவே இன்று இஸ்லாமிய மக்களும் தமிழ் மக்களும் முன்னேடுக்கும் தவறான கருத்தியலும் செயற்பாட்டு நிலையும் ஆகும். இதனால்தான் அடக்குபவர்கள் உருவாக்கிய சதி வலைக்குள் அடக்கப்படுபவர்கள் விழ்ந்து விடுகின்றனர்.
ஆகவே நாம் நமது சரியான பாதையை இரண்டு கருத்தாக்கங்களான அடையான வலிதாக்கம் மற்றும் அடையாள மறுப்பு என்பதற்கு அப்பாற்பட்டு செல்ல வேண்டும். உருவாக்க வேண்டும்.
கட்டற்ற மனநிலை எனக் கூறுவது எதிர் மறையான கருத்தை முன்வைக்கும் மாறாக பிரக்ஞை மனநிலை என்பதே எதிர்காலத்தில் அல்ல தற்பொழுதிருந்து கடைபிடிக்க வேண்டியது.
கெதம சித்தார்த்தர் என்ற புத்தர் உருவாக்கிய உள்நோக்கிய விஞ்ஞான ஆணுகுமுறை எந்த வகையிலும் இன்றைய பௌத்த மதத்துடன் இனைத்துப் பார்க்க முடியாது. பௌத்த மதம் பிற மதங்களைப் போன்று இவர்களும் மத வியாபாரம் செய்கின்றனர். சித்தாத்தரைப் பொறுத்தவரை நாம் ஒவ்வொருவரும் புத்தராக மாறுவதற்கான தகுதி உடையவர்கள். இன்றைய நமது நம் அடையாளங்கள் மீதான பற்று மற்றும் மன நோய் என்பவற்றிலிருந்து வெளிவருவதற்கும் நமது மையத்தை கண்டு அதில் உறுதியான நிலைபெற்று வாழ்வதற்கும்; இவரது பாதையே இன்று காணப்படும் வன்முறையற்ற பொருத்தமான மருந்து அல்லது பாதை.
ஒரு அடக்குமுறையை எதிர்ப்பதற்காக பாதகமான ஆரோக்கியமற்ற வழிகளில் செல்வதா?
நிரத்திரமில்லாத ஒரு நிலைப்பாடு என்றிந்த பின்பும் தொடர்வது ஏன்?
நமக்குள் இருக்கும் சாதிய அடையாளத்தை இனங்கண்டு களைந்து முன்செல்வதே தேவையானது.
இதுவே சாதியமைப்பை அதன் கருத்தியலை அழிப்பதற்கான வழிமுறை. முற்றாக அடக்குபவர்களின் நடவடிக்கைக்கு எதிர் நடவடிக்கை எடுப்பது அவர்களது சதிவலைக்குள விழ்வதற்கு சமம்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பல குழுக்களாலும் அமைப்புக்களாலம் முன்னெடுக்கப்பட்டது. அனைவரும் மக்களின் ஆதரவு என்ற அடித்தளத்திலிருந்து தான் ஆரம்பித்தார்கள். காலப்போக்கில் அவ்வவ் அமைப்புகளினது; குழுக்களினதும் கருத்தியலுக்கு ஏற்ப பல்வேறு திசைகளில் செயற்படுகின்றனர். விடுதலைப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது என்பது கேள்விக்குரியது. காரணம் இது ஒரு மக்கள் போராட்டமல்ல. மக்களின் விடுதலைக்காக மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அல்லது மக்களின் கருத்துகளை கவனத்தில் கொள்ளத்தவறி, மனித உரிமைகளை மறுத்து ஒரு குழு மக்களுக்காகப் போராடுகின்றது எனக் கூறுகின்றது. விளைவு மனித இழப்புகளும். மனநோய்க்குள்ளாகும்; குழந்தைகளும் மனிதர்களும் மற்றும் வீணாகப்போகும் விளை நிலங்களும் நாம் காண்பது. விடுதலைக்கான எந்தவிதமான நம்பிக்கை கீற்றும் தெரிவதாக இல்லை.
ஏல்லா அமைப்புகளிலும் குழுக்களிலும் விடுதலை என்பது அவர்களது பெயர்களிலில் தான் இருக்கின்றது. அனைவரும் தமது நிதி நியாயங்களை முன்வைத்து செயற்படுகின்றனர். ஒரு தளத்தில் இருந்து ஒருவர் செயற்படுவதால் அவர் சரி என்றோ மறு தளத்திலிருந்து ஒருவர் செயற்படுவதால் பிழை என்றோ பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் அவர்கள் சரி என்றோ சிறுபான்மை ஆதரவு இருப்பதால் பிழை என்பதோ கேள்விக்குரியது. வுரலாற்றில் எப்பொழுதும் உண்மையைக் கூறியவர்கள் ஒருவராகவோ சிறுபான்மையாகவோ தான் இருந்திருக்கின்றனர். பெரும்பான்மை பெரும்பாலும் இதை நிராகரித்தே வந்திருக்கின்றமை நாம் வரலாற்றில் காணும் ஒரு கசப்பான உண்மை. பெரும்பான்மை இந்த உண்மையை ஏற்கும் (ஏற்க வேண்டியது வரலாற்று நிர்ப்பந்தம்) நேரத்தில் உண்மை இன்னுமொரு கட்டத்தில் இருக்கும். மீண்டும் பழைய நிலை.
மேலும் தேசியத்தை நம்மிலிருந்து உதிர்க்க வேண்டிய தேவை இருக்கின்றது எனின் உடனடியான அதை உதிர்ப்பதே பொருத்தமானதும் நன்மையானதும் ஆகும். வுன்முறை மற்றும் நாகரிகமற்ற வாழ்வியல் என்பதன் அடிப்படையில் தேசியத்தை முன்னெடுப்பது அழிவை நோக்கியே செல்லும். இது நாம் இன்று காணும் ஒரு உண்மை. இது தீர்வை மட்டும் நோக்கிச் செல்லாது.
தேசியமே கருத்தின் அடிப்படையில் உருவானதே. இதை எதிர்ப்பவர்களில் இருசாரரும் இருக்கலாம். தேசியம் என்ற கட்டமைக்கப்பட்ட கட்டுமானத்தை எதிர்ப்பதை எவ்வாறு கருத்து முதல் வாதிகளா இருக்க முடியும். ஏனனில் தேசியமே அடிப்படையில் ஒரு கருத்தியல் வாதமே. கருத்தியல் வாதம் சரியானதா அல்லது பொருள் முதல் வாதம் சரியானதா என்பது வாதமே அல்ல. முhறாக அனைத்து வாதங்களும் வாழ்வின் ஒவ்வொரு கால கட்டத்திலும் கேள்விக்கு உள்படுத்தப்பட வேண்டும்.
இங்கு நமது பழமையான பொருள்முதல் வாதத்தையும் கேள்விகு உள்ளாக்க வேண்டும். காரணம் இன்று வெளிநோக்கிய விஞ்ஞானத்தின் வளர்ச்சியல் கண்டுபிடிப்பில் முன்வைக்கப்படும் பருப் பொருள் சக்தி பரிமாற்றம் நிலையற்றது மாறும் தன்மையானது என்ற கருத்து. அதாவது வெளிநோக்கிய விஞ்ஞானம் நாம் இதுவரை நிராகரித்த அனைத்தும் சக்தி என்ற உள்நோக்கிய விஞ்ஞானத்தின் அனுவ அறிவான கடந்தகால கருத்தியல்வாத நிலைக்கு அருகில் வந்திருப்பது கவனிக்கப்பட வேண்டியது.
இதனால் கடந்தகால கருத்தியல்வாதம் முன்வைத்த அனைத்து சரியானது என்பதல்ல வாதம். அதேபோல் கடந்த கால பொருள்முதல் வாதம் முன்வைத்தவை எல்லாம் சரியானவையோ அல்லது பிழையானவையே என்பதல்ல. நமது மன அறிவு மட்டுப்படுத்தப்பட்டது. இதற்குள் சூழன்று உண்மையைக் கண்டுபிடிக்க முனைவது சொற்களுடனும் தர்க்கத்துடனும் நடத்தும் மட்டுப்படுத்தப்பட்ட விளையாட்டு மட்டுமே. ஊண்மையை நோக்கிய பயணத்திற்கு இருவிதமான விஞ்ஞான அணுகுமுறைகளும் பின்பற்றப்படுவதே சரியானதாகும். ஏனனில இது மட்டுப்படுத்தப்படாத விரிந்த அகன்ற பார்வையை பாதையை நமக்குத் தருகின்றது.
மன்னிக்க வேண்டும். மேற்குலகின் சமூக காரணங்கள் தமிழரின் சாதிய உணர்வை கருத்தியலை நீர்த்துப் போக செய்தது என்பது ஒரு கனவு மட்டுமே. நம் ஆழ் மனங்களிலில் சாதிய உணர்வுகள் குடிகொண்டிருக்கின்றன என்பது ஏற்பதற்கு கசப்பாண ஒரு உண்மை. சாதிய கருத்தியலை வெறும் பொரளாதரா சமூக நீர்வாக முறைமைகளினால் இல்லாது செய்யமுடியாது. இது புற வய மாற்றங்களை மட்டுமே உருவாக்கும். சாதிய உணர்வை நீர்த்துப்போக செய்வதற்கு நம் ஆழ்மனதில் நடைபெறும் அடிப்படை மாற்றத்தினால் மட்டுமே சாத்தியமானது. சமூகத்தில் காலம் காலமாக நிலவிய அனைத்து கருத்தியல்களும் பெரும்பாலும் பிற்போக்கான கருத்தியல்கள் நம் மனதில் மட்டுமல்ல உடல் இரத்தம். எலும்பு மச்சை என அனைத்திலும் குடிகொண்டிருக்கின்றன. எதுவும் தானாக அழியுமாயின் எந்த ஒரு விடுதலைப் போராட்டமோ அல்லது கருத்தியல் உரையாடல்களோ அவசியமற்றவை.
நூம் உண்பது உறங்குவதுமக இருக்கலாம். மற்றும் முரண்பாடு ஏன்? தேசிய போராட்டததை ஆதரிக்கும் அதேவேளையில் சாதிய போராட்டத்தை மறுப்பதும் தானாக நீர்த்துப்போகும் என்பதும எதனடிப்படையில். இதில் வேவ்வேறு தளங்களில் நடைபெறும் போராட்டத்திற்கு ஒன்றுக்கு சார்பாகவும் மற்றயதற்கு எதிராகவு கருத்தை முன்வைப்பது ஏன்? தேசிய போராட்டம் மட்டும் தானாக இல்லாது போகாதா?
எனது பாதை மனிதரின பரிணமா வளர்ச்சியில் அடுத்த நிலைக்குச் செல்வதற்கான பாதை. இதற்குப் பெயர் ஆன்மிகம் என்பது நம் பரிணாம வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கு சாதகமாக முடியலாம். காணரம் நமது பிரக்ஞையின் வளர்ச்சியே மனிதரின பரிணாம வளர்ச்சி. இந்த வளர்ச்சி நின்று நீண்ட காலமாகி விட்டது. காரணம் நாம் வெளி நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். ஊள் நோக்கிய பார்வை பயணம் ஆன்மிகத்துடன் மட்டும் இணைக்கப்பட்டுவிட்டது. இது மனித வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு தூர்பாக்கிய நிலை. மேலும் எனது கடந்த கால கரடு முரடான பாதை ஆன்மிக பாதைக்கு என்னை இழுத்துவரவில்லை. நமது நோக்கமே மனிதர்கள் அடக்குமுறையற்ற ஆரோக்கியமாக ஆனந்தமாக வாழும் ஒரு தளத்தை இந்த பூமியில் உருவாக்குவதே.
இந்தப் பயணத்தில் தேடலில் கண்டதும் நமது சம கால செயற்பாடுகளினதும் கருத்தியல்களினதும் மீதான விமர்சனமும் இதற்கான காரணத்தை தேடியதன் விளைவுமே எனது இன்றைய நிலைப்பாடு அல்ல வாழ்வியல். அதாவது நமது பிரக்ஞையற்ற செயற்பாடுகளிலிருந்தும் கருத்தியல்களை முன்வைப்பதிலிருந்தும் விடுபட்டு பிரக்ஞைபூர்வமான செயற்பாட்டு தளத்தில் செயற்படுவதை நோக்கியும் கருத்துக்களை பிரக்ஞைபூர்வமாக பரிமாறுவது என்ற அடிப்படையிலும் அடுத்த கட்ட மனித பரிணாம வளர்ச்சியை நோக்கி செல்வதே மனித இனத்தில் அக்கறை உள்ள ஒவ்வொருவரதும் அக்கறை.
அற்புதனின் பின்னூட்டம்- 1
மீரா நீங்கள் சொன்னவற்றில் எனக்கு விளங்கியதில் இருந்து, சில அடிப்படையனா விடயங்களை முன் வைக்கலாம்,
//ஓரு மனிதர் பிறந்தவுடன் சமூகமும் குடும்பமும் தமது அடையாளங்களை அதிகாரமாகவும் வன்முறையாகவும் குறிப்பிட்ட மனிதர் மீது திணிக்கின்றனர்.//
சமூகம் குடும்பம் என்பவை மனித சமுதாயங்களின் அடிப்படை அலகுகள், இவை கட்டியமைக்கப் பட்டிருப்பது அதிகார நிலைகளால் தான். இவற்றை இல்லாது செய்வதானால் சமூக அலகுகள் எதுவும் அற்ற தனி மனிதர்களையா நீங்கள் ஒரு சமூகமாகப் பிரேரிக்கிறீர்கள்? மனிதனால் தனித் தனித் தீவுகளாக வாழ முடியாது, ஏனெனில் மனிதன் ஒரு சமூகப் பிராணி. சமுதாய அலகுகள் அதிகார நிலைகளால் தான் சாத்தியப்படும். இங்கே எத்தகைய சமூகம் எத்தகைய அதிகாராம் அதன் எல்லைகள் எது என்பதே முரண்பாடுகளின் தோற்றுவாய் ஆக உள்ளது. உங்களின் மொத்த கருத்தாடலும் இதனை மறுதலித்து சமூகத்தையும் குடும்ப அலகையும் அதன் சார்பான அடையாளங்களையும் முற்றாக மறுதலிக்கிறது.
இவ்வாறான ஒரு நிலையை எந்தக் காலத்திலும் எட்டி விட முடியாது. ஏனெனில் மனிதன் ஒரு சமூகப் பிராணி அவனுக்கு அடையாளம் என்பது அவனது உளவியற் தேவையாக இருக்கிறது.அதனால் தான் முற்றும் துறந்த முனிவர்கள் உலகில் ஒரு சில நூறு பேராகவே உள்ளனர். உங்களின் அகம் நோக்கிய சிந்தனை என்பது இதனை நோக்கியதாகவே உள்ளது. முற்றும் துறந்தவர்களின் உலகில் முரண்பாடுகள் இருக்காது தான், ஆனால் மனித வாழ்க்கை என்பது அர்த்தம் அற்றதாக இருக்கும். இது வெறும் கனவுலகிலையே சாத்தியப்படும்.
// இந்த அடையாளங்களை துறப்பதில் தயக்கம் ஏன்?//
//வளரும் குழந்தைக்கு நமது சமூகத்தின் பல்வேறு அடையாளங்கள் தொடர்பாக சிறிது சிறிதாக படிப்படியாக விளக்குவது அறிமுகப்படுத்துவது. தொடர்ந்து குழந்தை தெரிவு செய்வதை ஏற்பது. இதுவே உண்மையான ஐனநாயக தன்மையுள்ள சமூகமாகும். //
உங்களின் எழுத்து குழப்பமானாதாக இருக்கிறது. ஒரு இடத்தில் இயற்கையான அடையாளங்களைத் தவிர மற்றவை எல்லவற்றையும் துறக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள், பின்னர் எந்த அடையாளத்தை ஏற்பது என்பதை குழந்தைகளே தீர்மானிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்?
ஒரு குற்பிட்ட அடையாளாங்களை உடைய குடும்பத்தில் சூழலில் வளரும் குழந்தை எங்கனம் சுயமாக வேறு ஒரு அடையாளத்தை ஏற்றுக் கொள்ளும்? அடையாளங்களே புறவயவானவை செயற்கையானவை அவற்றைத் துறக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள், பின்னர் ஏன் அடையாளங்களை குழந்தைகள் ஏற்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்?
//நாம் பிரங்கையற்று இருக்கும் நிலையில் நம் மீது நமக்கு அதிகாரம் இல்லாதிருக்கும் நிலையில் ஆதிக்க சக்திகளால் இயல்பாக மறு அடையாளத்தை திணிக்கலாம்.//
நமது அடையாளத்தை நாம் நிர்ணயிக்க எமக்கு அதிகாரம் வேண்டும், எல்லா அரசியற் போராட்டங்களும் இதன் அடைப்படையிலையே நடக்கின்றன. அதிகாரம் என்பது புற நிலையிலையே இயங்குகிறது, அது அரசு நீதி சட்டம் வளப் பங்கீட்டு என்று எமது சூழலை எமது வாழ்வைத் தீர்மானிக்கிறது. ஆகவே இங்கே அடையாளம் என்பது சுய தெரிவு என்பதாக இல்லாமால் சூழலால் நிர்ணயிக்கப்படுகிறது. சிங்கள இராணுவத்திடம் எனது பெயர் மீரா எனது அடையாள அட்டை என்னை ஒரு தமிழ்ப் பெண்ணாக சொன்னாலும் எனது அக அடையாளத்தின் படி நான் ஒரு பெண் மட்டுமே. ஆகவே நான் ஒரு தமிழ்ச்சி அல்ல புலி அல்ல. நீ என்னைச் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ய முடியாது என்று உங்களால் சொல்ல முடியாது. அதற்கான் அதிகாரம் உங்களிடம் இல்லை. ஆகவே நீங்கள் போராட நிர்பந்திக்கபடுகிறீர்கள். தமிழர்களாகிய நாங்களும் மனிதர்களே என.
//நாம் மையங்களாக நமக்கு செயற்படும் பொழுது வெளி மையங்கள நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது//
ம் அதிகாரா அமைப்புக்களின் உச்சப் பாதுகாப்பானா சூழலில் வாழ்ந்து கொண்டு இவ்வாறு துணிவாகச் சொல்லலாம்.:-
//உள்நோக்கிய விஞ்ஞான ஆணுகுமுறை //
விஞ்ஞானா முறை அல்லது அறிவியல் முறை என்பது உள் நோக்கியது அல்ல. நீங்கள் சொல்வது மெஞ்ஞானம் அல்லது கற்பனை என்னும் கருத்துமுதல்வாதம்.
//மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அல்லது மக்களின் கருத்துகளை கவனத்தில் கொள்ளத்தவறி, //
மக்களின் விருப்பு என்ன? அதனை நீங்கள் எவ்வாறு அறிந்துள்ளீர்கள். பொதுவில் மக்களின் விருப்பு என்பது தேர்தல்கள் மூலமோ அல்லது பரந்துபட்ட வன், மென் போராட்டங்கள் மூலமோ அறியக் கூடியதாக இருக்கிறது. பல ஆண்டுகளாக நடை பெற்று வரும் அநேகமான ஒப்பீட்டளவில் ஆயுத அச்சுறுதல்கள் இல்லாத எல்லாத் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக தமக்கான சுய அரசியல் அதிகாரத்தைக் கோரியே வாக்களித்து வந்துள்ளனர். இவற்றிற்கு மாறாக நீங்கள் எதனை மக்கள் கோருகின்றனர் என எவ்வாறு உய்த்தறிந்துள்ளீர்கள்?
//வுரலாற்றில் எப்பொழுதும் உண்மையைக் கூறியவர்கள் ஒருவராகவோ சிறுபான்மையாகவோ தான் இருந்திருக்கின்றனர்//
வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் உண்மையாகப்பட்டது இன்னொரு காலத்தில் பொய்யானதாக இருக்கலாம். ஆனால் வரலாறு என்பதே பெரும்பான்மையினர் எதனை உண்மை என்று கருதுகிறார்களோ அதன் அடிப்படையிலையே நகருகிறது. ஜனநாயாகம் என்பது அதனைத் தான்.
//தேசியமே கருத்தின் அடிப்படையில் உருவானதே. இதை எதிர்ப்பவர்களில் இருசாரரும் இருக்கலாம். தேசியம் என்ற கட்டமைக்கப்பட்ட கட்டுமானத்தை எதிர்ப்பதை எவ்வாறு கருத்துமுதல்வாதிகளா இருக்க முடியும். ஏனனில் தேசியமே அடிப்படையில் ஒரு கருத்தியல் வாதமே. கருத்தியல் வாதம் சரியானதா அல்லது பொருள்முதல் வாதம் சரியானதா என்பது வாதமே அல்ல. முhறாக அனைத்து வாதங்களும் வாழ்வின் ஒவ்வொரு கால கட்டத்திலும் கேள்விக்கு உள்படுத்தப்பட வேண்டும்.//
தேசியம் என்னும் கருத்தாக்கம் தனி மனிதர்களை இணைக்கும் ஒரு கருத்தாக்கம். வரலாற்றுப் போக்கில் ஏற்பட்ட புற அடையாளம் ஒன்றின் அடிப்படையில் அடக்கப்படும் ஒரு குழுமம் தமது அடையாளத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் தம் மீதான அடக்குமுறைக்கு எதிராக தனி மனிதர்களாகப் போராடி விட முடியாது. மக்களின் போராட்டத்தை ஒன்றிணைக்கும் கருத்தியலாகா தேசிய அடையாளம் இருக்கிறது. இதன் அடிப்படையிலையே மனித குல வரலாற்றில் தேசங்கள் எழுந்தன. வலிமையான ஒன்றிணைக்கும் அடையாளங்கள் இன்றி மனிதர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட முடியாது. மனிதனால் நிக்ழத்தப்பட்ட அறிவியற் பொருளாதார சாதனைகள் எல்லாமுமே தேசம், தேசிய வளம் தேசிய உணர்வு என்பனவற்றின் அடிப்படையில் ஏற்பட்டவை.
//வுன்முறை மற்றும் நாகரிகமற்ற வாழ்வியல் என்பதன் அடிப்படையில் தேசியத்தை முன்னெடுப்பது அழிவை நோக்கியே செல்லும். இது நாம் இன்று காணும் ஒரு உண்மை. இது தீர்வை மட்டும் நோக்கிச் செல்லாது.//
உலக வராலாற்றின் அடிப்படையில் முற்றிலும் தவறான கருத்து. தேசிய அடிப்படையில் வன்முறையில் போராடிய மக்கள் குழுமங்கள் இன்று அதிகாரம் உடையனவாகி நாகரிகமானா நாடுகளாக உலகெங்கும் இருக்கின்றன.
//நூம் உண்பது உறங்குவதுமக இருக்கலாம். மற்றும் முரண்பாடு ஏன்? தேசிய போராட்டததை ஆதரிக்கும் அதேவேளையில் சாதிய போராட்டத்தை மறுப்பதும் தானாக நீர்த்துப்போகும் என்பதும எதனடிப்படையில். இதில் வேவ்வேறு தளங்களில் நடைபெறும் போராட்டத்திற்கு ஒன்றுக்கு சார்பாகவும் மற்றயதற்கு எதிராகவு கருத்தை முன்வைப்பது ஏன்? தேசிய போராட்டம் மட்டும் தானாக இல்லாது போகாதா?//
எந்தப் போராட்டத்தையும் எவரும் செயற்கையாக உருவாக்கி விட முடியாது. முன்னர் கூறியதையே மீண்டும் கூறினால். எந்தப் புற அடையாளத்தின் அடிப்படையில் அடக்குமுறை நிகழுகிறதோ அதன் அடிப்படையிலையே மக்கள் ஒன்றுபட்டுப் போராடுவர். இவற்றை மறுதலித்து இயங்க முற்படும் அரசியல் இயக்கங்கள் மக்களால் நிராகரிக்கப்படுகின்றன. சண்முகதாசன் தமிழ் மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட அடக்குமுறையை அதன் விழைவாக எழுந்த தமிழ்த் தேசிய உணர்வை அடையாளத்தைக் காணத் தவறியதன் விழைவே அவர் வழி நாடாத்திய அரசியற் போராட்டம் தோற்கடிக்கக் கூடிய ஏது நிலையை உண்டு பண்ணியது.
அதைப் போலவே இன்று தலித்தியம் எனப் புகுத்தப்படும் அடையாளமும் மக்களால் நிராகரிக்கப்படும். தமிழ்த் தேசிய விடுதலை சாத்தியமாகும் பிறிதொரு காலத்தில் ஒரு தொகுதி மக்கள் தலிதுக்கள் என அடையாளம் காணப்பட்டு அடக்குமுறைகளுக்கு உள்ளானால் நிச்சயமாக ஒரு போராட்டம் மேல் எழும். அதனை இன்றே உணருவதும், சாதிய சமய அடையாளங்களைக் கடந்த தமிழ்த் தேசிய அடையாளத்தைக் கட்டி அமைப்பதும் இன்று அவசியமானாதாக இருக்கிறது. இதன் அடிப்படையில் இயங்காத எந்த அரசியல் அமைப்பும் மக்களால் நிராகரிக்கப்படும்.
ஒரு போராட்டம் உருவாவதற்கான புற நிலைகள் இல்லாது போகும் வரை ஒரு போராட்டம் நீர்த்து விடாது.
//அனைத்தும் சக்தி என்ற உள்நோக்கிய விஞ்ஞானத்தின் அனுவ அறிவான கடந்தகால கருத்தியல்வாத நிலைக்கு அருகில் வந்திருப்பது கவனிக்கப்பட வேண்டியது.//
மீண்டும் தவறான அறிவியற் புரிதல். சக்தி என்பது சில புலப்படாத அல்லது இதுவரை கண்டு பிடிக்கப்படாத உப அணுத் துகள்களே. ‘கடவுளின் துகள்களைத் தேடி’ என்னும் எனது பதிவைப் படிக்கவும். அனுபவ அறிவு என்பதற்கும், கருத்து என்பதற்கும் இந்தத் துகள்களுக்கும் என்ன சம்பந்தம்?
அற்புதனின் பின்னூட்டம்- 2
//ஐன்ஸ்ரயினின் சார்பு நிலைத் தத்துவம் திண்மமானது சக்தியாக மாற்றப்பட வல்லது என்று கூறுகிறது. குவான்ரம் இயற்பியலும் சக்தியும், திண்மமும் அணுவின் இரு வேறு வடிவங்களே என்று கூறுகிறது. இவை இந்த இரண்டு நிலைகளையும் அடைய எது காரணமாக இருக்க முடியும். உதாரணத்திற்கு மின்காந்த சக்தியாக இருக்கும் போட்டோன்கள் எங்கனம் பொருளாக அல்லது திண்மமாக மாறக் கூடும் என்பதை விளக்க ஹிக்ஸ் போசோன் என்னும் துகள் காரணமாக இருக்கலாம் என்று முன் மொழியப்படுகிறது. அதாவது இந்த சக்தியும் திண்மமும் மாறும் ஹிக்ஸ்சின் பொறி முறையை சரி என்பதை நிரூபிக்க இது வரை கண்டு பிடிக்கப்படாத இந்த ஹிக்ஸ் என்னும் துகள் கண்டு பிடிக்கப்பட்டாக வேண்டும். இந்த மாற்றத்தை உண்டு பண்ணும் ஹிக்ஸ் அணுத் துகளே , ‘கடவுளின் துகள்’ என்று அறிவியலாளர்களால் சிலாகிக்கப்படுகிறது. ஒரு அணு பொருளாக இருப்பதற்கும், சக்தியின் வடிவமாக இருப்பதற்கும் அடிப்படையாக இருக்கக்கூடியது இந்த அணுத் துகளே என்று நம்பப்படுவதே இந்த பெயரிற்கான காரணம் ஆகும்.
இது வரை நடை பெற்ற அணு ஆர்முடுகல் பரிசோதனைகளில் இந்த ஹிக்சின் துகள் கண்டுபிடிக்கப் படவில்லை. இதைக்கண்டு பிடிப்பதற்காக உருவாக்கப்படதே Large Hadron Collider (LHC) என்னும் அதி சக்திவாய்ந்த அணு ஆர்முடுகி. இது ஜெனிவா நகரில் ஐரோப்பிய அணு ஆய்வு மையத்தால் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கருவியே இந்த வருடத்தின் நவம்பர் மாதம் அளவில் இயக்கி வைக்கப்பட இருக்கிறது.//
மீராபாரதியின் பின்னூட்டம்- 1
நண்பரே!
முதலாவது எனது அறிவு பொது அறிவே.
இரண்டவாது இது ஒரு ஆய்வுக் கட்டுலைக்கு உரிய விடயம்
இருப்பினும் எனது தேடலில் கிடைத்த எனக்குள் சமிபாடடைந்து வெளிவரும் இது தொடர்பான எனது கருத்துக்கனை முன்வைக்கின்றேன். இக் கருத்துக்களில் பலரது கருத்துக்கள் உள்வாங்கப்பட்டிருக்கும். அவர்களை மதித்து அவர்களுடைய கருத்துக்களுக்கு உரிய மதிப்பையும் உரிமையையும் வழங்கவேண்டும். ஆனால் இது ஒரு ஆய்வு கட்டுரை இல்லை என்பதாலும் எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டிய தேவையிருப்பதாலும் தற்பொழுது nஎழுதுகின்றேன். ஒன்றில் எனக்கு தெளிவு இல்லை எனில் விளக்கம் இல்லை எனில் நம்பிக்கை இல்லை எனில் அது தொடர்பாக எழுதுவதை தவிர்ப்பேன். மேற்கூறியப்பட்ட விடயங்களை நான் முன்வைத்தது என்க்குள் உருவான எனது நம்பிக்கையே.
ஆரம்ப காலங்களில் மனிதின் அறிவு அனுபவ அறிவாகவே இருந்தது. இதில் இருவிதமான அறிவுத்தளங்கள இருந்தது எனக் குறிப்பிடலாம். முதலாவது அனுபவ அடிப்படையிலான பொதுப்புத்தி அறிவு. இதற்கு அந்தவிதமான அதாரங்களும் தேவைப்படுவதுமில்லை. முன்வைக்கப்படுவதுமில்லை. ஆனால் இது மனிதாகளிடம் ஆழமான நம்பிக்கையை காலம் காலமாக உருவாக்கி வந்துள்ளது என்றால் தவறல்ல. இன்றைய நமது பொதுவான அறிவுத்தளமும் இதனடிப்படையானதே.
இரண்டாவது அனுபவ அறிவானது தேடலின் அடிப்படையில் அமைந்தது. இதில் ஒரு நாகாpகமான தேடல் முறைமையும் நம்பகத்தன்மையும் உண்மைத்தனமையும் நோமையும் இருந்தது எனலாம். இவ்வகையான முறைமையைப் பின்பற்றியவர்கள் கீழக்கில் கெளதம சித்தாத்தா; என்ற புத்தாரும் மற்றும் பலரும் மேற்கில் பைதகரஸூம் மற்றும் பலரும்.
இவர்கள் முன்வைத்தது அனைத்தும் சக்தி என்பது. ஆனால் இது ஆதரங்களுடன் வெளிநோக்கிய விஞ்ஞானம் போன்று நிறுபிக்கப்பட முடியாதது. இது ஒரு உள்நோக்கிய அனுப விஞ்ஞானம். அனுபவ அடிப்படையில் உணா;ந்து புரிந்து கொள்ளலாம். இதற்குப் பயன்படும் முறை முழுமையாக நோக்கும் தியான முறமையாகும். இங்கு ஆரயாய்பவரும் ஆராயப்படுவதும் ஒன்றே.
இதுவே இது கருத்துமுதல் வாதமாக பாpணாமமடைந்தது எனலாம். இதற்று வெளிநோக்கிய விஞ்ஞானம் எதிர்பார்க்கும் ஆதாரங்கள் இல்லாமையால் பொருள்முதல் வாதிகளால் நிராகாpக்கப்பட்டது. இக் கருத்துமுதல் வாதத்தில் இருவிதமான போக்குகள் இருக்கின்ற என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டியது. ஒன்று பொதுப்புத்தி அறிவு. இரண்டாவது ஆரோக்கியமான அறிவுத் தேடல்.
அடுத்தது வெளிநோக்கிய விஞ்ஞான தேடல். இது நாம் பார்வைப்புலன்களுக்கு உட்பட்டது. அதாவது நம் கண்களுக்கு தொpகின்ற பொருட்களில் இருந்து ஆரம்பித்த ஆய்வு அல்லது தேடல் முறை. இவ்வாறு நாம காணும் பொருளை பிரித்து பிரித்து ஆராய்ந்து கண்டதன் வெளிப்பாடே பொருள்முதல்வாதத்திற்கான அடிப்படை. இவர்களைப் பொருத்த வரை பருப்பொருளே கருப்பொருள். ஆனால் இன்று விஞ்ஞானம் அக்கால புத்தா; பைதகரஸ் போன்றவர்களின் முடிவுகளை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர் என்றால் தவறான கருத்தல்ல.
இதனால் ஒன்று தவறு மற்றது சாp என்பதல்ல. ஒவ்வொரு தேடல் முறைமைகளிலும் ஒவ்வொருவிதமான கண்டு பிடுப்புகளை காணலாம். மனித வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம். மேலும் ஒன்று மட்டும் உண்மையானது. அறிந்தது!
அறியக் கூடியது! என்றுமே அறிய முடியாதது! இதுவே உலக அறிவியலின் வரலாறு.
நேற்று நாம் அறியாதது
இன்று அறிகின்றோம்
இன்று அறியாததை
நாளை அறிகின்றோம்.
எப்பொழுதுமே அறிய முடியாதது ஒன்று இருந்து கொண்டே இருக்கும்.
இதுவே அறிய முடியாத உலக அதிசயம். ஆகவே உண்மையா தேடல்களையும் தேடுபவர்களையும் புறக்கணிக்காமல் ஆரோக்கியமான கதையாடல்கள் உறவுகள் மூலம் மனித வளா;ச்சிக்கு அடித்தளமிடுவோம் வாரீர்.
நட்புடன் மீராபாரதி
மீராபாரதியின் பின்னூட்டம்- 2
மேலும் ஒரு சிறு குறிப்பு வெளிநோக்கிய விஞ்ஞான தேடலில் ஆராய்பவரும் ஆராயப்படும் பொருளும் தனித்தனியானவை. இவற்றுக்கு இடையில் உறவானது இடைவெளி கொண்டது.
மனிதா; மனித பாpணாம வளா;ச்சி தொடா;பான தேடலில் ஈடுபடும்; பொழுது ஆராய்பவரும் ஆராயப்படும் பொருளுமான மனிதா; ஒருவராகவே இருக்கின்றார். இந்த ஒருவரை இந்த ஒருவரே வெளியிலிருந்து பாருக்கும் நிலைக்கு நாம் உயர நமது பிரக்ஞையை வளர்க்க வேண்டும். இன்றைய நமது பிரக்ஞையின் வீதம் சாதாரண மனிதா;களில் ஒன்றிலிருந்து பத்துவீதத்திற்கு உட்பட்டதே. விஞ்ஞானிகளின் பிரக்ஞை இருபது வீதத்திற்கு உட்பட்டதே.
நுhறு வீதம் பிரக்ஞையானவர்கள் கெளதம சித்தாத்தா; போன்ற ஒரு சிலரே. இவர்களேயே புத்ததா; எனக் கூறுவர்.
சித்ததாத்தாpன் கூறு;றுப்படி அனைத்து மனிதா;களுமு; புத்தா; ஆகலாம் என்பது அவரது தேடலில் கிடைத்த அனுபவ அறிவு. நாம் மேலும் பரிணாம வளர்ச்சி அடைவதா இல்லையா தொpவு நம்முடையது. மேலும் பாpணாம வளர்ச்சியடைய எனது வாழ்த்துக்கள்.
நன்றி மீராபராதி
உரையாடல்- 8 (மீராபாரதி, சுதா, அற்புதன்)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment