அலைஞனின் அலைகள் எனும் தளத்தில் பெயரிலியால் எழுதப்பட்ட பதிவிற்கான அமீபாவின் பின்னூட்டமும் அதனூடாக சிறீரங்கனுடன் தொடர்ந்த உரையாடலும்.
பரந்த-அபத்தலியல்வாதம் (Pan-Absurdism) & பரந்த அபத்தக்கவிதை (Pan-Absurd Poetry): ஓர் அறிமுகம். - பெயரிலி.
அதிர்ஷ் டமும் கஷ் டமும் தனி யே வரா து என்ப து உண் மை. நமக் குச் சுடச் சுடப் பதிவு போட, நேரம் கி டைப் ப தில்லை; சுட்டுப் போட மனசு கிடைப் பதில் லை. ஆனால், பதிவு போடா மலிருக் கவும் கவுண் டர் கல்சர் டவு சர் வயப் பட்ட மனம் விடுவ தில்லை. இந்த நேரத் திலேயே மெய் யான பக்தர் களைக் காக்கப் பஹ வான் மனித உரு விலே அகிலத் திலும் இணையத் திலும் அவதாரம் எடுக் கின்றான் என் பது செயின் ஈ மெயில் களை ஏழு பேருக் கு அனுப் பா மலே உண் மையா கிறது.
எனக் காக ஒரு கோ னார் மொழி பெயர்ப் புப் பால் கறக்க தானே முன் வந்திருக் கிறார். அணிந் துரை, பணிந் துரை, கடிந் துரை, குரை எல்லா வற்றுக் கும் தாம் உபய காரராக நான் நீ என்று போட்டி. இது எழுத விஷய மில்லாத வனுக்கு முதல் அதிர்ஷ் டம்.
தஞ்சா வூரின் குக் கிராமத் திலும் து பாய் ஆப்பக் கடை யிலும் பங் களூர் பீர் பாரி லும் கொரியா வின் சக் கூரா மரத்துக் குக் கீழும் என் பெயர் ப்பு கள் வாசிக் கப் பட்டு விவாதிக் கப் படுவது சிவாஜி மேக் கப் உரு மாற்ற மெற்றா மோர் போஸிஸ் போல டிஜிட் டல் ட்ரீமாக விரி கிற து. ராஜ வேர் வை பூத்து கந் தக ரோ ஜா சுகந் தம் கரை ந்து வீசு கிற து. அலை யாக் கட லின் நுரை நுழைந் து அளைந் து கிளை த்த நீண்ட விரல் கூர்ந்த கூ னல் ஆதித் தாய் வந்து மொழி வேரிலே பூனைக் கடி கடித்து மெல் லிய சுகந் தத்தை நுகர்ந்து நகர் வதைப் பார்த் தாயா, டியூ ரோடா செல் லம்மா? ஓர் உடை ந்த யுகத் தின் ஈரா னிய சினி மா சேர் க்கிள் சிக ரெட் நாய கியாய் நீ யும் இங்கர் மேன் நா யக சது ரங்க மர ணமாய் நா னும் கறை படா த தென்ன மெரிக்க மழ லை ம ழைக் காடுக ளிலே தி ரேத கலி யுகக் கன வாய் அலை ந்து தலை கீழ் மாம் பழக் குரு ட்டு வவ் வாலாய் கு கை பிர ம்ம ராட்ச ஸாகி மு கம் அறை ந்து தி ரிய முளை த்த மெய் மை மறக்கப் படக் கூடிய காதல் புணர்ச் சியா, பெரு விரல் போன்ற அ தை த்த இதழ் ஈ ரம் பிரிந் தவளே? அக் காமம் சொட்டிப் பரவி நனைந் து மே லேறி சிலிர்ந் து மூழ்க் கும் ஸ்வாச நாளிலே உன்னை ஒரு 30% காட் டன் மீதி பொலிய ஸ்டரென்று செம் புரட் சி செய்ய சீனத் தின் சின்னக் கை கள் பிஞ்சுப் பசுங் கை கள் ஊதப் பறக் கும் உமிக் கூலி க்கு போர் வெம் மை பூக்க நெய்த வாசனைக் கட்ட விழ்ப்புத் துகி லாக பேரங் காடி கள் ஊடே வந்து ஒரு சுதந் திர தினத் தில் கழிவு விலை யில் உன் னைக் காண கட்ட மைத்துப் பின் நவீன மாக அணிந் து கொல் வேன். ஸகி என் பதிவு களின் மொழி பெயர்ப் பு களின் உரத்த ஸப்தம் மௌன மாக உனக்கு இந் தப் பூச் சிகள் சில் லிட்டுப் புணர் ந்து முயங் கும் நள் ளிர விற் கேட் கிறதா? ஒரு மழை மின் னலை இடி அழு த்தி தீ யென அணை த் துப் புணர் ந்த வே தனை ஊடறு த்த இன் பக் கணத் தின் கனத் திலே நனையா மல் இரு பது அமெ ரிக்க ஏகாதி பத்திய டாலர் ஏசி பால் கனியி லிருந் து பார்ப் கோர்னு டன் டாபோ ரின் சின்னக் குழந் தையின் வெயிற் சோகங் களுக்காக என் அராஜக வேர் வைத் தோளிலே உன் அவ்லோன் உ தட்டுச் சா யம் பட்டு விடச் சாய் ந்து நீ மெல் லிய தாக "டா நா ன் உ ன் டீ டாபோர் டாப் டாப்பர் போர் bore" என்று ஆறு தலை முறைத் தாய் மையின் பிர ஸவ வே தனை வனம் நிலம் தாண்டிக் காவிக் கடத்தி முனகிய ஆபி ரிக்க ஆசி யாவின் அமெரி க்கப் பெருந் துக் கத்தை அண் டார்ட்டிக்கா உல கம் அறி யாது. பக்கத்து இருக் கைப் பார்ப் பான், பார்ப் கோன் ராம ஸேது பின் ஆமி புலி பாசி சிட்டு அறி லேது. ஆனால், என் யௌ வனக் கா துப் பறையைக் கிழித்த உன் வைர மூக் குத்தி அறி யும் ஸ்நே கீ! உன் கொப் புளித்த வேதனையை இரா மானு சனும் பெரி யாரும் பிரபா கரனும் புரிந்து துடித்த டெஸி பல்லிலே என் வீச்சம் ஒரு மச் சமாக தாய் வழி சமுதா யத்துச் சேது மண் மேட் டிலே வால சைய ஓடும் வ தையை உன் ஆயி ரம் காலத் து பெண் ணடிமை மீறும் பல் தேய் சீயப் புரட் சியினால் ஆத் மார் த்தமாக தத் துவம் ஸ்பரி சிக்க முடி கிறதா, அசினேகா? ......
..... மன்னிக்க வேண்டும். பெயர்ப்பாளர், பதிப்பாளர் கிடைத்த மகிழ்ச்சியிலே எங்கோ போய் விட்டேன். அதாவது, பெயர்ப்புக்கு இன்னும் -/பெயரிலி.யின் அருஞ் சொற் பத ங்களைக் கொடு க்க வேண் டும். அது வும் சொல் பிரி த்துப் பெயர் ப்பாளாரும் புரி யச் சிறி தாகக் கொடு க்க வேண் டும். அதன் வழியேயே, கோனார் நோட்ஸ் முழுமை யடையும் என்பதால், பழைய அருங் கட்டுரை களைத் தேடிப் பதி வேற்ற இது நல்ல சந்தர்ப் பம். இது தொடரும் அதிர்ஷ் டம்.
அவ் வகையிலே, ஏற் கனவே இரண் டு முறை சுழற் சி செய்த பத் தாண்டு கள் பழு தான அற்புத மான பீன் நவீனக் கட்டு ரையை முன் வைக்கி றேன்.
(அப் பாடா, ஒன்று மே அடைப்புக் குறிக் குள்ளே இது வரை எழுத வில்லை. ஹையா!!)
பரந்த-அபத்தலியல்வாதம் (Pan-Absurdism) & பரந்த அபத்தக்கவிதை (Pan-Absurd Poetry).
ஓர் அறிமுகம்.
நவீனப் படைப்பு உலகில் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்திவரும் படைப்புத்தத்துவங்களில் பரந்த-அபத்தலியல்வாதமும் ஒன்று. ஓவியம், திரைப்படம், நாடகம், இசை, மற்றும் சகல படைப்பிலக்கியங்களிலும் இதன் தாக்கம் சமீப காலங்களில் மிகக் கணிசமாக வளர்ந்துவருவது மிகக் கண்கூடான உண்மையாக உள்ளது. இந்த அறிமுகத்தின் மிக முக்கியநோக்கம், இரண்டு அபத்தலியக் கவிதைகளை அறிமுகப்படுத்துவதே.
தனியே அபத்தலியம் என்பதிலும் பரந்த-அபத்தலியம் என்ற சொல்லினை இந்தக்கட்டுரையாளன் இங்கு முன்வைப்பதற்குக் காரணம், அதன் இயங்கு தளத்தின் வீச்சத்தினதும் ஆழத்தினதும் அகலத்தினதும் அளவினை முன் வைத்தே ஆகும். மார்ட்டின் எஸ்ஸிலின் (Martin Esslin) -நாடகத்தினைப் பொறுத்தமட்டில்,- "அபத்தலியலியத்தின் அரங்கு (the theatre of the absurd)" என்ற பதத்தினை முன் வைக்கையில், அல்பேர்ட் கமு (Albert Camus) இன் "மனிதன், அபத்தத்திற்கும் வலிமிகுந்த நினைவுக்குக் கொணரமுடியாத கடந்தகாலமும் நம்பிக்கை வைக்கமுடியாத எதிர்காலமும் கொண்ட சங்கடத்திற்கும் இடைப்பட்ட தீர்க்கமுடியாத இருப்பு அகல்தலில் உள்ள ஓர் அறிமுகமற்ற புதியவனினை" [A human being as a stranger, "an irremediable exile," caught in the absurd and painful predictament of having neither a past to remember nor a future to hope for] தன் அடிப்படை உருவாக எண்ணி ஏற்றுக்கொள்கிறார். (உ+ம்: இயூஜின் ஐயோனெஸ்கோவின் "(ஒரு/அந்தப்) பாடம்" நாடகம் [Eugene Ionesco's "The Lesson").
ஆனால், இங்கே கட்டுரையாளர் முன்வைக்கும் பரந்த-அபத்தலியம் மேற்கூறிய பார்வையிலிருந்து வேறுபட்டதும் விரிவுபட்டதுமாகும். பரந்த-அபத்தலியம், தான் கொள்ளும் வடிவத்திலோ, கருத்திலோ மட்டும் முழுக்கமுழுக்கச் சார்ந்ததல்ல; மேலாக, அது உற்பத்தியாளனினதும் நுகர்வோனினதும் கருத்து வெளிவிடுதற்திறனிலும் கருத்து உள்வாங்கற்றிறனிலும் சார்பாகத் தங்கியிருக்கிறது. இது நிகழ்த்தற்கலைகளுடனோ (performing arts) அல்லது நுண்கலைகளுடனோ (fine arts) சம்பந்தப்படுகையில், உற்பத்தியாளன் படைப்பாளியாகவும் நுகர்வோன் ஆர்வலனாகவும் அடையாளம் காணப்படுகிறான்.
பரந்த-அபத்தலியம் என்பது படைப்புலகில் நூற்றாண்டு காலமாக இருப்பினும், இதுவரை அதன் மூலவேர்த்தத்துவம் வரைவிலக்கணப்படாமலே இருந்துவந்திருக்கிறது. இதற்கான மிக முக்கிய காரணம், இந்தத்தத்துவத்தின் விரிந்த பயன்படுதளமும் அநேக பரந்த-அபத்தவியற்படைப்பாளிகள் தங்கள் படைப்புகள் இந்த வகைப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்புத்தன்மையும் இதனை இதுவரை காலமும் ஒரு தத்துவவகைப்படுத்தலுக்கு, வரைவிலக்கணப்படுத்தலுக்கு உள்ளாவதினைத் தவிர்த்து வந்திருக்கிறது. இன்னமும் பரந்த-அபத்தலியவாதம் ஒரு முறையான வரைவிலக்கணக்கத்திற்குக் கூர்ப்படையாத வகையில், தற்போதைக்கு, இந்தக்கட்டுரையினைப் பொறுத்த அளவில் நாங்கள் அதனைப் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்திக் கொள்ளலாம்.
" படைப்பாளியின் எதுவிதமான கருத்துவெளிப்பாட்டினையும் தெளிவாகக் கலை நுகர்வோனுக்கு வழங்கமுடியாத அல்லது தானாகவே எதுவித தெளிவான கருத்துடனோ அல்லது ஏதுவித செய்தியினையும் தனக்குள் உள்ளடக்கி ஆக்கப்படாத எல்லாவகைப் படைப்புக்களும் பரந்த-அபத்தலியப்படைப்புக்கள் எனப்படும்."
பரந்த-அபத்தலியற்படைப்புக்கள் தமக்கெனத் தனியே ஒரு வகை வடிவத்தினைக் கொண்டு இருக்கலாம்; அல்லது பல வேறுவகைப்பட்ட ஆக்கற்தத்துவங்களினாலான படைப்புகளின் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களின் சேர்க்கையாக இருக்கலாம்; உதாரணத்திற்கு, ஒரு பரந்த-அபத்தலியவாதப்படைப்பு இயற்கையில் ஒரு கனவுத்துவப்படைப்பாக (Surrealistic product) இருக்கும் அதேநேரத்தில், இயற்கையாகவே அதன் பொருளினை வெளிப்படுத்தும் தெளிவின்மையிலோ, அல்லது அதனை உற்பத்தி செய்தோனின் சொந்தக் கருத்துத் தெளிவின்மையிலோ படைப்பாளியின் கோணத்தில் ஒரு பரந்த-அபத்தலியப்படைப்பாக ஆகிப்போகும். இன்னொரு வகையாக, அதன் நுகர்வோனின் பார்வைத்தளத்தில் (உ+ம்: ஒரு கவிதை எனப்படுகையில் வாசகனின்) உள்ள கருத்துத் தெளிவின்மையினால், அல்லது படைப்பாளியின் தளத்தினை அணுகமுடியாத வெளிநிலைப்பாட்டினால், உள்வாங்குவீச்சக்கூர்மை மழுங்குதலினால், அவனளவில் (படைப்பு உள்வாங்குவோனின்) அந்தப்படைப்பு ஒரு பரந்த-அபத்தலியப்படைப்பாக ஆகிப்போகும். இந்தவகையில், பரந்த-அபத்தலியல் தத்துவம் சார்தல் கொள்கை (Theory of Relativity) இன் அடிப்படையில் ஒழுகுகிறது. தவிர, மேலே குறிப்பிட்டதுபோல, பரந்த-அபத்தலியற் படைப்பு ஒன்று, ஒரு கனவுத்துவப்படைப்பினதும் ஓர் நவீனத்துவப்படைப்பினதும் (modernism) ஓர் உணர்த்தலியற்படைப்பினதும் (Expressionism) கூட்டாகவோ இருக்கலாம். இந்தக்கூட்டு பல விதமான விகிதங்களிலும் பண்பளவிலும் ஆக்கப்படலாம். இவற்றினை கீழ்க்கண்ட பிரதான வகைப்படுத்தல்களின்கீழ் நாங்கள் கொணரலாம்.
1.
படைப்பின் கருத்து, புரிதலின் அடிப்படையில் //மட்டும்//; இது மேற்கூறிய, படைப்பாளி, பாவனையாளன் இருவரினது நிலைப்பாட்டுத்தள அடிப்படையிலும் ஒருவரை புரிந்து கொள்ளல் அடிப்படையிலும் மட்டுமே சார்ந்திருப்பது.
2.
படைப்பின் வழங்கு வடிவ அடிப்படையில் //மட்டும்//; உதாரணமாக, அது தனியே ஒரு கவிதை வடிவத்திலே அமைந்திருக்கலாம்; அல்லது கட்டுரை வடிவத்தில் அமைந்திருக்கலாம்; அல்லது, ஓர் ஓவிய வடிவத்தில் அமைந்திருக்கலாம்; அல்லது ஓர் இசை வடிவக்குறிப்பு அடைப்படையில், நாடக வடிவில் அமைந்திருக்கலாம்; தவிர, இந்த அமைப்புகள் பல வேறு வேறாக ஒன்று சேருகையில், ஒரு கலந்த வழங்கு வடிவமையலாம். அதாவது, உதாரணத்திற்கு, ஆரம்பத்தில் ஒரு கவிதை வடிவிற் செல்லும் படைப்பு இடைப்பகுதியில் ஓர் ஓவியக்குறிப்பீடு வகைக்குத் தாவி முடிகையில் ஒரு சிறுகதை வடிவில் முடியலாம். ஆயினும், இந்த வகைப்படைப்புகள் மிக அரிதாகவே காணப்படுகிறன. எதிர்காலத்தில், படைப்புத்துறை தன் சலித்துப்போன தேக்கத்திலிருந்து விடுபட்டு தன்னை முன்னெடுத்துச் செல்ல இந்த வகை கூட்டு மாற்றுப் படைப்புக்கள் அவசியப்படும் என்பது இந்தக் கட்டுரையாளனின் பார்வையாகும்.
3.
படைப்பின் அடியோடும் படைப்புத்தத்துவ அடிப்படையில் //மட்டும்//; உதாரணம், அது தனியே எதிர்காலவியற்படைப்பாக (Futurism) இருக்கலாம். அல்லது, எதிர்காலவியலும் கனவுத்துவவியலும் உணர்த்தலியலும் நவீனத்துவவியலும் கலந்து மாறிமாறி வரும் ஒரு படைப்பாக இருக்கலாம்.
4.
இந்த மேற்பட்ட மூன்று அடிப்படைகளும் ஒன்றுக்குள் ஒன்று கலந்து வரும் படைப்பாக ஆகலாம்.
அடிப்படையில், பரந்த-அபத்தலியம் என்பது, இந்தக்கட்டுரையாளனினால், படைப்பாளியின் மன, கருத்து, சூழல் நிலைக்கேற்ப பிரதானமாக ஒரு காலவெளி சார்ந்த வெளியீடாகவும் அவனின் அந்நேரத்தினது குறியீடாகவுமே கொள்ளப்படுகிறது; 'பிரதானமாக' என்ற சொற்பிரயோகம் 'முழுதாக' என்ற சொற்பிரயோகத்திலும்விட இங்கே பயன்படுத்தப்பட்ட காரணம், சூழல் என்பது அதன் அளவில், தூரவெளியிலிருந்து முற்றுமுற்றாகப் பிரிக்கப்படமுடியாததாகும் என்பதே ஆகும்; அதாவது, ஓரளவிற்கு அபத்தலியற்படைப்புக்கள் படைப்புக்கள் ஆக்கப்படும் இடத்தளத்திலும் தங்கியிருக்கிறன. இதுவே நுகர்வோனின் நிலைப்பாட்டிலிருந்து, அவனின் உள்வாங்கு மன, கருத்து, சூழல் நிலைக்கேற்ப பிரதானமாக ஒரு காலவெளி சார்ந்த வெளியீடாகவும் அவனின் அந்நேரத்தினது குறியீடாகவுமே கொள்ளப்படலாம். இந்தத் துணிபு, ஒரு படைப்பின் (அல்லது பொதுவில், பண்டத்தின்) பரந்த-அபத்தலியத்தன்மையினை சம்பந்தப்பட்ட படைப்பாளியினதோ நுகர்வோனினதோ காலம், இடம் சார்ந்த ஒரு சூத்திரமாக மாற்றிவிடுகிறது. அதாவது, இன்றைக்கணத்திற்கு ஒருவருக்கு பரந்த-அபத்தலியப்படைப்பாகக் காணப்படும் பண்டம், இன்னொரு வேளைக்கு முழுதாகவே ஒரு கருத்து/செய்தி கடத்தும் படைப்பாக மாறிப்போகலாம்; இந்த நிலையில், அந்தப்படைப்பு, அந்தக்குறிப்பிட்ட மனிதனுக்கு பரந்த-அபத்தலியப்படைப்பாகவோ, அல்லது ஒரு செய்தி சொல்லும் ஆக்கமாகவோ மாறிப்போகிறது. இந்த ஆக்கு மூலக்கூறே பெரும்பாலாக எந்தவொரு படைப்பினையும் தன்னளவில் சுயமாக பரந்த-அபத்தலியப்படைப்பாகவோ அல்லாமலோ இருக்கவிடாது, வெறும் சார்புத்தன்மையினை மட்டும் அதற்குக் கொடுக்கிறது; இந்தத் தன்மை, சார்ந்ததின் வண்ணத்தன்மையினோடு ஒப்புநோக்கப்படலாம். மேலே பெரும்பாலாக என்ற சொற்றொடர் உட்பதிக்கப்பட்ட காரணம், வெறுமனே வெளிப்படையாக ஒரு கருத்தினை முன்வைக்கும் சொற்றொடர் (உ+ம்: "இன்றைக்கு சோதிடக்குறிப்பின்படி உனக்கு நல்லகாலம்" என்ற சொற்றொடர்) கருத்தளவில் தெளிவாக இருந்தாலும், அதனின் அடிப்படை, உள்வாங்குவோனின் விருப்பு வெறுப்பு, நம்பிக்கை (உ+ம்:சோதிடநம்பிக்கைக்கு) என்பதற்கேற்ப பரந்த-அபத்தலியச் சொற்றொடராகவோ, அல்லது இல்லாமலோ போகலாம். ஆனால், செய்தி வழங்கும் அடிப்படையில் எல்லோரும் (உ+ம்: சோதிடநம்பிக்கை உள்ளோனும், அற்றோனும்) காரண (உ+ம்: சோதிடக்குறிப்பின் அடிப்படையில்) காரிய(உ+ம்: உனக்கு நல்லகாலம்) ஒரு தெளிவான செய்தியினைப் பெற்றுக்கொள்கிறார்கள்; அந்த அளவில் இந்தச் சொற்றொடர் எல்லோருக்கும் தன்னளவில் பரந்த-அபத்தலியச் சொற்றொடர் அற்றே இருக்கிறது; ஆனால், இரண்டாவது (அல்லது இரண்டாவது கட்ட நம்பிக்கையின் அடிப்படைப்) பார்வையில், ஒருவருக்கு பரந்த-அபத்தலியச்சொற்றொடராகப்போகிற வேளையிலே, மற்றவருக்கு இன்னமும் ஒரு பொருள்பொதிந்த சொறொடராகவே இருக்கிறது. இதுவே "பெரும்பாலாக" என்ற சொற்றொடரின் அவசியத்தினை மேலே உட்பதிக்கும் அவசியத்தினை முன்வைக்கிறது. இதுவே, பரந்த-அபத்தலியத்திற்கு ஒரு தனியே கறுப்பு வெளுப்பு என்று கோடுவெட்டிப்பிரிக்கமுடியாத தன்மையினை ஏற்படுத்திவிடுகிறது. ஒரு சாம்பற்றன்மையினை ஏற்படுத்தி விடுகிறது; அதாவது, பிறிதொரு சொற்றொடரில், ஒரு படைப்பின்மீதான பரந்த-அபத்தலியப்பார்வை, "அபத்தம்/அபத்தமில்லை" என்ற 'வெட்டு ஒன்று துண்டு இரண்டு' பார்வையினை, மிகுதி சீர்தூக்கு அலசற்பார்வைகளில் உள்ளது போலத்தரப்போகாது; வெறுமனே, பரந்த-அபத்தலியத்தின் முறிவற்ற தொடர் (not discrete, but continuous) வீச்சத்தின் காத்திரத்தின் கோணத்தின் அளவினையே தரக்கூடும்.
சீர்தூக்கி அலசுதற்துறையில் பரந்த-அபத்தத்தன்மைப்பார்வையின் தேவை மிகவும் அவசியமானதாகும். எந்த ஒரு மனிதனும் அடிப்படையில் ஒன்றானவனல்ல. மேலும் ஒரு தனி மனிதனே, அவனளவில் உடலளவிலும் சிந்தனையளவிலும் காலத்தோடும் புதிதாக மாறிப்போகிறனான், உயிரளவான நிலையில் மீண்டும் பிறக்காதபோதும். இந்த வகையில், ஒருவனின் படைப்பு வெளியீட்டினை இன்னொருவர் நல்லது கெட்டது என்று தன் கருத்து நிலைப்பாட்டில் மட்டும் வெறுமனே கூறுபோடுகை பண்ணிவிடமுடியாது; இந்த அளவில், பரந்த-அபத்தத்தன்மை விமர்சனத்திற்கு ஒரு படைப்பின் நிலைப்பாட்டினை படைப்பாளியளவில் ஏற்றுக்கொள்ளும் நியாயத்தினைப் பெற்றுத்தருகிறது. இன்னொரு விதத்தில், அது நுகர்வோனையே படைப்பினைப் புரிந்து கொள்ளும் கூட்டுப்படைப்பாளி (இதை விடச் சரியான சொற்பதத்தில், "இரண்டாம்படி/நிலைப்படைப்பாளி" அல்லது "நுகர்தற் படைப்பாளி") தரத்திற்கு ஏற்றி, இடையே விமர்சகர் எனும் இடைத்தரகரின் கூலியின் அளவினை மிகுந்த அளவிற் குறைத்துவிடுகிறது. இந்தக்குறைப்பு, இரண்டாம்நிலைப்படைப்பாளிக்குக் காலப்போக்கில், ஒரு "முதல்நிலை/படிப்படைப்பாளி" அல்லது, "ஆக்கற்படைப்பாளி" ஆகும் ஊக்கத்தினையும் அவனின் ஆக்கற்பண்பே பிறிதொரு காலத்தின் சிறந்த படைத்தற்போக்கு முன்னெடுப்புக்கு வழியமைக்கும் விளைவினையும் கொடுக்கிறது.
ஆக்கப்படைப்புகளில் தமிழில் தற்போது பரந்த-அபத்தலியத்தினை வெவ்வேறு படைப்பு ஊடகங்களின் உதாரணத்துடன் பார்வையிட்டு பின்னே ஒரு கட்டுரையில் முன்வைக்கக் கட்டுரையாளர் எண்ணியிருப்பதால், இங்கே அவற்றினைப் பற்றி எதுவும் கொடுக்கப்படவில்லை.
கீழே உள்ள 'படைப்பு' தற்போதைக்கு அநேக வாசகர்களுக்கு, அபத்தலியப்படைப்பாக இருக்கும் என்ற அளவில், அது முன்னே வைக்கப்படுகிறது. வெளியீட்டளவில் ஒரு கனவுத்துவப்படைப்பாகப் பார்வைக்குப் படுவோருக்கு, அதன் பரந்த-அபத்தத்தன்மை அவரளவில் காத்திரவீச்சக்கோணம் குறைந்துபோகும்; மற்றையோருக்கு அதன் பரந்த-அபத்தத்தன்மை தவிர்க்கமுடியாததாகும்.
எழுது இடம் + நேரம் கருதி பரந்த-அபத்தலியத்தின் மீதான மிக மிக அடிப்படை முன்வைப்புக்களுடன் இங்கே நிறுத்திக் கொண்டாலும், அது பற்றி மேலும் விரிவான கருத்துக்கள் முன்வைக்க வேறு விரிவான சந்தர்ப்பங்களும் விவாதமேடைகளும் அமையும் என்று கருதுகிறேன்.
இந்தக்கட்டுரையும் தானே ஒரு செவ்விய (classic) பரந்த-அபத்தத்தன்மை படைப்பிற்கான உதாரணம் ஆகலாம் என்ற நம்பிக்கையுடன், தமிழ் ஆசான்(கண் கோளாற்றால், அப்பாவித் தமிழ் அரசன் மீது பழியைப் போடுகிறவர்களை பசியாத புலியும் பசித்துப் புசிக்கட்டும்).
பிரதியொன்று.
கடவுள் தன் வலக்கைக்கட்டைவிரலாகிப் போனார்;
போனார் கடவுள் கட்டைவிரலாகி,
தன் கட்டைவிரலான உடலின் சிறு கட்டைவிரல் அசைத்து வினை செய்யமுடியா அளவிற்கு.
கடவுளின் விரல்கள் தேய்வதில்லை;
ஆனால், அவர் அவை சிறிதாகிப் போகும்,
அவரின் உடலோடு, உடலின் அளவு சம்பந்தப்படா மனதோடு.
வினை செய்யமுடியா கடவுள் என்னவாவார்?
படைத்தல் அற்றவை தம் இருப்புச் செத்துப்போகும்.
கடவுளும் அவ்விதமே செத்துப்போவார்.
கூடவே, கடவுள் என்ற பெயரும்.
பிறகொருமுறை,
புதிதாய் ஒரு கடவுள் பிறப்பார்,
தன் கட்டை விரற் கரு செத்த கடவுள் உருவம் எழ விரிந்து வைக்க.
நேரம் படைத்துச் செத்தக்கால்,
அக்கடவுளும் கடவுள் தன் கைக்கட்டைவிரலாகிப் போவார்,
இடதோ, வலதோ,
தன் வினை செத்துவைக்கும் அளவிற்கு,
கட்டைவிரற் கட்டைவிரல் குட்டித்துப்போயிருக்க
அமீபாவின் பின்னூட்டம்-1
என்றைக்கு சொரென் கீர்கேகார்ட், ஹெஹலின் தனிமனித நிகழ்வுகளுக்கு எதிரான வாதத்தையும், ஒட்டுமொத்த வரலாற்று போக்கின் மீதான துதிபாடுகையை எதிர்த்ததோடு தனிமனித ஆதரவு நிலைப்பாட்டை தீவிரமாக ஆதரித்தாரோ என்றைக்கே அபத்தலியலின் விதை நாட்டப்பட்டுவிட்டதெனலாம். Art of Analytical Cubism வகையறாக்கள் ஓரிருப்பின் மீதான பல்வகைப்பார்வை மாதிரிகளை அறிமுகம் செய்துவிட்டன. திட்டமிடுதலின் விளைவாக்க கலை மாதிரிகளின் தகர்வு டாடாயிச நிலவுகைக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. திட்டமிடல் கலையுருவாக்கம் போலியை நிலைநிறுத்துவதெனும் கருத்துருவாக்கம் சந்தர்ப்பசக் கலைப்படைப்புருவாகத்திற்கு அடிகோலியது. பல்சாத்தியத் தோற்றப்பார்வைகளை உருவாக்கல் அகவுணர்வுக்கு இனம்புரியாத அர்த்தப்பாடுகளை உணர்த்துவதாக உணர்ந்தார்கள். டாடாயிச மனிதன் வாழ்வின் மீதான பெரும் அபத்தம் கனவுகளைக்குலைத்து போடுகிறது என்றும் அதனூடான நிச்சயமற்ற இருப்பு வாழ்வின் போலி அர்த்தப்பாடுகளை பொய்யாக உணர்த்தி நிற்கின்றது என உணர்ந்தான். வாழ்வின் பெரும் சுழலுக்குள் சிக்கி போகின்ற மனிதன் தான் தோற்றுப் போவதாக உணர்கின்றான். அலைதலையே தனது வாழ்வின் கருப்பொருளாக கொண்டு அலையத் தொடங்குகின்றான். அபத்தத்தில் இருந்து தப்பியோடும் மனிதனை இருப்பின் நிச்சயமின்மை வாழ்வின் ஒவ்வொருகணங்களிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இவ்வகை வாழ்வு கலகக்காரர்களை உருவாக்குகின்றது. இதன் அடிகோலாகத்தொடர்ந்த இருத்தலியல் வாழ்வுக்கான பல்தேர்வுகளின் சாத்தியப்படுத்தியப்பாடுகளை உணர்த்தியது. உலகத்தின் வாழ்வுத் தெரிவுகளில் தெக்காட்டு(தளம்) இன் முடிவிலி சாத்தியப்பாடுகளை உருவாக்க கோரியது.
If 2D (00,01,0infinty... 10,11,1infinity... infinity0,infinity1,infinityinfinity). சாத்தியப்பெருக்கத்திற்கு ஐன்ஸ்டீனின் பல்பரிமாணம் பற்றிய ஊகங்களும் காரணமாயின. அபத்தம் என்ற சொற்பதமும் அதன் உணர்தலுமே இருத்தலியலுக்கு வழிகோலியது. வாழ்வென்பது அபத்தமானது என்றும் வாழ்வுக்கு ஒருநிலைப்படுத்தப்பட்டதல்லாமல் இயங்குநிலைச் பல்சாத்தியமான அர்த்தப்பாடுகளைக் தேடும் உணர்வு நிலையாக இருத்தலியல் அறிவித்துக் கொண்டது. மரபார்ந்த இறுகற்பாடுகளைத் தவிர்த்த புத்தூக்க தத்துவமாக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டது. விஞ்ஞானம் பற்றிய நிலையற்ற கருதுகோட்பாடுகள் வாழ்வு பற்றிய மரபை மீற மனிதனுக்கு உதவியது. (சாள்ஸ் டார்வின் பரிணாமக் கொள்கை மற்றும் ஐன்ஸ்டீனின் பெருவெடிப்புக்கொள்கை போன்றவை விஞ்ஞான உலககங்களின் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. இவை இரண்டுமே ஒருவித ஒற்றைத் தன்மையை மறுதலித்தன. சார்ள்ஸ் டார்வின் மனிதன் தோற்றம் பற்றிய சுழல்தன்மைக் கோட்பாடு அதாவது பூச்சியத்தில் இருந்தான முடிவிலி நோக்கிய பரிமாணம் அக்கால மனிதனை போன்ற ஆதாமை தூக்கி கடாசியது. அடுத்து F=Ma நியூட்டனின் எனும் நேர்கோட்டு கணித முறைமை E=mC^2 எனும் சிக்கல் சமன்பாட்டால் சிக்கலாகியது.) அத்துடன் தத்துவமும் தன்னை நேர்கோடு மற்றும் ஒற்றைத்தன்மையில் இருந்து விடுவித்துக்கொண்டது. இத்துடன் நவீனத்துவம் தன்னை முடித்துக்கொண்டு பின்னவீன நிலவரத்துக்கு வந்தது. பின்னவீனத்துவம் நவீனத்துவத்தின் தொடர்ச்சியையும் மறுதலிப்பையும் தன்னகத்தே கொண்டதாகும். மறுதலிப்பின் மாறுகைக்கான கணத்தை நாம் பூச்சியமாக கொள்ள முடியாது. பூச்சியமற்ற இவ் இடைவெளியில்
தொடர்தன்மையான தளத்தில் பெயரிலி பரந்த அபத்தலியலை நிலைநிறுத்துகிறார். இது நவீனத்துவத்தையும் பின்னவீனத்தையும் இணைக்கும் அரூப இடைவெளியில் தன்னை மாறும் புள்ளியாக நிலைநிறுத்துகிறது. பெயரிலியின் பரந்த அபத்தவியலுக்கு எவ்வாறு நவீனத்துவ தத்துவ தொடர்ச்சிகள் ஆதரவானவையோ அதே போல பின்னவீனக்கருதுகோள்களும் வலுச்சேர்க்கின்றன. அதுமட்டுமல்லாமல் Quantum Physics & Special Relativity போன்றவற்றில் இருந்து கூட நிலைப்படுத்த படாத மற்றும் ஒன்றையொன்று சார்ந்த (மையம் சார்ந்ததல்ல) இயங்குகைக்கான உதாரணங்களை எடுத்துக் காட்ட முடியும்.(அபத்தவியலின் அர்த்த இயங்குகை.) மற்றும் அமைப்பியலில் மொழி மனதை ஆளும் முறைமை மற்றும் சமூக கலாச்சார தளங்கள் உருவாக்கும் மொழி அல்லது மொழி உருவாக்கும் சமூக கலாச்சார தளங்கள் என்பன கூட மேற்படி கட்டுரைக்கு வலுச்சேர்ப்பன. இவ்வாறே அமைப்பியலை ஆட்டம் காண வைத்து பின்னமைப்பியலை சாரவைத்த "ஆசிரியன் இறந்துவிட்டான்" எனும் ரோலன் பார்த்தின் கோட்பாடு பிரதியை எழுதிய ஆசிரியன் கூட அதை மீண்டும் வாசிக்கும் போது ஒரு வாசகனே எனும் கருத்தியலை உள்வாங்குகின்றது பெயரிலியின் இக்கட்டுரை. கட்டுரைக்கு வலுச்சேர்க்கும் பின்னவீனக்கருதுகோள்களுக்கு வருவோமேயானால் DeConstruction, Binary Opposition கருதுகோள்கள். DeConstruction என்பதில் உள்ள பிரதி பற்றிய வார்த்தைகளுக்கான அர்த்தப்பாடுகள் மற்றும் அர்த்தப்படுத்தல்களில் வாசகனுக்கு உள்ள தெரிவுகளும் சுதந்திரமும் அபாரமானவை. முடிவிலியை நோக்கிய சுதந்திரத்தை கொண்டவை.
இனி,
ஓவியம் எனும் வகையில் மேற்சொன்ன நவீனத்துவத்தின் நீட்சிகள் பின்னவீன யுகாந்திர காலம் (பொதுவாக காலத்தால் வரையறுக்க முடியாது.) வரையில் இன்று பலவித அர்த்தப்பாடுகளும் செறிவுகளும் பல்சாத்தியப்பாடுகளும் கொண்டவையாக உருப்பெற்று நிற்கின்றன. மற்றும் அசையும் காட்சிப்படிமங்கள் Digital fine Arts வெளிப்பாடுகை அளிக்கும் அர்த்தங்கள் எண்ணிறைந்தவை. (பெயரிலியின் Digital fine Arts முயற்சிகளைப் பார்க்கவும்.)
இரண்டாம் உலகப்போருக்கு பின் முனைப்படந்த அபத்தவியல் வெளிப்பாடுகள் போர் உருவாக்கிய வெறுமையையும் மரபார்ந்து உள்வாங்கப்பட்டிருந்த மதநெறிமுறைகள், அறம்,வன்முறை, அதிகாரம், கலாச்சாரம், ஒழுக்கம் என போலி மதிப்பீடுகளை பலமாக கேள்விக்கு உள்ளாக்கின. இரண்டாம் உலகப்போர் அளித்த மனவடுக்கள் அதற்கு பின்னான மனிதர்களுக்கு போலிமதிப்பீடுகள் பற்றிய எள்ளலுடன் கூடிய விமர்சனத்தை முன்வைத்தன. அதுவே அபத்தலியலின் வெளிப்பாடுகளாக வலிமை பெற்றன. அல்பேட் காம்யூ வின் அந்நியன் இதற்கான முக்கிய குறியீடாயிற்று. மற்றும் சர்த்தரின் குமட்டல் வாழ்வின் அபத்தத்திருந்து தப்பி ஓடும் இளைஞன் வாழ்விற்கு ஒரு அர்த்தம் இல்லாமல் திண்டாடுகின்றான். Surrealism தன்மையில் கனவும் நினைவும் அல்லாத ஓர் உணர்வினால் திண்டாடும் அவனது உணர்வுகள் நாவலுக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துவிடுகின்றன. அவன் அச்சமூகத்தின் ஒருவித அபத்த குறியீடாகிறான்.
தமிழில் அபத்தவியலை படைப்பிக்களில் வெளிப்படுத்திவருபவர்களாக
சாருநிவேதிதாவையும் ஓரளவுக்கு ஷோபாசக்தியையும் சொல்லலாம். ரமேஷ்-பிரேம் இன் பிரதிகளில் கூட உடலரசியல் என்னும் போது ஒருவிதமான அபத்தலியல் கூறுகளை உணரக்கூடியதாக உள்ளது. அவர்கள் உடலை பிரதிகளில் முன்னிறுத்தும் முறை மரபை மறுத்து அபத்த கூறுகளுடனேயே முன்வைக்கின்றனர். சாருநிவேதிதாவின் படைப்புக்களில் வாழ்முறையின் பல்சாத்தியங்களின் பிரதிநிதிகளும் வந்து போகின்றார்கள். சாரு அபத்தங்களினூடான அர்த்தப்பாடுகளை வாசகன் மீது திணிக்க முயற்சிப்பதில்லை. கதையோட்டத்தோடு ஒட்டுமொத்த சமூக அபத்தத்தையும் எம்மீது கொட்டி போகின்றார். அபத்தக்குவியல்களுக்கிடையே அர்த்தப்பாடுகளை கண்டடையும் தெரிவை அவர் வாசகனிடமே விட்டுவிடுகின்றார். அவ்வாறே சோபாசக்தியும் அவர் வாழ்ந்த பொதுவரசியலை எள்ளலுடன் கேள்விக்கு உள்ளாக்குகிறார். அதன் புனிதம் மீது லாவகமாக சேற்றை அள்ளி வீசுகிறார். இறுதியில் வாசகனுக்கு சேறு பூசப்பட்ட புனித உருவம் ஒன்று எஞ்சுகின்றது. இதை விட, நா. சுந்தரலிங்கம் இன் நாடகமான 'அபஸ்வரம்'. இது ஒழுங்குக்கு உட்படுத்தப்பட்ட ஸ்வர நிலைமையினை மீறி ஒலிக்கும் குறியீடாகின்றது. 4 பாத்திரங்களின் வாழ்வு மீதான பார்வையுடன் வாழ்வின் போலிமதிப்பீடுகளை கேள்விக்கு உள்ளாக்குகின்றது. காற்றிலே அள்ளி வீசப்படும் காகிதக்கட்டுடன் பொதுமகன் ஒருவன் உட்கார்ந்து இருக்க மதகுரு, விஞ்ஞானி, பேராசிரியர் போன்றோரின் வாழ்வு மீதான அபத்தப்பார்வையை எள்ளிநகையாடுகின்றது நாடகத்தின் கதை. காகிதங்கள் காற்றிலே பறந்து தொலைந்து போகாமலிருக்க தன்னாலான முழுமுயற்சியையும் எடுக்கிறான் அம்மனிதன். ஆனால்
இறுதிவரையும் அதை செய்ய முடியவில்லை. கடைசியில் மதகுரு, விஞ்ஞானி, பேராசிரியர் போன்றோரிடம் எவ்வாறு அதை செய்வது என வினவுகின்றான். அவர்கள் தமக்கேயுரிய மதிப்பீடுகளில் அதைச் சொல்ல முயல்கின்றனர். அவர்களின் அறிவுரையால் அவனால் அதனைச் சரிவரச் செய்ய முடியவில்லை. முயற்சியின் இறுதியில் தனது காகிதங்கள் முழுவதையுமே இழக்கிறான். காகிதங்களுக்குப் பதிலாக அவன் கையில் எஞ்சுவது வாழ்வின் அபத்தமே.
இனி,
பெயரிலியின் விடயத்துக்கு வருவோம். பெயரிலி தனது கட்டுரையில் அபத்தலியல் படைப்பு என்னும் போது தனியே வடிவம், வெளிப்படுகை மற்றும் உணர்திறன் அல்லது உள்வாங்கும் திறன் என்பவற்றோடு மட்டுப்படுத்திவிடுகின்றார். அத்துடன் பின்னவீனக்கருத்தியலை பெரும்பாலும்
உள்வாங்கியே அபத்தலியம் பற்றி விளக்க முற்படுகின்றது இக்கட்டுரை.
//" படைப்பாளியின் எதுவிதமான கருத்துவெளிப்பாட்டினையும் தெளிவாகக் கலை நுகர்வோனுக்கு வழங்கமுடியாத அல்லது தானாகவே எதுவித தெளிவான கருத்துடனோ அல்லது ஏதுவித செய்தியினையும் தனக்குள் உள்ளடக்கி ஆக்கப்படாத எல்லாவகைப் படைப்புக்களும் பரந்த-அபத்தலியப்படைப்புக்கள் எனப்படும்."//
என்று சொல்லும் பெயரிலியின் கருத்துடன் ஏன் நாம் முழுமையாக உடன்பட முடியாது என விளக்க தேவை இல்லை என நினைக்கிறேன்.
பெயரிலி இக்கட்டுரையை திடீரென இங்கே மீள்பிரசுரம் செய்ததற்கான காரணம் என்ன?
றயாகரனின் போலிமதிப்பிடுகள் பற்றிய உரையாடல்., றயாகரன் அர்த்தம் கொள்ளும் புள்ளியில் உடன்பாடு காணாமை. அமீபா, மயூரன் போன்றோரது உரையாடல் செலுத்திய தாக்கம். இம்மூன்று விடயங்களும் இதற்கு மூல காரணமாக இருந்திருக்கலாம் என நினைக்கின்றேன்.
பி.கு-1:-
நாடகம் மற்றும் திரைப்படங்களில் அபத்தவியலின் வெளிபாடுகள் பற்றி எழுதுவதற்கு இருந்தேன். இதைப் பற்றி ஒரு புத்தகம் போடுமளவுக்கு எழுதமுடியும். எழுதுவதின் அபத்தம் காரணமாக இத்துடன் நிறுத்திக்கொள்கின்றேன்.
பி.கு-2:-
பாலியலில் அபத்த வெளிப்பாடுகள் சமூகத்தில் அதிர்வை ஏற்படுத்தக் கூடியவை. El Topo எனும் திரைப்படத்தை இயலுமானால் பார்க்கலாம். நமீதாவின் படத்தை போட்டு கிறங்கடிக்க வைக்கும் ஓசை செல்லா போன்றோர் இதைப் பார்த்தல் நல்லது. கிளர்ச்சி உருவாக்கி வைத்திருக்கும் மதிப்பீடுகளில் இருந்து வெளிவர உதவும்.
பி.கு-3:-
பௌதீகவியல், கணிதம், தத்துவம் , கலை போன்றவை பெரும்பாலும் ஒன்றையொன்று சார்ந்தவை. அவற்றை ஒன்றையொன்று Cross-Refer பண்ணுவதாக சிந்தனை முறை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
பி.கு-4:-
பெயரிலிக்கு நன்றி. எனது பின்னூட்டங்களை அனுமதிப்பதற்கு. (அலுப்படிக்கிறனா பெய்ஸ்? எனக்கு வேற வழி இல்லையே..!!! கோச்சுக்காதீங்கவா...).
பி.கு-5:-
ஸ்தானோவிஸ்டுகளுக்கு எதிராக பன்முனைத்தாக்குதல் செய்யும் திட்டம் ஒன்று உண்டு. மார்க்சீயம் பற்றிய நல்ல பார்வையை ஏற்படுத்த் வேறுவழி இல்லை.
இன்னும்,
1.
பரிமாணம் பற்றிய டார்வினின் கருத்தியலின் கலக்ப்பார்வை- An Abstract of an essay on the origin of species & varieties. பெரும் மரபு, மதம் சார்ந்த பார்வையை புரட்டிப்போடல்.
ஒப்பிடுக தத்துவ போக்கில் அபத்தலியலின் இடமும் தளமும்.
2.
F=ma எனும் நேர்கோட்டுத்தன்மை E=mc2 ஆல் எவ்வாறு F=ma சார்ந்து சிக்கற்தன்மை ஆக்கப்பட்டது என்பது விடயம். வரைபடங்களுடன் விளக்கல் தெளிவை தரக்கூடும்.
3.
மார்க்சீயம் அறிவியல் கொள்கை சார்ந்ததல்ல எனும் ஆய்வு கார்ல் பொப்பெரால் The logic of scientific discovery கூறப்படுகிறது. பெரும்பாலும் நேர்கோட்டு தன்மையும் ஒருவிதமான கருத்துமுதல்வாதமும் நிறைந்திருப்பதாக கூறிச்செல்கின்றார்.
சிறீரங்கனின் பின்னூட்டம்-1
//3. மார்க்சீயம் அறிவியல் கொள்கை சார்ந்ததல்ல எனும் ஆய்வு கார்ல் பொப்பெரால் The logic of scientific discovery கூறப்படுகிறது. பெரும்பாலும் நேர்கோட்டு தன்மையும் ஒருவிதமான கருத்துமுதல்வாதமும் நிறைந்திருப்பதாக கூறிச்செல்கின்றார்.//
அமீபாக் குஞ்சு அள்ளிப்போடும் வெட்டுத்துண்டுகளுக்கு வலுச்சேர்ப்பதற்காக இப்போது கார்ல் இறாய்முண்ட் பொப்பரை(Sir Karl Raimund Popper) துணைக்கழைத்து மார்க்சியம் என்பது "பெரும்பாலும் நேர்கோட்டுத்தன்மையும் ஒருவித கருத்துமுதல்வாதமும் நிறைந்திருபதாகச் சொல்கிறார்".என்பதால்,அட நம் திறந்த சமுதாயத்தின்(After the Open Society) பிரதிநிதி,அது கத்தோலிக்க அறக்கட்டளைகளால் கௌரவ"டாக்டர்"பட்டங்கள் பல பெற்றவராச்சே!ஆக,கார்ல் போப்பர் சொன்னால் அது நிச்சியம் கடவுள்(Das offene Universum) சொன்னதாகவே இருக்கும்.மார்க்சியம் குறித்த மதிப்பீடுகளுக்குச் சுவர் எழுப்பியெவரும் வைக்காதவரை அது கல்லடிபட்டுக்கொண்டுதாம் இருக்கும்.அதுதான் சிறப்பென்பதால் இதையே கார்ல் போப்பரின் தாய்மொழி வாயால் எங்கட குஞ்சுகளும் கேட்பதற்காக"Popper bezeichnet Marx als bedeutenden Ökonomen und Soziologen" (-Die offene Gesellschaft und ihre Feinde :211)இப்படிச் சொன்னவர்கள் ஆயிரம் கோடிப்பேர்கள்.இப்போது கார்ல் போப்பர் சொன்னதால கார்ல் மார்க்ஸ் அதி முக்கியமான சமூகப் பொருளியலாளனாக நாங்க எடுக்கத்தாம் வேணுமென்றில்லை.அவர் சொன்னதற்கு அப்பால் சேறடிப்பதற்கான தோற்று வாய் நம்ம கார்ல் போப்பருக்கு எப்படி உருவாகுதென்பதற்குச் சுவாரிசியமான நிகழ்வொன்று வந்து தொலைகிறது.வீனில் காவல் துறைகஇகும் கம்யுனீஸ்டுக்களுக்குமான கெடுபிடியில் ஒன்பது காவல் துறை நாய்கள் செத்தவுடன்(;(wie bei einer gewaltsamen Auseinandersetzung zwischen Kommunisten und der Wiener Polizei acht Menschen ums Leben kamen, wandte er sich schockiert vom Marxismus ab und wurde zu einem seiner konsequentesten Kritiker) புட்டுக்கொண்டு வந்த அவரது திறந்த சமுதாயத்தின் தௌ;ளிய மனது கேகலின் கருத்தியல் மனதைப் பின்பற்றிய கார்ல்மார்க்சிடமும் இத்தகைய போகஇகு நிலவுவதாகச் சொன்ன கையோடு நம்ம அமீபாக்களுக்கு அரிக்கத் தொடங்கிவிடுகிறது.இவர்களுக்குச் சொல்லக்கூடிய ஒரு அருமையான வாக்கியத்தை கார்ல் இறாய்முண்ட் போப்பரே சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்:"Wers nicht einfach und klar sagen kann, soll schweigen und weiterarbeiten bis erst klar sagen kann“
"எவருக்கு, இலகுவாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லும் தெளிவில்லையோ அவர் மௌனித்தபடி தொடர்ந்து கற்றுத் தெளிவாக உரைக்கும் வரை மௌனித்திருப்பது உத்தமம்" என்பது நாம் ஏற்பதுதாம்.அது அமீபாக்களுக்குப் பெரிதும் பொருந்தும்.ஏனெனில,; கார்ல் போப்பரே அவிட்டுவிட்ட தத்தவங்களுக்குக் கருத்துமுதல் வாதம்தாம் காரணமாகிக் கிடக்கிறது.அவரது முன்று உலகத்திலும் முழுமுதலாய் விரிவது:
Welt 1, das ist die physikalische Welt
Welt 2, die Welt der individuellen Wahrnehmung und des Bewusstseins
Welt 3, die Welt der geistigen und kulturellen Gehalte, die vom Einzelbewusstsein unabhängig existieren können (z. B. die Inhalte von Büchern, Theorien oder Ideen)
இந்த மூன்று உலகத்திலும் முடிவாக விரிவது கருத்தியலால் உந்தப்பட்ட முடிவுகள்தாம். கண்றாவி இந்தப் பொருளுலகத்துள் பௌதிக அடையாளங்கள் முட்டிக்கொள்ளும் எல்லாக் காரணத்தினதும் முடிவுகளும் கார்ல் போப்பர் குறிப்பிடவதுபோன்று உண்மைக்கு அருகினில் என்ற சங்கதியுள்தாம் கண்ணிகளைப் புதைத்து வைத்திருக்கிறது.இந்தக் கதையில் மார்க்சியத்தைக் கருத்துமுதல்வாதம் என்பதின் தொடர் பரிணாமங்கள் நாம் அறிவதில் அமீபாவுக்கு அவசியமொன்றுண்டு.அது எப்பவும்போலவல்ல இப்போதைய தேவையின் தொடர் நிகழ்வுகள் பெயரிலியைச் சொல்லித் தான் போடும் கோல்களாக்க முனைகிறார்.உணர்வினது தனித்துவமான உண்மை எதுவென்று நாமும் புரிந்துகொள்வதற்கு நீண்டவொரு சமாந்திரப் பாதையொன்று விஞ்ஞானத்தில் கொட்டிக்கிடப்பதால் குறுக்குப் பாதை எதற்கு?உலக உயிரினதும் பண்பாட்டினதும் நிகரத்தாண்டவம் தனித்துவமான உணர்வை உற்பத்தியாக்குவதன் பருமம் இன்றைய இந்த உலகத்தின்-குறிப்பாக மேற்குலக இன்னுங் கொஞ்சம் தாண்டி நம்ம அமெரிக்க மாமாக்கள் சொல்வதுபோல்(Hier möchte ich noch eine weitere Aussage Poppers hinzufügen, die lautet: `Es kann keine vollkommene Gesellschaft geben.´உலகம் அனைத்தும் ஒருமைப்படும் சமுதாயம் கிடையவே கிடையாது. (Vgl. das `Nachwort´ zu Popper/Lorenz: Zukunft (Anm. 29), S. 138. ... Und er fügt hinzu, S. 140: `Wenn du eine vollkommene Gesellschaft anstrebst, so wirst du sicher gegen die Demokratie sein.உலகம் அனைத்தும் ஒருமைப்படும் சமுதாயத்தை; நோக்கி நீ போராடினால் நிச்சியமாக ஜனநாயத்துக்கு எதிராகக் காரியமாற்றுகிறாய்´)"
"நாங்கள் திறந்த தனித்துவமான சமுதாயம்"அதைத் துலைப்பதற்கே காரியமாற்றும் இஸ்லாமியப் பயங்கரவாதம்...கயிறுவிடும் தளம் கார்ல் போப்பரின் தேட்டம்தாம் அமீபா.கண்ணைக் கொஞ்சம் கசக்கி வெட்டுத்துண்டுகளை மார்க்சியத்தின்மேல் கொட்டாமல் இன்றைய பெருங்கதையாடற் குஞ்சுகளையும் வாசித்து ஒருவகைமாதிரியான வடிவத்தை எடுங்கோ.அப்போதாவது பார்ப்பம்...
அமீபாவின் பின்னூட்டம்-2.
Karl Raimund Popper ஆல் முன்வைக்கப்பட்ட கருத்தியல், அறிவியல்வாதத்தின் மரபார்ந்த இறுகற் தன்மையை சற்று மாற்றியமைத்தது. அறிவியல் கண்டுபிடிப்பில், கண்டுபிடிப்போனின் முனனுபவம் சார்ந்து கண்டுபிடிப்பின் வழி அல்லது முடிவு தீர்மானிக்கப்படும் என கூறியவர். (முற்று முழுதாக அல்ல). ஆயினும் அறிவியல் கண்டுபிடிப்பை தர்க்கவியலும் வழிநடத்துவதாக நம்பினார். ஆக தர்க்கவியலாலும் முன்னனுபவத்தாலுமே கண்டுபிடிப்பு வழிநடத்தபடுகிறது என கூறினார். கண்டுபிடிப்பாளனின் அக உணர்வு சார்ந்து விகிதங்களில் மாற்றம் ஏற்படலாம். அறிவியல் கண்டுபிடிப்பின் வழிப்போக்கில் தரவுச்சேர்க்கையில் இருந்து இறுதிமுடிவுக்கு வரும்வரையிலான பாகம் வரை கண்டுபிடிப்பாளன் பங்குபெறும் நிகழ்வுகள், சூழல் போன்றவை அக்கண்டுபிடிப்பில் தாக்கம் செலுத்துகின்றன. கண்டுபிடிப்பு வெறுமனே தரவுகளோடும் விஞ்ஞான முடிவோடும் வரையறுக்கப்படுவதில்லை ஏராளமான இடைக்காரணிகள் அதனுள் தாக்கம் செலுத்துகின்றன. அவற்றின் தீர்மானங்கள், 'உண்மைகள்' செலுத்தும் தாக்கம் மிகப்பெரியது. அவை உலகத்தின் முன்பு ஏற்கனவே உண்மைகளாக்கப்பட்டவை. அவற்றின் தாக்கத்தை நாம் சிறிய கணியமாக கணித்தல் எவ்வளவு பிழையானது என Karl Raimund Popper கேள்வி எழுப்பினார்.
மரத்தில் ஏறும் (கு)ரங்கார் ஒருத்தர் அதன் கிளை வழியாகச் சென்று எதேச்சையாக ஒரு இலையைப் புடுங்க எத்தனிக்கின்றார். அதற்கான தெரிவு கிளைவழியாக இருக்கின்றது என வைத்து கொண்டால், அவர் தனக்கு வசதியான கிளைகளில் தாவி சென்று அதனை பற்ற முயல்கின்றார். அவர் ஒரு கிளையை தெரிவு செய்தவுடன் மற்ற கிளைகளில் உள்ள இலைகள் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்கின்றன. அவ்வாறே விஞ்ஞானம், வரலாறு இரண்டும் ஏராளமான தெரிவுகளை மறுத்து தாம் தெரிவு செய்த பாதையில் செல்கின்றன.இத்தர்க்கவியலை கணனித்துறையில் உள்ளவர்களால் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும். இவ்வாறே கண்டுபிடிப்புகள் தமக்கு முதலான கண்டுபிடிப்புடன் உறவாடுகின்றன. முக்கியமாக கண்டுபிடிப்புகளுக்கு உதவி செய்யும் கருவிகளில் நாம் எவ்வளவு தூரம் உடன்படுகின்றோம் என்பதே. மற்றும் கண்டுபிடிப்பின் ஆரம்பநிலைகள் கண்டுபிடிப்பை வரையறை செய்து அதன்வழி நகர்கின்றன. ஒருவித இலட்சிய நிலைமை எய்தலுக்கான செயல்வழிமுறையாக அறிவியல் வளர்வதை கேள்விக்கு உள்ளாக்கினார்.
அசையாதபுள்ளிகளாக நிலைநிறுத்தப்பட்ட அறிவியற்கொள்கையை அவர் இயங்கியல் புள்ளியாக மாற்றமுனைந்தார். மிகமுக்கியமான விடயம் என்னவெறால் அறிவியற்கொள்கையின் அறிவிப்பின் போதே அது தன்னை பொய்ப்பிப்பதற்கான வெளியை வழங்கிவிட்டதாக கூறினார். ஒருவிதமான இறுகல் நிலைமைகளில் இருந்து தத்துவ, அறிவியல் கோட்பாடுகளை மீட்டு எடுப்பதற்கு அவரது சிந்தனைகள் உதவின. அத்துடன் அவ்விறுகல் நிலைமைக்கு போகவிடாமைக்கான சிந்தனாமுறைமை இங்கு முக்கியமானது. இவரது சிந்தனை எங்கும் தர்க்கவியலின் கூறுகளே விரவிக்கிடக்கின்றன. தர்க்கம் எப்போதும் இயங்கியலை சாத்தியப்படுத்தும்.
மற்றும் பொருளியலில் பொப்பரின் பங்கு மிக முக்கியமானது. எவ்விடயத்தையும் ஒருவிதமான பிரச்சனைக்கு உரிய தீர்வாக அணுகும் விதத்தை வலுப்படுத்தினார்.
PS1 ---> TT1 ---> EE1 --->PS2
என்பது பொருளியலுக்கு மட்டுமல்லாது பல்வேறுதுறைகளில் முக்கியம் பெற்ற Formula ஆகும். அதாவது தரப்பட்ட பிரச்சினைப்பாடுகளை அணுகுதலும் அவற்றுக்கான தீர்வுமுறைகளை ஆராய்தலும் ஆகும். நிலைப்படுத்தப்பட்ட சிந்தனைமுறைமைக்கு அப்பாற்பட்டு அணுகதலே முக்கியமானது. மேலும் நிலைப்படுத்தப்பட்ட உண்மைகள் என்று எதுவும் இல்லை. உண்மை பற்றிய போக்கு ஒன்றே உள்ளது என கூறிச் செல்கின்றார். இதன் பொருத்தப்பாடுகள் ஏலவே அறியப்பட்ட ஒன்றே.
(பரிணாமம், டார்வின், நியூட்டன், ஐன்ஸ்டீன் etc..)
மார்க்சீயம் மீதான பொப்பெரின் பார்வையை எடுத்துக்கொண்டால் கூட அறிவியல் முறை மீதானா தனது அதே விமர்சனத்தையே தத்துவவியல் மீதும் வைத்தார். முதலாளித்துவ சமுதாயம், நுகர்வின் மூலம் ஏற்படுத்தியிருக்கும் சமூக்ப்பிளவு என்பது புரட்சிகர போக்கை குறைநுகர்வு சமூகத்தால் அதிநுகர்வு சமூகத்தின் மீது ஏற்படுத்தும் என மார்க்ஸ் நம்பினார். மார்க்சீயம் என்ற அறிவியல் கண்டுபிடிப்பு பொப்பெரின் கொள்கை மூலம் தவறென ஆகியது. நிபந்தனை மாற்றம் பற்றிய மார்க்சீய நேயர்களின்(!) கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. உலகம் மார்க்சிற்கு பிறகு 100 வருடங்களை கடந்துவிட்டது. சமூக ஒழுங்குகள் ஏராளமான மாற்றங்களைப் பெற்றுவிட்டன. நிபந்தனைகளை மாற்ற வேண்டிய கட்டாயப்படுத்தலுக்குள் மார்க்சீயம் வந்துவிட்டாலும் கூட பொப்பெரின் முடிவின்படி பிழையென ஆகிவிட்டது. தர்கவியலின்படி சரியென்று வைத்து கொண்டால், கடவுள் பற்றிய கோட்பாடுகள் எவ்வாறு காலத்தை உள்வாங்கி நிலைத்து நிற்கின்றதோ (கேவலமாக, பொய்யாக ) அதே போல மார்க்சீயமும் ஆகிவிடும் அபாயம் இருக்கின்றது. ஒன்று மட்டும் சொல்வேன் மார்க்சீயம் என்ற பேரை விட்டு அதன் மனிதநேயத்தை உள்வாங்கி கொள்பவன் தான் மார்க்சிற்கு அண்மையில் பயணிப்பவன். நுகர்வுக்கலாச்சாரம் பற்றிய உள்வாங்கல்களே மார்க்சீயம் பற்றிய உணர்வுநிலைக்கு தேவையானவை. மார்க்ஸ் விரும்பியது அதைத்தான். பொப்பெர் தனது வாதத்தில் எதுவுமே தற்காலிகமானது என கூறிச்செல்கின்றார். மேலும் அவரது உண்மைக்கு அண்மித்ததான நகர்வு என்பது ஒருவித Normalize தன்மையை உருவாகி, இயங்கியலை சாத்தியமாக்கின்றது. (கணிதத்தில் Calculas போன்று) பல்சாத்தியப்பாடுகளை கொண்ட தளத்தில் நிகழ்தகவின் கணியத்தில் வாழ்வு நகர்வதாக உணர்ந்தார். பல்லாயிரம் தாயக்கட்டைகள் பல்வேறு தளங்களில் தமது விளையாட்டை நிகழ்த்தி வாழ்வை நகர்த்திச் செல்கின்றன. வேண்டுமானால் முட்டாள்தனமாக சிந்திப்பவர்களுக்காக மார்க்சீயம்1, மார்க்சீயம்2, மார்க்சீயம்3,மார்க்சீயம்4,மார்க்சீயம்5,மார்க்சீயம்6.... என பெயரிட்டால் இவர்கள் திருந்தகூடும். ஆக, பொபெரின் கொள்கை மார்க்சீயத்தை வீரியத்துடன் நகர்த்தி இயங்கிலை சாத்தியமாக்கும் இல்லையா???
இனி சிறீரங்கன் என்பவரது புசத்தலுக்கு வருவோம்..
//...அட நம் திறந்த சமுதாயத்தின்(After the Open Society) பிரதிநிதி,அது கத்தோலிக்க அறக்கட்டளைகளால் கௌரவ"டாக்டர்"பட்டங்கள் பல பெற்றவராச்சே!ஆக,கார்ல் போப்பர் சொன்னால் அது நிச்சியம் கடவுள்(Das offene Universum) சொன்னதாகவே இருக்கும்..//
என்று சொல்கிறார் ஒரு 37 வயசு பெரியவர். அவருக்கு பொபெர் என்ன சொன்னார் என்றே விளங்கவில்லை.. ஹலோ பெருசு, தனியே தத்துவம் மட்டும் படிக்காம அதோட சேர்ந்த வேற துறைகளையும் படியுங்கவா.. அப்ப தான் சிலது விளங்கும்.. அப்ப தான் புத்தி தெளியும்.. இப்பிடியே விடா அப்புறம் சுரண்டித்தான் எடுக்கணும். மூளையை எரிக்க மட்டும் 3 நாள் தேவை.
//...வீனில் காவல் துறைகஇகும் கம்யுனீஸ்டுக்களுக்குமான கெடுபிடியில் ஒன்பது காவல் துறை நாய்கள் செத்தவுடன், புட்டுக்கொண்டு வந்த அவரது திறந்த சமுதாயத்தின் தெள்ளிய மனது கேகலின் கருத்தியல் மனதைப் பின்பற்றிய கார்ல்மார்க்சிடமும் இத்தகைய போகஇகு நிலவுவதாகச் சொன்ன கையோடு நம்ம அமீபாக்களுக்கு அரிக்கத் தொடங்கிவிடுகிறது..//
உங்களுக்கு இப்பவே அரிக்கெக்கை எங்களுக்கு அரிக்காதா? ஹெகலின் மனதை பின்பற்றி வந்த்தல்ல அது. மேலே விளக்கியிருக்கிறன் ஒரு நாளைக்கு வேலைக்கு லீவை போட்டுடு இருந்து விளங்கும்.
//.."எவருக்கு, இலகுவாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லும் தெளிவில்லையோ அவர் மௌனித்தபடி தொடர்ந்து கற்றுத் தெளிவாக உரைக்கும் வரை மௌனித்திருப்பது உத்தமம்"..//
உதைத்தானெ கண்ணா புலி உங்களுக்கு சொல்லுது. நீ இரு நான் போராடுறன் எண்டு. கேட்டுக்கொண்டு இருங்கோவன். சும்மா ஒவ்வொரு நாளும் நித்திரையால எழும்பி புலிக்கு பாசிச வால் 2 இஞ்ச் வளர்ந்திட்டுது பினாமிபுலிகள கனவில கண்டன் என்று புசத்துறீங்க..
Welt 1, das ist die physikalische Welt
Welt 2, die Welt der individuellen Wahrnehmung und des Bewusstseins
Welt 3, die Welt der geistigen und kulturellen Gehalte
equal to,
World 1: the world of physical objects and events, including biological entities
World 2: the world of mental objects and events
World 3: the world of the products of the human mind
உளவியல் மீது மார்க்ஸ் அதீத கவனம் கொண்டிருந்த போதும் அவரது எழுத்துக்களில்
அது வராமல் போனது துரதிஸ்டவசமானதே. அதன் பின்னான பொழுதுகழிள் பல உளவியலாளர்கள் மார்க்சீயத்துடன் உளவியலை இணைத்து புதிய கருத்துருவாக்கங்களை உருவாகுவதற்கான முயற்சிகள் நடந்தது. அது உருப்படியாய் நிறைவேறவில்லை. அப்பவே உங்களை போல லொங்கு கூட்டம் ஒண்டு இருந்திருக்குது. கருத்தியல் வாதம், பொருள்முதல் வாதம் வெறுமனே கருத்து, பொருள் சார்ந்ததல்ல.
சிறீ அண்ணா,
எனக்கு ஜேர்மன் மொழி தெரியாது. ரொம்ப கஸ்டப்பட்டு போனேன். அதை தமிழ்ல போட்டிருக்கலாம் தானே.உப்பிடி தான் உங்கட எல்ல வேலையளும்.. விளங்குதே.. ஜேர்மன் தெரியாதவனுக்கு ஜேர்மனில எழுதுறியள்.
ம்ம்ம்..
அப்புறம்,
உங்களை பெரிய கெட்டிகாரன் எண்டி நினைச்சு புல்லரிச்சு போய் இருக்கினம் புளொக்கேர்ஸ்.. உங்கட அவ்வளவு பதிவையும் ஒரு கை பாப்பம் எண்டி இருக்கிறன்.
1.
இலங்கையில் இருந்து இன்றைய பிரச்சனையை பார்க்கும் பார்வையுடன்.
2.
கணிதம் மற்றும் பௌதீகவியல் பார்வையுடன் மட்டும்
உங்கட அரங்கு அதிரப் போகுது. உங்கட புழுத்தலுகள் எல்லாருக்கும் தெரியதானே வேணும்.
புழுத்தல்-1-
1.//..கருத்து வளையுங்களுக்கப்பால் நாம் மனிதவுணர்வகளை...அதிகம் உயர்த்திப்பிடிப்பவன..//
2.//காவல் துறைகஇகும் கம்யுனீஸ்டுக்களுக்குமான கெடுபிடியில் ஒன்பது காவல் துறை நாய்கள் செத்தவுடன.....//
மனித உணர்வு???
தூ...
அன்புள்ள சிறீரங்கன் அண்ணா,
ஆரோக்கியமான உரையாடலை ஆரம்பிக எல்லொருக்கும் விருப்பமே. முன்முடிவுகளுடன் பிரச்சனையை அணுகுபவர்களுடன் அதை நிகழ்த்த முடியாது.
சிறீரங்கனின் பின்னூட்டம்-2.
//..இனி சிறீரங்கன் என்பவரது புசத்தலுக்கு வருவோம்..
//...அட நம் திறந்த சமுதாயத்தின்(After the Open Society) பிரதிநிதி,அது கத்தோலிக்க அறக்கட்டளைகளால் கௌரவ"டாக்டர்"பட்டங்கள் பல பெற்றவராச்சே!ஆக,கார்ல் போப்பர் சொன்னால் அது நிச்சியம் கடவுள்(Das offene Universum) சொன்னதாகவே இருக்கும்..//
என்று சொல்கிறார் ஒரு 37 வயசு பெரியவர். அவருக்கு பொபெர் என்ன சொன்னார் என்றே விளங்கவில்லை.. ஹலோ பெருசு, தனியே தத்துவம் மட்டும் படிக்காம அதோட சேர்ந்த வேற துறைகளையும் படியுங்கவா.. அப்ப தான் சிலது விளங்கும்.. அப்ப தான் புத்தி தெளியும்.. இப்பிடியே விடா அப்புறம் சுரண்டித்தான் எடுக்கணும். மூளையை எரிக்க மட்டும் 3 நாள் தேவை...//
//..அன்புள்ள சிறீரங்கன் அண்ணா,
ஆரோக்கியமான உரையாடலை ஆரம்பிக எல்லொருக்கும் விருப்பமே. முன்முடிவுகளுடன் பிரச்சனையை அணுகுபவர்களுடன் அதை நிகழ்த்த முடியாது...//
ஐயா அறுபது வயதுச் சாமி,எனது மூளையைச் சுரண்டியெடுப்பது இருக்கட்டும். உங்கள் மூளையைப் புரட்டிப்போடுவதற்கு நீங்கள் எழுதிய போப்பர் சாம்பாரே போதும் சாமி.மார்க்சியத்தை உளவியலாலோடு முடுக்கிய புரைட்டின் புண்ணாக்கும் தெரியும் .இது இப்படி இருக்கட்டும்! உங்கள் மார்க்சீயப் புரிதலே அதைவிட படு தேவலை.ஆனால், நீங்கள் காட்டும் படம் நன்றாக ஓடாது தம்பி.கார்ல் போப்பர் அறிதலில் நீங்கள் அவிழ்த்துவிடும் புஷ்வாணங்களைத்தான் நான் கேட்டறியும் நிலையொன்று ஒரு கால் நூற்றாண்டின் முன் இருந்திருக்கும்.எனவே வேலை மெனக்கட்டு போப்பர் படைத்ததை தட்டச்சுத் தட்டுவது அல்ல அறிவு.அதைவிட அவர் எங்கே சறுக்கிறார் என்று உங்கள் புரிதலோடு வாருங்கள்.எனக்குச் சொன்னவைகளை மீள நீங்கள் படித்துப்பாருங்களேன்.அது,கண்ணாடி முன் நீங்கள் நின்று புலம்புந் தரணங்களாக உங்களையே வந்து தாக்கும்.நானெடுத்துப் போட்டவை அவர் தனக்கே உலைவைத்த இனவாதக் கருத்து முதல் வாதத்தை. படபடக்காமல் முழுமையாக வாசித்து, மனித சமூகத்தில் முழு மொத்த மனிதகுலமும் ஒருங்கே இணைய முடியாதென்னும் போப்பரின் பினாத்தலுக்கும்,அதைச் செய்ய விரும்புபவர் ஜனநாயகத்தை எதிர்பதென்பதன் நிறுவல்கள்-வறுவல்களையுங் கொஞ்சம் சொல்லுங்கோ.போப்பர் முன்னங்கொண்ட மார்க்சிய வேடம் ஏன் கலைந்ததென்பதற்கு மேலுள்ள புலுடாக்களும் ஒரு காரணம்.
கேகலில் அந்நியமாதலென்ற கருத்தியலானது கருத்து முதலாய்க் குவிந்திருக்கும் இறையிடமிருந்து அந்நியமானதென்ற பொருத்தப்பாட்டை மீறிக் கார்ல் மார்க்ஸ் கண்ட உழைப்பு ,உழைப்பாளியிடமிருந்து அந்நியப்படுவதற்கான தரணத்தை உள்வாங்கியதற்கும் போப்பர் போடும் முடிச்சைத்தாம் கேகலின் கருத்தியல் மனதென்றேன்.இதைக்கூடப் புரியாத புகழ்பூத்த அமீபா, உங்களின் தாழ்மனதை நான் அறிவேன்.புளக்கரில் எங்கே நம்ம தலைபோய்விடுமொவென அச்சம் வேண்டாம். உங்கள் தலையை உருட்டுவதல்ல என் நோக்கம்.ஏனெனில், நீங்கள் ஒரு மண்ணும் இதுவரை அறிவியற்றளத்தில் எடுத்துப் போடவில்லை.அப்படியெடுத்துப் போட்டால் காட்டுங்கோ நாங்கள் அந்தக் கோட்டைக்குள்ளும் போய்வந்து பார்க்கிறோம்.இப்போது போப்பரின் மக்கள் விரோதக் கருத்துக்களையே உங்களோடும்-மற்றவர்களோடும் பகிர்ந்தது.நீங்கள் அதற்காகப் பெளதிகம்,பொருளியல்,போர்மூலா என்று பாடஞ்செய்து பகிர்வது,நேசரிப் பிள்ளை அன்று படித்த ஏ.பி.சீ.டி.யினை பெற்றோருக்குச் சொல்வதுபோன்றே உங்கள் முயற்சியும் உண்டு.
இறுதியாக வயதுக்கும் அறிவுக்கும்(...) என்ன சம்பந்தமென்று கொஞ்சம் சொந்தமாகச் சிந்தித்துரைக்க முடியுமா?
அமீபாவின் பின்னூட்டம்-3
சிறீ அண்ணன்,
நான் ஒன்றும் பொப்பெரின் விசுவாசியோ பொப்பெரை, பொப்பெர் தான் சமூகத்தை வாழ வைக்க வந்த வழிகாட்டியோ என்று சொல்பவனும் அல்லன். பொப்பெரோடு நான் முரண்படும் கணங்கள் அவரது அறிவியல் பற்றிய கருதுகோள்களிலெயே உண்டு. அதற்கு சமாந்தரமான பர்வையையே அவர் தத்துவம் (பொருளியல் சார்ந்த) மீதும் கொண்டிருந்தார். அதன் பாதக அம்சங்களையும் பேச முடியும். அதுவல்ல பிரச்சனை. உங்களை போன்றவர்களின் நிராகரிப்பு. அது உருவாக்கும் ஆரோக்கியமற்ற சமூக உற்பத்திகள். எனது பிரச்சனை என்னவென்றால் உங்களை போல ஒருத்தரை ஒரேயடியாக முத்திரை குத்தி நிராகரிக்க முடியாத மனநிலையை சார்ந்த சமூகப்பிரதிநிதி. ஏனெனில் இலகுவாக எல்லாவற்றையுமே நிராகரித்து சமூகத்தை இன்னும் மோசமான நிலைமைக்கு கொண்டு போகும் நிலையில் எங்கள் சமூகம் இல்லை என்றே நான் கருதுகின்றேன். எங்கள் சமுகம் சார்ந்து சூழல் சார்ந்து எமக்கு முன்னான தெரிவை, நமக்கு பொருத்தமான தேர்வை எடுத்துக்கொள்ளும் மனநிலைக்கு சமூக யதார்த்தம் எங்களை ஆக்கிவிட்டிருக்கின்றது. உங்களை போல ஒரெயடியாக சில விடயங்களை மறுத்து நிப்பவர்களை காணும் போது அந்த வேதனை அதிகரிக்கின்றது. எழுத்தின் தேவை ஆரம்பிக்கப்பட்ட செயற்பாட்டை முன்னகர்த்தி செல்வதற்கே என அர்த்தம் கொள்பவன் நான். என்றைக்கும் எழுத்தாள அடையாளம் ஒன்று எனக்கு இருக்ககூடாது என்பதே எனக்கான விருப்பம். புலிகளின் பாசிசம் மோசமானது தான். ஆனால். புலிப்பாசிசத்தின் மூலவேர் எது? இச்சமூகம் தான் புலிகளின் பாசிச மனோநிலைக்கு தண்ணீர் ஊற்றியதா என யோசிக்க வேண்டும். (உங்கள் நிராகரிப்பின் அரசியலுக்கு முன்னால் உள்ள பாசிசம் அதைவிட மோசமா இருக்கு சிறீ அண்ணன்.) இங்கிலாந்தில் தமிழ் இளஞ்சமுதாயத்தின் வாழ்வுமுறையை பார்த்தால், புலிகளின் பாசிசம் தான் சரியோ என்ற எண்ணப்பாட்டுக்கு வரவேண்டி இருக்கிறது. துவித எதிர் மனநிலைகளில் வாழுபவர்களை வைத்து எவ்வாறு ஒரு விடயத்தை முன்னகர்த்த முடியும்? (அண்மையில் முசாரப் பற்றியும் பாகிசஸ்தான் பற்றியும் ஒரு பெண் இயக்குநர் தயாரித்த Documentry film ஒன்றை பார்க்க நேர்ந்த போது பெரும் வியப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் மக்கள் சில இடங்களில் ஒரு சர்வாதிகாரியை தமது தெரிவாக வைத்திருப்பதற்கான காரணங்களை கேட்ட போது. அமெரிக்காவின் விழுங்கும் ஏகாதிபத்திய கொள்கையில் இருந்தும் முஸ்லிம் அடிப்படைவாதிகளிடம் இருந்து நாட்டை எவ்வாறு பாதுகாக்க வேண்டி இருக்கின்றது என்பதை விபரித்த போது.) சில விதமான நடைமுறை சார்ந்த செயற்பாடுகள் மட்டுமே அங்கீகரிப்பின் மனநிலையையும் முன்னகர்த்தும் செயற்பாடுகள் பற்றிய கவலை மற்றும் கருத்தியலை உருவாக்கும். அங்கே தான் ஆரோக்கியமான கருத்தியல்கள் பிறக்கும். சிறீ அண்ண்ன், நான் விரும்புவது பூக்கோவினதோ, லியோதார்த்தினதோ, பொப்பெரினதோ,மார்க்சினதோ கருத்துக்களை அல்ல. அதை உள்வாங்கிய உங்கள் கருதுக்களையே. (உங்களது உள்வாங்கல்கள் கூட உங்களது செயற்பாடுகள் சார்ந்து வேறுபடும். நடைமுறையின் பிரச்சனைபாடுகளை நீங்கள் எதிர்கொள்ளும் விதம், அதன் மீதான தீர்வு பற்றிய உங்கள் பார்வை கூட செயற்பாடு சார்ந்து மட்டுமே உருவாக முடியும்.) ஒரு விடயத்தை படிப்பதென்பது மேற்கோள் காட்டுவதற்கு அல்ல சிறீ அண்ணன். செயற்பாடு சராத கருத்தியலக்ள் ஒருவிதமான இறுகல் போக்கையே உருவாக்கும். அதன்மீது செயற்பாட்டு வண்டியை ஓட்டுவது மிககடினமான செயல் என்றே நான் நினைக்கின்றேன். உங்களது பார்வையை தளர்த்துங்கள் அது உங்களை சமூகம் மீது ஆரோக்கியமான பார்வை ஒன்றை உருவாக்கும். மார்க்சின் மனித நேயம் நின்று நிலைக்க பாடுபட உதவும். நீங்கள் சொல்லும் அறிவியல் தளம் என்ற ஒன்று இல்லை. அது ஒருவனது சமூகச்செயற்பாடு சார்ந்து மட்டுமே உருவாக முடியும் என்று நம்புபவன். அதுதான் உங்களது சமூகம் மீதான ஆரோக்கியமான பார்வையை நிரூபிக்கும். அல்லது உங்களது பார்வை ஆரோக்கியம் அற்றதாகவே கொள்ளப்படும் அபாயமிருக்கிறது.
//கேகலில் அந்நியமாதலென்ற கருத்தியலானது கருத்து முதலாய்க் குவிந்திருக்கும் இறையிடமிருந்து அந்நியமானதென்ற பொருத்தப்பாட்டை மீறிக் கார்ல் மார்க்ஸ் கண்ட உழைப்பு ,உழைப்பாளியிடமிருந்து அந்நியப்படுவதற்கான தரணத்தை உள்வாங்கியதற்கும் போப்பர் போடும் முடிச்சைத்தாம் கேகலின் கருத்தியல் மனதென்றேன ..//
அதை நான் எனது கட்டுரையில் தெளிவுபடுத்தி இருக்கிறேன். ஒற்றையாக அப்பிடி நினைக்காதீர்கள். இரண்டுக்கும் இடையிலான புள்ளியில் அவர் ஒன்றுபடுவதை பாருங்கள். ஜோர்ஜ் புஷ் மாதிரி தனியே இரு அர்த்தப்பாடுகள் தாம் இருக்கின்றனவென்ற நிலைப்பாடுகள் எவ்வளவு வன்முறையானவை என்று உங்களுக்கு தெரியும். 0 இற்கும் 1 க்கும் இடையில் உள்ள பரந்த வெளியை நிராகரிக்காதீர்கள். உங்களது துவித எதிர் பற்றுய மனநிலை உங்களைப் பாதிப்பதை விட்டுவிட்டு பார்த்தாலும் உங்களது பிள்ளைகள் மீது தாக்கம் செலுத்தும் அது அவர்களது வழ்வை பாதிக்கும். அவர்கள் தமக்கான தெரிவை சுதந்திரமாக மேற்கொள்வதற்கும் பெரும் தடையாக இருக்கும். அவர்கள் தாமாக ஒரு சமூகவெளியை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்வதற்கு பெரும் தடையாக இருக்கும். அதற்காகவாவது. நான் ஒரு வரியில் சொன்ன பொப்பெரின் கருத்துக்கு பதிவு எழுத தொடங்கிய தாங்கள் எனது மற்றைய கருத்துகளுக்கு எதுவுமே சொல்லவில்லையே... பொப்பெர் என்றவுடன் உங்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளுக்கும் புலி என்றவுடன் ராம் கு ஏற்படும் உணர்ச்சிகளுக்கு ஏதாவது வித்தியாசம் இருக்கிறதாக கருதுகிறீர்களா? இல்லை. முன்னனுபவம் சார்ந்த முடிவுகளுடன் எதையும் அணுகாதீர்கள். இயங்கியலுக்கு அதுவே எதிரியென்று உங்களுக்கு புரிகின்றதா? உங்களுக்கான எனது இரண்டாவது பின்னூட்டத்தில் கூட நான் சொன்னவற்றை விட ஒரு சில வரிகளில் என்னை பிழைபிடிப்பதே உங்களது நோக்கமாயிருக்கிறது. அதை முன்முடிவு என்று தானெ எடுக்க வேண்டும். வயசுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இருக்குங்கண்ணா. வயசு அறிவை செயற்பாட்டு தளத்திற்கு அண்மையில் அதற்கு சமாந்தரமாக கொண்டு செல்லும்.
வயசும் அனுபவமும் கூட கூட அறிவு செயற்பாடு சார்ந்து விரிவு பெறும். மற்றைய அறிவு வெறும் புத்தகங்களுடனும் மேற்கோள்களுடனும் முற்றுபெற்றுவிடும். (அண்மையில் கூட wealth of networks எனும் புத்தகம் ஒன்று வந்தது. அதன் main theme வேறு. ஆனால் Data, Information, knowledge, wisdom என்பதன் ஓட்டம் எவ்வாறு வழிப்படுத்தபடுகின்றது. வெறும் தகவல்களை அறிவாக மாற்றுவத்ற்கு சூழ்ல் சர்ந்து செயற்பாடு அவசியம். அதன்பின் தான் wisdom என்பதன் நோக்கம் பற்றி உரையாட முடியும்.) ஒருமனிதன் எவ்வாறு அறிவுத்திரட்சியின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றான். wisdom என்பதுவும் மீண்டும் மீண்டும் தம்மை ஒருவகை இயங்கு தளத்திற்கு தயார்படுத்திகொள்கின்றன. நீங்கள் நிற்கும் இடம் Information இற்கும் knowledge இடைப்பட்டது. அறிவு உருவாக்கத்திற்கு நீங்கள் உகந்தஉற்பத்தி என்ற போது கூட இறுகல் தன்மை அதை உருவாகவிடாமல் தடுத்தே நிற்கும். அதை விடுங்கவா... பெளதிகம்,பொருளியல்,போர்மூலா பாடம் செய்வதல்ல எனது நோக்கம். தத்துவம் என்பது வானியல், கணிதம், கலை, பௌதீகம், உளவியல் போன்றவற்றுடன் பின்னிப்பிணந்தது. நான் சொல்ல வருவது. ஆரம்பகால தத்துவ அறிஞர்கள் எல்லோரும் அவ்வகைமாதிரியை சேர்ந்தோராகவே இருக்கின்றனர். அத்ற்கான இறுதி மேதையாக மார்க்சை சொல்லலாம். அவர் உலகை மேற்போந்த துறைகளினூடு உள்வாங்கிக் கொண்டார். ஆனால் சமூகப்பொருளாதாரம் பற்றியே தனது வெளிப்படுதிறனை வடிவமைத்துக்கொண்டார். ஆனால், கால ஓட்டத்தில் மேற்போந்த துறைகள் வேறுபடுத்த்ப்பட்டது தான் இவ்வளவு பிரச்சனையோ என்று தோன்றுகின்றது. அதற்கான தொடர்புகள் குறைக்கப்பட்டதுடன் ஒருவிதமான குறுகிய பார்வை குடிகொண்டுவிட்டது. (Noam chomsky ஐ தூக்கிப்பிடிக்க தான் வேண்டி இருக்கிறது. அவரது பார்வை விரிந்தது.) ஆனால் இன்று மீண்டும் கல்வி முறையில் ஒருவிதமாதன combine தன்மையை கொண்டு வர எத்தனிக்கின்றனர். அதன் மூலம் புதிய விடயங்கள் உருவாகும் என்பது தான் அதன் அடிப்படை. அதனால் தானோ என்னவோ நான் சொல்வது உங்களுக்குஅப்பிடி தெரிகின்றது.
.
//நீங்கள் ஒரு மண்ணும் இதுவரை அறிவியற்றளத்தில் எடுத்துப் போடவில்லை.//
அறிவியல் கட்டமைக்கும் ஒருவிதமான அதிகாரம் மிக மோசமானது. உங்களது இக்கருத்தியல் எவ்விதமான வன்முறை சர்ந்தது என்று நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? ஒருவனை நீங்கள் மறுதலிக்கும் முறை எவ்வளவு கொடூரமானது என்று பாருங்கள். இதே அம்சங்களையே நான் புலிகளிடமும் கண்டேன் நடைமுறையில். கருத்தியல் சார்ந்து கூட இதனை மறுதலிக்க முடியாமல் உள்ள உங்களுக்கு புலிகள் நடைமுறை சார்ந்து இயங்குவது பாசிசமாக இருப்பது தான் முரண்நகை.
//ஆரோக்கியமான உரையாடலை ஆரம்பிக எல்லொருக்கும் விருப்பமே. முன்முடிவுகளுடன் பிரச்சனையை அணுகுபவர்களுடன் அதை நிகழ்த்த முடியாது.//
எனக்கு உங்களை பார்க்கும் கணங்களில் எனது தாத்தா வை பார்க்கும் உணர்வு ஏற்படுகின்றது. பொருளியலில் முனைவர் பட்டம் பெற்ற அவரால் இறுதிவரை சமூகம் சார்ந்து இயங்க முடியாமல் (விருப்புறுதி இருந்தும் கூட) போனதற்கு காரணம் அவரது ஏராளமான சமன்பாட்டு வாதங்களும் முன்முடிவுகளும் மட்டுமே. ஒரு உரையாடலைக் கூட ஆத்மார்த்தமாக நிகழ்த்திவிட முடியாது அவருடன். உரையாடலின் பின்பு வெறுப்பு மட்டுமே எஞ்சும். சகல் உறவுகளில் இருந்தும் தனிமைப்பட்ட அவரது முன்முடிவுகளுக்கு அப்பாலும் என்னால் மட்டுமே நேசிக்கப்பட்டார். உங்களையும் அப்பிடி தான் பார்க்கின்றேன். உங்களது மனநிலை உரையாடலை நிகழ்த்த்துவத்ற்கான ஆரம்ப புள்ளிகளையே மறுத்து நிற்பது. அதை மீண்டும் மீண்டும் நீங்கள் நிகழ்த்துகிறீர்கள் என்பதுதான் வேதனை.
உரையாடல-2 (பெயரிலி, அமீபா, சிறீரங்கன்.)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment