உரையாடல்- 1 (இரயாகரன், பெயரிலி, மயூரன், அமீபா)

அலைஞனின் அலைகள் எனும் தளத்தில் பெயரிலி எழுதிய பதிவிற்கான அமீபாவின் பின்னூட்டமும் அதற்கான மயூரனின் பின்னூட்டமும் அதற்கான அமீபாவின் பதிலும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.



இரயாகரனுக்கு மேலதிகமாக ஒரேயொரு கேள்வி (அல்லது வேண்டுகோள்)- பெயரிலி

உங்கள் புரட்சிப்பட்டியலிலே கேள்விகள் கேட்பவர்களைப் பாஸிஸ்ட்டுகள், பினாமிகள் என்றுமட்டும் திட்டிக்கொண்டு பதிலைச் சொல்லுமளவுக்குத் தரமில்லையெனச் சொல்லுவதே ஒரு வகையிலே கருத்துச்சுதந்திரம் மறுக்கும் ஸ்டானிய,பொல்பொட்டிய, பொடா, தடா, பட்ரியோட் சட்ட(மறுப்பு)த்தன்மைகளாம். இதை நீங்கள் செய்கின்றபோது, புரட்சித்தன்மை வருகின்றது. ஸ்ரீரங்கன் தனக்குக் கொலைப்பயமுறுத்தல் புலிகள் விட்டார்களென்று சொன்னபோதும், லக்ஷ்மியின் வீட்டிலே புலிகள் கொள்ளையடித்துக்கொண்டுபோனார்கள் என்று நீங்கள் பதிவுபோட்டபோதும் முதலாவது பின்னூட்டங்களாகவும் பதிவுகளாகவும் இருந்தவை யாருடையனவென்று போய்ப்பாருங்கள். இராஜீவ் கொலை குறித்தோ, துரோகிகள்-தியாகிகள் குறித்துப் பட்டியலிடுவது குறித்தோ, குழந்தைப்போராளிகள் குறித்தோ, தேசியத்தலைவர் புகழுரைப்பது குறித்தோ எனது தனிப்பட்ட ஒற்றைச்சல்லிக்கருத்துகள் எவையென்று அறியாதிருப்பின், மற்றவர்களைப் பற்றிக் கருத்துகளைத் தெரிவிக்காமல் வாயை மூடிக்கொண்டிருங்கள் (ஆஹா! இது புலிப்பாஸிட்டுப்பினாமிமாபியாக்கள் செய்கின்ற காரியமென்ன? ;-)).

உங்களைப் பற்றி இன்றைக்கு நேற்றைக்குக் கேள்விப்பட்டவனில்லை நான்; உங்களுக்கு நடந்தவை குறித்தும்; நீங்கள் நடத்திக்கொண்டிருப்பது குறித்தும். தனிப்பட்டவர்களுடனான பேச்சுகளின்போதும், உங்களின் பதிவுகள்குறித்து அவற்றின் நடுநிலையான தரவுகளுக்காக மிகவும் மதிப்பினைக் கொண்டுதான் பேசியிருப்பதையும் (நேற்றுக்கூடப் பேசியதையும்) அவர்கள் சொல்லவேண்டினால், சொல்லலாம். ஆனால், உங்களுடைய கொக்கோ கோலாவுக்கும் கொக்கட்டிச்சோலையிலும் கொக்கிளாயிலும் குண்டுவெடிப்பதற்கும் சம்பந்தப்படுத்தும் பட்டாம்பூச்சி சிறகடிப்புக்கும் பசுபிக்சமுத்திரத்துப்பூகம்பத்துக்குமான தொடர்பாடலின் நடைமுறைப்பயனில்லாமை வெறுப்பேற்றவே செய்வதாலேயே "நடைமுறைப்பயன் என்ன?" என்று கேட்டேன். அதன் நீட்சியாகவே தயா சோமசுந்தரம் தரவுகளை வைத்துச் சமைத்த யாழ்க்குடாமக்களின் இன்றைய உளவியலிலே உங்களின் பாட்டாளிக்கான பாட்டளிசேர்பொற்கொன்றைப்பதிவுப்புரட்சியின் பயனை வினாவினேன்; அவர்களிடம் போய், கொக்கோகோலாவுக்கும் கொக்குவிலிலே குண்டு வெடிப்பதற்கும் பாட்டாளிகளின் பற்றரி வீக் எண்டு சொல்லிப் பாருங்கள்; நீங்கள் சொல்லும் புரட்சிக்கான உந்துதல் தெரியும்.

நீங்கள் சார்ந்திருந்த மார்க்ஸியசிறுகுழுவினரை நேரடியாக எனக்குப் பரிட்சமில்லாதபோதுங்கூட, அதுபோன்ற சொந்தத்தாயியக்கத்தினருக்கே மறைந்து திரிந்த உதிரிமார்க்ஸியத்தமிழ்க்குழுவினர் ஓரிருவரைத் தெரியும்; ஜேவிபியிடம் அடிவாங்கிக்கொண்டும் கொல்லப்பட்டுக்கொண்டுமிருந்த சிங்கள ரொட்ஸ்கிஸ்டுகளையும் கண்டிருக்கின்றேன். அதனால், உங்களின் புரட்சிக்கொள்கைகளைக் கேள்வி கேட்பதோ, உங்களினைப் பகிடி செய்வதோ எனது நோக்கமில்லையென்பதைத் தெளிவாக மீண்டுமொரு சொல்ல விரும்புகிறேன். உங்களளவுக்கு மார்க்ஸியமயிர் புடுங்காவிட்டாலுங்கூட, ஓரளவுக்கு நடப்பது நடக்காதது ஊர்வது ஊராதது பார்த்தறிந்துகொண்டுதான் பலர் இருக்கின்றார்கள். ஆனால், அவற்றினை நடைமுறைப்படுத்தாது, குறுந்தேசிய, பல்தேசிய, பாஸிஸபினாமி என்று சொல்லிக்கொண்டிருப்பதிலே, உங்களுக்கான உளத்திருப்திதான் முடிவாகின்றதேயொழிய, யாருக்காக நீங்கள் போராடுகின்றீர்கள் என்று சொல்கிறீர்களோ அவர்களுக்கான பயனல்ல. இதற்கும் புஷ்ஷுக்கெதிராக, "அமெரிக்கன்வார் பார்" என்ற யூரியூப்பினைப் பார்த்தோ அல்லது டொன் ஸ்ரூவர்ட்டின் கொமடி சென்ரலிலே புஷ்+செய்னி+ஈராக் போருக்கெதிரான இரட்டைவரிநகைச்சுவைகளைக் கேட்டு அடையும் திருப்திக்கோ பெரிதளவிலே வித்தியாசமிருப்பதில்லையென்றே தோன்றுகின்றது.

ஈழக்கலையிலக்கியச்சுவடி நடத்திக்கொண்டிருந்தபோதிலே, 2002~2005 வரை நீங்கள் வந்து சேரமுடியாத இணைப்பாகவோ அல்லது உள்ளடக்கி பாமினி எழுத்துருவிலோ பிரெஞ்சிலோ அனுப்பிக்கொண்டிருந்த தமிழ்சேர்க்கிள் அஞ்சல்களையெல்லாம் அவை புலிக்கெதிரோ ஆதரவோ, அவற்றின் தேவையும் உங்கள் மீதான மதிப்பும் கருதியே, அக்குழுவின் கலையிலக்கியச்சேகரிப்பு நோக்கத்தினைக்கூடத் தளர்த்தி அனுமதித்துக்கொண்டிருந்தேன். இன்று நீங்கள் உங்களுக்கும் அசுரனுக்கும் கேள்வி கேட்டேன் என்பதற்காக ஒரு பின்னூட்டத்தினையே இதற்கெல்லாம் பதிலளிக்கும் நேரமோ தேவையோ இல்லையென்று அலட்சியமாக அமுக்கிவைக்கின்றீர்கள். பதில் தரத்தான் வேண்டாம்; குறைந்த பட்சம் அனுமதித்திருக்கலாமே? நீங்கள் காட்டும் கருத்துச்சுதந்திரமறுப்பு, உங்களின் கேள்விகளுக்கு மற்றவர்கள் பதிலளிக்கவேண்டுமென்று எதிர்பார்க்கும்போது, மற்றவர்களின் கேள்விகளைத் தள்ளுதல் (கொலம்பியா பல்கலைக்கழகத்தலைவரின் அராஜகரத்துக்கான ஈரானிய அதிபரின் ராஜகரமான மறுபாணி(ப்பினாட்டு) :-)) எல்லாம் எதனைக் குறிக்கின்றன?

இப்போது, ஈழத்தமிழர்கள் நடத்தாததால், தப்பியிருக்கும் இருக்கும் ஒரே மாற்றுத்தளம் தமிழ்மணம் என்றும் அதைக் கொள்ளை கொள்ள புலி பாஸிட்டு ஈழத்தமிழர்கள் வந்து குமிந்திருப்பதாகவும் ஒரு பதிவு போடுகின்றீர்கள். [இன்னமும் இந்திய தேசியத்துக்கு எதிராகத் தமிழ்மணப்பாஸிட்டுகள் ஸ்வஸ்திகா சின்னத்தோடு சிலரிட்ட பதாகைகளின் பாசிகளே அழியாமலிருக்கின்றன. அந்தப்பாஸிட்டுக்குற்றச்சாட்டுப்பதாகையோடு தமிழ்மணத்திலே சேர்க்கப்பட்ட சரவணகுமார் பதிவுகளையும் தமிழ்மணம் கருத்துச்சுதந்திரத்தோடு அனுமதித்தேயிருந்தது. தமிழ்மணம் நடத்துகின்றவர்கள் புலிகள் என்று அரைவேக்காட்டு மூர்த்தியின் பிதற்றல் தொடக்கம் வெட்டியொட்ட மட்டுமே தெரிந்த "ஈழத்தமிழர்" வீரமணியின் குற்றச்சாட்டுகளும் அநியாயத்துக்குக் கெடுதலாக வந்திருக்கும்வேளையிலே தமிழ்மணத்தினை மாற்றுத்தளமென்று நீங்கள் சொல்வதற்காக நன்றி. தொடர்ந்து அந்தப்புறமும் இந்தப்புறமும் உங்களதும் அசுரனதும் தமிழச்சியினதும் பதிவுகளைக் கடந்தும் பார்த்திருந்தீர்களென்றால், உங்களுக்குத் தமிழ்மணம் அநாவசியத்துக்குப் பெறும் திட்டுகள் புரிந்திருக்கக்கூடும். நிச்சயமாக தமிழ்மணம் உங்களின் நடுநிலையான கருத்துக்கு நன்றி சொல்லவேண்டும்.] அவ்வகையிலே தமிழ்மணத்திலே மாற்றுக்கருத்துகள் அவை எப்புறமிருந்து எப்புரமெரிக்க வந்தாலும் விடுவதுதான் முக்கியமான நோக்கம். ஸ்ரீலங்கா, ஈழ, இந்திய ஊடகங்கள் சொல்லமறுக்கும் கருத்துகளும் அவற்றுக்கான வெளிப்பாட்டோடு இருக்கவேண்டுமென்றே தமிழ்மணம் கதவைத் திறந்து வைத்துக்கொண்டிருக்கின்றது. அதை நீங்கள் சரியாகவே அடையாளம் கண்டதற்கு நன்றி. ஆனால், உங்களினைப் பேச வேண்டாமென்று தமிழ்மணம் திரட்டியூடே எங்கேனும் எவரேனும் எப்போதாவது சொன்னார்களா? மாலன் அண்மையிலே கூறியதுமாதிரியே ஒரு குழந்தைப்பிள்ளைத்தனமான குற்றச்சாட்டினை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. மேலும், நீங்கள் உங்கள் கருத்தினைச் சொல்லும்போது, அவற்றினை அனுமதித்து எல்லாப் பதிவுக்காரர்களும் விடுகின்றார்கள். (நீங்கள்தான் மற்றையவர்களினுடையதை அனுமதிக்கின்றீர்களில்லை என்பது இங்கே அடுப்பிலே கிடக்கட்டும்.) அதேபோல, அவர்களும் கருத்தினைச் சொல்லக்கூடாதா? மாற்றுத்தளமென்பது, உங்களுக்கான கருத்தினைச் சொல்லும் தளமென்பதா உங்கள் அர்த்தம்? எல்லாவிதமான மாற்றுக்கருத்துகளுமென்று நீங்கள் சரியாக அர்த்தப்படுத்த உங்கள் சித்தாந்தம் இடமளித்துக் கைகொடுக்காதா?

மெய்யாகவே, வெஞ்சின பாயும்புலியும் சாராமல், குளிர்த்தூக்கம்போட்டுக்கொண்டேயிருக்கும் பொதுவகில ஒரேகணத்துக்கனத்த புரட்சியும் சாராமல் ஈழத்தமிழர்நலனுக்கான (மாற்றுக்)கருத்தினை எப்படி நானோ என்னைப் போன்றவர்களோ தத்துவத்திலே புரட்சிகரமாகவும் செயற்படுவதிலே உடனடி நடைமுறைக்காவும் வகையிலும் செய்யலாமென்பதை நீங்கள் சொல்லித் தந்தால், மகிழ்ச்சியடைவேன். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புலிப்பினாமிக்குறுந்தேசியக்கத்திகள் என்று சொல்லிக்கொண்டு கட்டுரை போடுவதிலும்விட, இலங்கை வெளிநாட்டமைச்சமைச்சருக்கு அமெரிக்க அரசு, மனிதவுரிமைகளைச் சேதப்படுத்துதல் என்ற அடிப்படையின்கீழே, இராணுவ உதவி வழங்குவதைத் தடுக்க விண்ணப்பிப்பது இன்றைக்கு முக்கியமான தமிழ்மக்களுக்கான போராட்டம் என்றே தோன்றுகின்றது. இதைக்கூட, "ஈராக்கிலே மனித உரிமைகள் மீறும் ஏகாதிபத்தியத்திடம் கெஞ்சிக்கொண்டிருக்கவேண்டாம்; எதிர்ப்புரட்சி செய்யவேண்டும்; அல்லாதோர் புலிப்பாஸிட்டுப்பினாமிகள்" என்று புரட்சி/டுக்கட்டுரை வடிப்பீர்களானால், உங்களின் தத்துவத்தோடு ஒத்துப்போனாலுங்கூட, நடைமுறை முக்கியமாகின்றதென்பதிலே மாறுபடுவேன். உலகின் ஒரே மார்க்ஸியப்புரட்சியாளர்கள் நீங்களும் அசுரனும் மக்கள் கலை இலக்கியக்குழுவும் மட்டுமே, மற்றோரெல்லாம் பாஸிட்டுப்பூஸ்டர்கள் அன்ரெனாக்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தால், ஏகாதிபத்திய அமெரிக்கப்பாணியிலே நடுவிரலையோ, அரேபியப்பாணியிலே பெருவிரலையோ, ஈழத்துப்பாணியிலே ஒரு கையில் இருவிரல்களாலே வளையம் குவித்து அதனுள் மறுகையின் சுட்டுவிரலாலேயோ சுட்டிச் சைகை செய்வதல்லால், வேறொன்றுமறியோம் இரயாகரனே; வேறு யாருமாயிருப்பின், அப்படியே செய்துவிட்டுப்போயிருப்பேன். இரயாகரன் என்பவரின் கடந்த இருபதாண்டு வரலாறும் தத்துவக்கோட்பாடுகளும் தான் கொண்ட கருத்துக்காக நின்றாடும் நேர்மையும் திடனும் தெரிந்தளவிலே, அவர் புலிப்பாஸிட்டுப்பினாமிமாபியாபோபியாவின் உச்சக்கட்டத்திலே என்னை நோக்கி என்ன வசை அரற்றினாலுங்கூட, அப்படியாக ஒருபோதும் அவமதிப்பினைச் செய்யப்போவதில்லை.

மிகுதி பின்னால். இப்போதைக்கு ஒரேயொரு மேலதிகக்கேள்வி (நீங்கள் திட்டியே பதில் சொன்னாலுஞ் சரி; திட்டாமலே போனாலுஞ் சரி)

உங்கள் இடுகையிலே சிவப்பாலே எழுதியிருக்கும் வரிகளிலே 'புலி' என்பதற்குப் பதிலாக் 'இராயகரன் & அவரையொத்த தத்துவம்சார்மார்க்ஸியக்குழுக்கள்" என்பதைப் பிரதியிட்டு வாசித்து விடைகளைத் தருவீர்களா? (அல்லது உள்ளாழ்ந்து பாருங்கள்)




அமீபாவின் பின்னூட்டம்-1

பெயரிலி யிடம் சில கேள்விகள்.

//...இரயாகரன் என்பவரின் கடந்த இருபதாண்டு வரலாறும் தத்துவக்கோட்பாடுகளும் தான் கொண்ட கருத்துக்காக நின்றாடும் நேர்மையும....//

இதில் தான் கொண்ட கருத்துக்காக நின்றாடும் நேர்மையும் என்ற விடயத்தில் நீங்கள் எவ்வாளவு தூரம் உடன்படுகின்றீர்கள்.? இப்பிடியான கருத்தியல் கட்டுமானங்களின் மீது உருவாக்கப்படும் மனம் பாஸிச மனமாயன்றி வேறெதுவாய் இருக்கும் என எதிர்பார்க்கின்றீர்கள்? தட்டையான தளத்தில் கோடுகளால் வரையப்பட்ட தத்துவ அமைப்பும் தான் உண்மையான இன்றைய பாஸிசம் என்பேன். பின் தங்களால் தங்களுக்கு தாங்களே கீறிய புனித வட்டத்தை விட்டு வெளியே வர முடியாமல் தவிப்பவர்களும், மற்றையோரையும் தங்கள் வட்டத்துக்குள் வருமாறு வற்புறுத்துவோரும் தான் உண்மையான பாஸிஸ்டுக்கள். மக்கள் நலன் சார்ந்த இயங்கியல் கோட்பாடு நடைமுறை சார்ந்து இயக்கம் பெற தவறியவர்களாலேயே குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றது. இதற்கு ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் அது சார்ந்த இடங்களிலிருந்தும் பல்வேறு உதாரணங்களைக் காட்ட முடியும். பிரான்ஸில் சார்த்தர் போன்றோர் நடைமுறைப்பிரச்சினை சார்பிலும், அதன் தோற்றுவாய்கள் சார்பிலும் எடுத்த நடவடிக்கைகள் 'அடிப்படைவாத மார்கஸிய'ர்களால் எவ்வாறு நோக்கப்பட்டது என்பதும் சர்த்தர் மீது அவர்கள் அள்ளி இறைத்த அவதூறுகளுமே இதற்கு நல்ல உதாரணம். இவர்கள் தான் உண்மையான மக்கள் விரோத சக்தி. இது தான் மோசமான வன்முறை.

//..ஆனால், உங்களுடைய கொக்கோ கோலாவுக்கும் கொக்கட்டிச்சோலையிலும் கொக்கிளாயிலும் குண்டுவெடிப்பதற்கும் சம்பந்தப்படுத்தும் பட்டாம்பூச்சி சிறகடிப்புக்கும் பசுபிக்சமுத்திரத்துப்பூகம்பத்துக்குமான..//

அடிப்படைவாதத்திற்குள் அமிழ்ந்து போனவர்களால் தான் இப்பிடியான கருத்துநிலைகளை கட்டமைக்க முடியும். மார்க்ஸிய சிங்கம் சிவசேகரம் கூட இப்பிடியான பலவிதமான நகைச்சுவைகளை அள்ளிவிடக்கூடியவரே... கருணா வின் உடைவிற்கு CIA தான் காரணம் என்று சொல்பவரை வேறெப்படிச் சொல்ல முடியும். கருணாவின் உடைவிற்கு பிரபாகரனை விட வேறு காரணம் இருக்க முடியுமா? அமெரிக்க ஏகாதிபத்தியம் வகுத்த உலக ஒழுங்கின் பாதையில் நாமெல்லாம் கைவீசி நடைபயில்கின்றோம் என்ற கேவலமான உண்மையை இந்த வகையில் நாம் மூடிமறைத்துவிட முடியாது. நுகர்வுக்கலாச்சாரத்தின் அதிகரிக்கும் விரிவு நிலையை எதிர்ப்பதை விட்டுவிட்டு இப்படி பைத்தியகாரத்தனமாக பேசமுடியாது. இந்த லட்சணத்தில் இவர்கள் எல்லாம் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி குத்து விடுகின்றனர். துவித எதிர் மனநிலைகளில் வாழும் இவர்களால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. கறுப்பு அல்லது வெள்ளை இது தான் அவர்களின் முடிவு. கறுப்பு வெள்ளைகளுக்கு இடையில் பரந்திருக்கும் அப்பாவிவெளிகளை தனது தத்துவ வன்முறையினூடு நிராகரித்துவிடுகின்றனர். இவர்களா மனித நேய தத்துவத்தின் பால் உண்மையான ஈர்ப்பு கொண்டவர்களென நீங்கள் கருதுகின்றீர்களா? நடைமுறை வாழ்வு தரும் கொடூர அனுபவங்களுக்கு தத்துவங்கள் புகலிடமாக இல்லை என்ற கசப்பான உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் இரயாகரன்.

//..."ஈராக்கிலே மனித உரிமைகள் மீறும் ஏகாதிபத்தியத்திடம் கெஞ்சிக்கொண்டிருக்கவேண்டாம்; எதிர்ப்புரட்சி செய்யவேண்டும்; அல்லாதோர் புலிப்பாஸிட்டுப்பினாமிகள்" என்று புரட்சி/டுக்கட்டுரை வடிப்பீர்களானால், உங்களின் தத்துவத்தோடு ஒத்துப்போனாலுங்கூட, நடைமுறை முக்கியமாகின்றதென்பதிலே மாறுபடுவேன்...//

தத்துவத்தோடு ஒத்து போனாலும்கூட, நடைமுறை முக்கியமாகின்றது என்று சொல்கின்றீர்களே... நடைமுறை முக்கியமற்ற தத்துவத்தோடு எப்பிடி உங்களால் ஒத்துபோக முடிகின்றது பெயரிலி? நடைமுறை தான் தத்துவம். நடைமுறையில் இருந்து தான் தத்துவம் உருவாக முடியும். அப்பிடி இல்லாத தத்துவம் தேவையில்லை. அத்தத்துவம் இராயகரனின் தத்துவ உள்ளமைப்பை நெருங்க முடியும். அவ்வளவு தான்.

கெம்பல் மார்க்கிஸிய குஞ்சு பற்றிய குட்டிக்கதை.

இறுகிப்போன மார்க்ஸியர்கள், மாக்ஸிய குஞ்சுகளை பெற்றெடுக்கின்றனர். பூனை குட்டி போடுவதைப் போன்று... முன்னொரு காலத்தில் அப்பிடியான ஒரு மார்க்ஸிய குஞ்சுடன் ஒரு சிறுவர் இல்லத்துக்கு புறப்பட்டேன். போகும் வழியெல்லாம் மார்க்ஸிய குஞ்சு ரஷ்ய புரட்சி பற்றியும், வர்க்க எழுச்சி பற்றியும் தான் ஒரெ பேச்சு. சிறுவர் இல்லத்தை சென்றடைந்தவுடன் மார்க்ஸிய குஞ்சு கெம்பத்தொடங்கிவிட்டது. அதற்கு காரணம் நாம் அங்கே கண்ட காட்சி தான். அங்கே ஒரு NGO வின் ஊழியர்கள் சிறுவர்களுக்கு பாண் வழங்கி கொண்டிருந்தனர். மார்க்ஸிய குஞ்சு புலம்ப தொடங்கிவிட்டது. சிறுவர் இல்ல நிர்வாகிகளுக்கு போய் முறைப்பாடு இட்டது. எனக்கு NGO வின் hidden agenda பற்றி வகுப்பெடுக்கத் தொடங்கிவிட்டது. நான் அதை ஏற்றுக்கொண்டேன் மிக மனப்பூர்வமாக. மார்க்கிஸிய குஞ்சுக்கு ஒரே சந்தோசம். தனது வாதம் வெற்றி பெற்றுவிட்டதென்பதிலும் தான் குஞ்சு என்ற நிலையை கடந்து வருவதலிலும் தான்.
இப்போது மார்க்சிஸிய குஞ்சு வளர்ந்து பெரிய ஆள் ஆகிவிட்டது. தானும் மார்க்ஸிய குஞ்சுகளை பெறத்தொடங்கிவிட்டது. அதற்கென்று ஒரு வாழ்வு. அதற்கென்று கொஞ்சம் குஞ்சுகள். அதன் வாழ்வு சந்தோசமாயிற்று. அதன் குஞ்சுகளும் எகாதிபத்தியம் பற்றி பேசுகின்றனர். வர்க்கப்புரட்சி பற்றி பேசுகின்றனர். NGO களின் இரகசிய வேலைத்திட்டம் பற்றியும் பேசுகின்றனர். ஆனால் இன்றும் சிறுவர் இல்லங்கள் இருக்கின்றன. NGO கள் பாண் வழங்குகின்றனர். பட்டினியால் சாகும் சிறுவர்கள் பாணை சாப்பிடுகின்றனர். அவர்களுக்கு NGO களின் பாணை விட்டால் வேறு உணவுகள் இல்லை. அவர்களுக்கு செம்புரட்சி பற்றித் தெரியாது. அவர்களை மார்க்ஸிய குஞ்சுகள் முட்டாள்கள் என்று நகைக்ககூடும். இதில் சோகம் என்னவென்றால், இப்போது இருக்கும் மார்க்ஸிய குஞ்சுகளும் நாளை முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும். அவை அப்போது ஏகாதிபத்தியம் என்று பேசாது. imperialism என்று சப்பைக் கொட்டு கொட்டும். அதையெல்லாம் நாங்க பாத்து ஆகா அறிவுஜீவி வந்துவிட்டான் என்று புளங்காகிதமடைவோம்.
போடாங்ங்ங்ங் கொய்யாலா...

கேள்வி.1-
நடைமுறை வாழ்வு சாராத தத்துவத்தால் நீங்கள் பட்டினியால் அலையும் சிறுவர்களை சாக்காட்டுவீர்களா?

கேள்வி.2-
எழுத்து என்பதன் தேவை நடைமுறை சார்ந்தல்லாமல் தேவை என உணருகிறீர்களா?

கேள்வி.3-
அமெரிக்காவின் மூஞ்சையில் குத்தும் போது இவர்களுக்கு கை வலிக்காதா?

கேள்வி.4-
இவர்கள் சொல்வது போல் 'ஓ மகா காளி புரட்சி வந்துவிடு' என்றால் புரட்சி வந்துவிடும? அவ்வாறு வருமாயின் எங்கிருந்து வரும்? என்ன வேகத்தில் வரும்? இப்பவும் சிவப்பு நிறத்தில்தான் வருமா?

பி.கு.1-
துவித எதிர் மனநிலை சிந்தனாவதிகள் என்னை NGO க்கு ஆதரவானவன் என்று திட்டக் கூடும். அதை நிறுவக்கூடும். அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் நிறுவத்தேவை இல்லை. உங்களுக்கு மட்டும் நான் ஒப்புக் கொற்கின்றேன். உங்கட அசத்தலான கண்டுபிடிப்புகள் தாங்க முடியலப்பா.
பி.கு.2-

என்னை அமெரிக்காவின் ஆள் என்று சொல்லலாம். மார்க்ஸிய குஞ்சுகள் மட்டும் என்னை அப்பிடி சொல்லலாம். (CIA, டொலர் அதையும் சேர்த்து போடுங்க தலைவா..).

பி.கு.3-
NGO கள் தான் திட்டமிட்டு சிறுவர்கள் மீது பட்டினியை உருவாக்கி பின் பாணை வழங்குகின்றன என்று நீங்கள் சொல்வீர்கள் ஒத்துகுறேன். நீங்க புத்திசாலி ங்கிறத ஒத்துக்கிறேன்.






மயூரனின் பின்னூட்டம்-1

அமீபாக் குஞ்சு,

நீங்கள் எந்தக் கோட்பாட்டின் குஞ்சு என்பது புரிகிறது.

"எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது"

என்று எப்பவோ சொன்ன காரியத்தை, ஆங்கிலத்திலிருந்தான நேரடி மொழிபெயர்ப்புச் சொற்களைப்போட்டுக் குழப்பி புரியவிடாமற்செய்யும் தத்துவத்தின் குஞ்சான நீங்கள் அமெரிக்காவின் மூஞ்சியில் குத்துபவர்களை சிலாகித்து எழுதவும் பேசவும் செய்கின்ற மார்க்சீயக்குஞ்சுகளுடன் தான் உங்கள் "கதையாடல்களை" எல்லாம் அளக்க முடியும்.
உண்மையைலேயே "அமெரிக்கத்தின்" மூஞ்சியில் குத்துபவர்களிடம் போய் கதையாடிப்பாருங்கள்.. பீச்சாங்கை உங்கள் மூஞ்சியில் விளையாடும்.

கோட்டுக்கருத்தியல், கோடில்லாக்கருத்தியல், கருப்புவெள்ளைத்தத்துவம், சாம்பல் தத்துவம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கும் உங்க்ளுக்கும் உங்கள் குஞ்சுகளுக்கும்
தெரிந்ததெல்லாம் மார்க்சீயத்தை கருவறுப்பது எப்படி என்று இரவுபகலாக சிந்திப்பதும் பண்பாட்டின் உதிரிகளாய் அலைவதும்தான்.

அதற்காகத்தானே உங்களை திட்டமிட்டு உருவாக்கிவிட்டிருக்கிறார்கள் உங்கள் "முன்னோர்கள்"

உங்கள் "சாம்பல்" கோட்பாட்டாளர்கள் மக்களுக்கு பிரயோசனமாய் எந்தச் சிறு சாம்பல் துகளையாவது எடுத்து அப்பால் போட்டிருக்கிறார்கள் என்றால், பேச வாருங்கள். பாசிசத்தைப்ப்ப்பற்றியும் .......

பிரிட்டன் உலகின் ஆட்சியில் இருந்த காலத்தில் கூட உங்கள் முன்னோர்கள் (அப்போது அவர்கள் வேறு பெயர்களில் இருந்தார்கள்) சுதந்திரப்போராட்டம் எல்லாம் படு மோசமான இலட்சியவாதம், ஏகாதிபத்தியத்தை ஏற்றுக்கொண்டு அடங்கிப்போவதே வாழ்வதற்கான தத்துவம் என்று உளறிக்கொண்டிருந்தார்கள்.

இப்போ அவர்களின் பேரக்குஞ்சுகளான நீங்கள் கிளம்பியிருக்கிறீர்கள். ஆட்சியில் அமெரிக்கா உங்கள் கைகளில் நாசிசத்தின் மூலவர்களின் கோட்பாட்டுப்புத்தகங்கள். மார்க்சீய மைப்புக்களின் தவறுகளையும், மர்க்சீயர்களின் போதாமைகளையும் எடுத்துக்காட்டுகளாகத்தூக்கிக்கொண்டு ஒரு புரட்சிகரத் தத்துவத்தையே பிழையென்று நிறுவி நிற்கும் நீங்கள் தான் உண்மையான "துவித எதிர்நிலைச்" சிந்தனையாளர்கள்.





அமீபாவின் பின்னூட்டம்-2

அன்புள்ள பெயரிலிக்கு,

நான் உங்களிடம் இரயாகரன் என்பவர் பற்றியும் கோட்பாடுகள் உருவாக்கும் அடிப்படைவாத மனநிலைகள் சார்பாகவும் எனது கருத்துநிலைகளையும் தெரிவித்து இருந்தேன். அதற்கு மயூரன் என்பவர் பதிலளித்து இருந்தார். (அடப்பார்றா இவருக்கு கோபம் பொத்துக்குனு வந்துடுச்சு..)

மயூரன்,

//..."எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது" என்று எப்பவோ சொன்ன காரியத்தை, ஆங்கிலத்திலிருந்தான நேரடி மொழிபெயர்ப்புச் சொற்களைப்போட்டுக் குழப்பி புரியவிடாமற்செய்யும் தத்துவத்தின் குஞ்சான நீங்கள்... //

உங்கள் சமன்பாடுகளும் அவற்றிற்கான பதிலகளும் என்னைப் புல்லரிக்க வைக்குது மயூரன். மிகவும் எளிமையாக ஒரு விடயத்தை விளங்கி வைத்திருக்கிறீர்கள். "எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது". அவ்ளோ தானா..? நான் சொல்ல வந்தது அவ்வளவு என்றா நினைக்கிறீர்கள்? மனிதகுலம் நடந்து வந்த பாதைக்கு எதிரான அதற்கு மாற்றீடான மனித நேய தத்துவம் தான் மார்க்சீயம். அதற்கான தயார்ப்படுத்தல்கள் எழுத்தால் மட்டுமே சாத்தியப்படுத்தபடுத்திவிட முடியாதவை. நடைமுறை சார்ந்தும் செயற்பாடுகள் சார்ந்தும் தான் அதற்கான தளத்தினை அமைத்துவிட முடியும். எழுத்துக்கள் கூட செயற்பாடுகளை அண்மித்ததாகவே இருக்க முடியும். இவர்களின் எழுத்தில் இவற்றை பூதக்கண்ணாடி கொண்டு தான் தேட வேண்டும். நீங்கள் நினைப்பது மாதிரி ஒரே நாளில் புரட்டிப் போட்டுவிட முடியாது. (பராட்டா போடுவதைப்போல.) அந்நிலைமை றயாகரன் போன்ற மார்க்சீய அடிப்படைவாதிகளால் அடையப்படமுடியாதது. நேர்கோட்டின் வழியே ஒற்றைப் பரிமாணத்தில் சமூகத்தை பார்க்கும் பார்வையும், பல்சாத்தியப்பாடுகளை மறுத்து நிற்கும் அவர்களது கருத்தியலும் எவ்வகையிலும் மனித நேய தத்துவத்தை நடைமுறைப்படுத்த உதவாதவை. (பராட்டா போட மட்டுமே லாயக்கானவை). மற்றமைகளை (others) ஏற்றுக்கொள்ளாத உங்களுக்கும் புலிப்பாசிஸ்டுகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? உங்களைப்போன்றவர்கள் கையில் அதிகாரம் கையகப்பட்டிருந்தால் இதைவிட மோசமான விளைவுகளை தமிழ்மக்கள் சந்தித்திருப்பார்கள். (நீங்க தான் பராட்டா பொடுபவர்கள் ஆயிற்றே.. புரட்டி போட்டிருப்பீங்க.) அதைத் தான் நான் சொல்ல வந்தேன். மார்க்சீய குஞ்சுகள் என்றவுடன் நீங்கள் புல்லரித்து போனீர்களோ தெரியாது. "நானும் மார்க்சிஸ்ட்டுல" அப்பிடினு. நான் சொன்ன மார்க்சிஸ்ட்களுக்கும் மார்க்சீயத்துக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. அவர்கள் மார்க்சீயத்தின் பெயரால் வாழ்பவர்கள். பிழைப்பு நடத்துபவர்கள். மனித நேய தத்துவத்திற்கு விரோதமானவர்கள். ("நானும் மார்க்சிஸ்ட் தான் என்னையும் கூட்டிடு போங்கடா" எண்டு யாரொ கத்துற மாதிரி இருக்கே.)

//அமெரிக்காவின் மூஞ்சியில் குத்துபவர்களை சிலாகித்து எழுதவும் பேசவும் செய்கின்ற மார்க்சீயக்குஞ்சுகளுடன் தான் உங்கள் "கதையாடல்களை" எல்லாம் அளக்க முடியும்.
உண்மையைலேயே "அமெரிக்கத்தின்" மூஞ்சியில் குத்துபவர்களிடம் போய் கதையாடிப்பாருங்கள்.. பீச்சாங்கை உங்கள் மூஞ்சியில் விளையாடும். ..//

நான் சொன்னதை பாருங்கள் மயூரன்.

-/-அமெரிக்க ஏகாதிபத்தியம் வகுத்த உலக ஒழுங்கின் பாதையில் நாமெல்லாம் கைவீசி நடைபயில்கின்றோம் என்ற கேவலமான உண்மையை இந்த வகையில் நாம் மூடிமறைத்துவிட முடியாது. ...... இந்த லட்சணத்தில் இவர்கள் எல்லாம் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி குத்து விடுகின்றனர். -/-

கேவலமான உண்மை என்றிருக்கிறேன் புரியவில்லையா? மார்க்சீயர்கக் குஞ்சுகள் தானெ அமெரிக்காவிற்கு குத்துவிடுறன் எண்டு புருடா விடும். மார்க்சிஸ்ட் புருடா விட மாட்டானே..!! மார்க்ஸை புரிந்தவனுக்கு செயற்பாடு தானே முக்கியம். அவனுக்கு புருடா விட வராது மயூரன். உங்களைப் போல.. உண்மையைலேயே "அமெரிக்கத்தின்" மூஞ்சியில் குத்துபவர்களிடம் போய் நான் ஏன் கதையாடப்போகின்றேன்.

மயூரன்,

நான் முதல் பின்னூட்டாத்திலேயே சொல்லியிருக்கிறேன்.
-------
1.
துவித எதிர் மனநிலைகளில் வாழும் இவர்களால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. கறுப்பு அல்லது வெள்ளை இது தான் அவர்களின் முடிவு. கறுப்பு வெள்ளைகளுக்கு இடையில் பரந்திருக்கும் அப்பாவிவெளிகளை தனது தத்துவ வன்முறையினூடு நிராகரித்துவிடுகின்றனர். இவர்களா மனித நேய தத்துவத்தின் பால் உண்மையான ஈர்ப்பு கொண்டவர்களென நீங்கள் கருதுகின்றீர்களா?

2.
பி.கு.1-
துவித எதிர் மனநிலை சிந்தனாவதிகள் என்னை NGO க்கு ஆதரவானவன் என்று திட்டக் கூடும். அதை நிறுவக்கூடும். அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் நிறுவத்தேவை இல்லை. உங்களுக்கு மட்டும் நான் ஒப்புக் கொற்கின்றேன். உங்கட அசத்தலான கண்டுபிடிப்புகள் தாங்க முடியலப்பா.

பி.கு.2-
என்னை அமெரிக்காவின் ஆள் என்று சொல்லலாம். மார்க்ஸிய குஞ்சுகள் மட்டும் என்னை அப்பிடி சொல்லலாம். (CIA, டொலர் அதையும் சேர்த்து போடுங்க தலைவா..). --

நீங்கள் உங்களை மார்க்சீய குஞ்சு என்று ஏற்று கொண்டீர்கள்.(அப்பாடா..)
உங்களை போன்றவர்கள் தான் என்னை அமெரிக்காவின் ஆள் என்று சொல்வீர்கள்.
ஜோர்ஜ் புக்ஷ் கும் உங்களுக்கும் றயாகரனுக்கும் புலிகளுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்வீர்களா? கறுப்பு வெள்ளைகளுக்கு இடையில் இருக்கும் எங்களைப் போன்றவர்களை உங்கள் எழுத்தால் உங்களுக்கு வசதியான இடத்துக்கு கொண்டு சென்று அங்கே வைத்து அடிப்பீர்கள்.
இதை தான் ஜோர்ஜ் புஷ் "பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள் எங்கள் பக்கம் வாருங்கள். எங்களுடன் இல்லாதவர்கள் பயங்கரவாதிகள்" என்று சொன்னார். இதையே தான் றயாகரனும் சொன்னார். நீங்களுன் சொன்னீர்கள். புலிகளும் சொன்னார்கள். யாருக்கையா மனித நேயம் இல்லை?

//..அதற்காகத்தானே உங்களை திட்டமிட்டு உருவாக்கிவிட்டிருக்கிறார்கள் உங்கள் "முன்னோர்கள்" ..//
யார் மயூரன் அந்த முன்னோர்கள்? வர வர றயாகரன் மாதிரியே வர்றீங்க?

இதோ எனது பின்னூட்டம்.

-/-பி.கு.2-
என்னை அமெரிக்காவின் ஆள் என்று சொல்லலாம். மார்க்ஸிய குஞ்சுகள் மட்டும் என்னை அப்பிடி சொல்லலாம். (CIA, டொலர் அதையும் சேர்த்து போடுங்க தலைவா..).-/-

//..கோட்டுக்கருத்தியல், கோடில்லாக்கருத்தியல், கருப்புவெள்ளைத்தத்துவம், சாம்பல் தத்துவம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கும் உங்க்ளுக்கும் உங்கள் குஞ்சுகளுக்கும்
தெரிந்ததெல்லாம் மார்க்சீயத்தை கருவறுப்பது எப்படி என்று இரவுஅகலாக சிந்திப்பதும் பண்பாட்டின் உதிரிகளாய் அலைவதும்தான்..//

ஆகா றயாகரன் மாதிரியே இருக்கே.. ஆமாம் மார்க்சீயத்தை அப்பிடியே நாங்க கருவறுக்க போறோம். நீங்க காப்பாத்த போறீங்க.. சும்மா வுடாதீங்கவா.. ஹையோ....

நான் மார்க்சீயத்தை கருவறுப்பதாக எதை வைத்து முடிவு பண்ணினீர்கள்.?

மார்க்ஸின் சொற்றொடர்களுக்குள் புரட்சியை தேடுபவர்களே மார்க்சியத்தின் எதிரிகள். மார்க்சீயம் ஒரு உணர்வு நிலைத் தத்துவம். வெறும் சொற்களுக்குள் அதை கண்டடைந்து விட முடியாது.
மார்க்சீய உணர்வு நிலையின் அடிப்படையே மானுடர்களின் நுகர்வுக்கான ஏது நிலை சம்பந்தப்பட்டது. பல்வேறுபட்ட நுகர்வின் அதியுச்ச மற்றும் அதிகுறைந்த புள்ளிகளுக்கிடையிலான இடைவெளி பற்றிய கவலை பற்றியது. அதை நீக்குவதற்கான வழிமுறைகள் கட்டமைப்புகள் பற்றியது. வழிமுறைகள், கட்டமைப்புக்கள் பல்வேறுபட்ட சமூக மக்கள், மற்றும் அவர்களின் வாழ்வு முறைமை பற்றி மாறக்கூடியது. மாறவேண்டியது. சூழ்நிலைகளே எந்தவொரு சமூகத்தினதும் மாற்றத்தில் முக்கிய பங்குவகிப்பது. அதைதவிர்த்து எவ்வாறு சிந்திக்க முடியும். மார்க்சீய குஞ்சுகள் உற்பத்தி செய்யும் புழுத்தல்மார்க்சீயத்தை பற்றிப் பேசவேண்டும். மார்க்சீய மேதைகள் என்று தம்மை நினைக்கும் மார்க்சீய பிதற்றல்களுக்கு மார்க்சீயத்தின் உள்ளார்ந்த மனித நேயம் பற்றிய புரிதலை உருவாக்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் உதிரிகளை நேசிக்கின்றோம். அவர்களும் இச்சமூகத்தின் உற்பத்திதான்.

மயூரன், உதிரிகள் என்றால் உங்களுக்கு ரொம்ப கேவலமோ? உங்களைப் போன்றவர்கள் எத்தனை பேருக்கு உதிரி தெரியுமா? சிங்களவனுக்கு தமிழன் உதிரிதான். பார்ப்பனுக்கு தலித் உதிரி தான்.
அதிகார வர்க்கத்தின் குரல் இப்பிடிதான் மயூரன். மற்றமையை நிராகரிக்கும் வன்முறையினூடு மிக எளிதாக.

//..உங்கள் "சாம்பல்" கோட்பாட்டாளர்கள் மக்களுக்கு பிரயோசனமாய் எந்தச் சிறு சாம்பல் துகளையாவது எடுத்து அப்பால் போட்டிருக்கிறார்கள் என்றால், பேச வாருங்கள். பாசிசத்தைப்ப்ப்பற்றியும் ..//

ஆமாம். நீங்கள் தான் கடகம் கடகமாய் சாம்பலை அள்ளிக் கொட்டுறீங்க. ஏன் மயூரன் சின்ன புள்ளயாவே இருக்கிறீங்க?

மயூரன்,
சாம்பல் கோட்பாட்டின் பெயர் என்னவென்று சொல்லுங்களேன்.. கேக்க ஆசையா இருக்கு..
அதென்ன உங்கள் கோட்பாடு எங்கள் கோட்பாடு.??? பிரிச்சு பேசுறீங்களே.ஜார்ஜு புஷ்ஷு மாதிரியும்.றயாகரன் மாதிரியும். புலிகள் மாதிரியும்..

யாருக்கு கண்ணா துவித எதிர் மனோநிலை?

//..பிரிட்டன் உலகின் ஆட்சியில் இருந்த காலத்தில் கூட உங்கள் முன்னோர்கள் (அப்போது அவர்கள் வேறு பெயர்களில் இருந்தார்கள்) சுதந்திரப்போராட்டம் எல்லாம் படு மோசமான இலட்சியவாதம், ஏகாதிபத்தியத்தை ஏற்றுக்கொண்டு அடங்கிப்போவதே வாழ்வதற்கான தத்துவம் என்று உளறிக்கொண்டிருந்தார்கள்..//

நான் அப்பிடியா சொன்னேன்? ஏன் நீங்களாவே கற்பனை பண்ணி புசத்துறீங்க? ஏகாதிபத்தியத்தை ஏற்றுகொண்டு அடங்கிப்போவதே வாழ்வதற்கான தத்துவம் என்பதற்கு ஈடான கருத்து ஏதாவது நான் சொன்னனா? மார்க்ஸியத்தை கொஞ்சம் விமர்சிச்சா ஏகாதிபத்தியதிற்கு அடங்கி போற மனிதன் என்ற பொய்ப்புழுத்தல்க் கற்பிதங்களை எங்க கொண்டு போய் அழ? நீங்கள் மட்டும் தான் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள். நாங்கள் எல்லாம் கூனி குறுகி வாழுறம்.

//..ஆட்சியில் அமெரிக்கா உங்கள் கைகளில் நாசிசத்தின் மூலவர்களின் கோட்பாட்டுப்புத்தகங்கள்.. //

உதிரி என்று நிராகரிக்கிற நீங்கள் நாசிசத்தை பற்றி பேசுவீங்க. உங்கட பேச்சை கேட்டுக்கொண்டு ஒரு கூட்டம். நீங்க அமெரிக்காவிற்கு ஒரு குத்து விடுவீங்களாம். அமெரிக்கா அலறி அடிச்சு கொண்டு ஓடுமாம். ரொம்ப cartoon பார்ப்பீங்களோ? அமெரிக்கா விற்கு எதிரான உங்கள் கோபம் நியாயமானது தான் மயூரன். அமெரிக்க வல்லரசு நடத்திக் கொண்டிருக்கும் கொடூரங்களுக்கு நீங்கள் காட்டுவது மாதிரியான எதிர்ப்பு பின்லேடன் அமெரிக்க அப்பாவி மக்கள் மீது காட்டிய வெறுப்பிற்கு சமமானது. இம்மாதிரியான எதிர்ப்புணர்வுருவாக்கங்கள் வன்முறை சமூகத்தை மட்டுமே கட்டியெழுப்பும். அப்பாவி மக்களின் மரணங்களுடன் விளையாடும்.
ரவிக்குமார் தான் பாராளுமன்றதேர்தலில் நிற்பதற்கான காரண்ங்களை சொல்லுவார். அதை வாசித்த கணங்கள் மிக நெகிழ்ச்சியானவை.

பெயரிலி பாவம் ஏதோ கதைக்க போய் கடசீல இவங்க எதோ கதைக்கிறாங்கள் என்று நினைப்பார்.

பெயரிலி,

றயாகரன் போன்றோரின் உருவாக்கம் எப்படி நிகழ்கின்றது அது சமூகத்தளத்தில் எவ்வாறு தொடர்ந்து செல்கின்றது போன்ற விடயங்கள் முக்கியமானவை. இயங்குசக்தியற்ற சமூகத்தளங்கள் செயற்பாடற்ற கோட்பாட்டாளர்களை உருவாக்கிவிடும். அந்த இடத்தில் றயாகரன் போன்றோருக்கான செயற்பாட்டுத் தளத்தை மறுத்து நிற்கும் புலிகளை அவர் பாசிஸ்டுகள் என்று சொல்வதில் தப்பில்லை தான். அதற்காக தட்டையாக ஒரேயடியாக புலிகளை நிராகரித்தல் என்பது அவர் நேசிக்கும் மக்களை அவரே நிராகரித்தல் போலவே..

றயாகரனை பற்றி பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன் மிக உயர்வாக. அவரது தனிப்பட்ட நேர்மை சார்ந்து. நான் இதை இங்கு சொல்வதற்கு முக்கிய காரணம். வாழ்வின் ஒரு கட்டத்தில் அவரை மாதிரி சிந்தித்திருந்தேன். அவை எனது வாழ்வின் மோசமான கட்டங்கள். அந்நேரங்களில் நான் எது சார்ந்தும் இயங்காமல் இறுகிக் கிடந்தேன். குறைந்தபட்சம் எனது படிப்பு சார்ந்து கூட..
இதை நான் எழுதியதற்கான காரணம் அதுதான். எனக்கு எழுதுவதில் எப்போதுமே உடன்பாடு இல்லை.

இறுதியாக,

மயூரனுக்காக ஒரு குட்டிக் கதை. மயூ ,மயூ என்று ஒரு குட்டி கண்ணன் இருந்தானாம்.
ஒரு நாள் அவன் பயங்கர காட்டுக்குள்ளால அவனது பாட்டியை பாக்க போனானாம். அப்போ திடீர்னு இருண்டுடுச்சாம். காட்டுக்குள்ள ஒரே சத்தம். பயங்கர சத்தம். ஆனா மயூ குட்டி பயப்படலியே. ஏன்னா அவன் தான் வீரனாச்சே. வீர நடை நடந்துட்டு போறான். அப்போ ஒரு முயல் குட்டி வந்துச்சாம். அது மயூ வ வெருட்ட பாத்துச்சாம். மயூ வெருளுவான நம்ம சிங்க குட்டி. அப்ப தான் மயூ க்கு தெரின்சிருக்கு. அந்த முயலுக்கு பெயர் அமெரிக்கா என்பது. விட்டான் ஒரு குத்து அமெரிக்கா(முயல்) ட மூஞ்சி மேல. முயல் தலை தெறிக்க ஓடிட்டாம். முயல் ட பல்லு மட்டும்தான் அங்க இருந்துச்சாம். அப்ப மயூ க்கு 5 வயசு சொன்ன நம்புவீங்களா?
அன்னில இருந்து மயூ இப்பிடித்தான் அமெரிக்கா வ கண்டாலே மூஞ்சி மேலா ஒரு குத்து விடுவான். (பெயரிலி தன்னுடைய சின்ன தோழருக்கு சொல்லி மகிழலாம்.)

பி.கு.1-
றயாகரனுக்கும் இப்பிடி ஏதாவது கதை இருக்க கூடும்.

பி.கு.2-
மயூரன் எனது பின்னூட்டத்தை முழுமையாக வாசிக்கவும். அமெரிக்கவ பற்றி மட்டும் தான் எழுதி இருக்கிறன் எண்டு யோசிக்க வெணாம்.





மயூரனின் பின்னூட்டம்-2

அனானி அமீபாக்குஞ்சு, ;-)
இறுகிப்போன கம்யூனிஸ்டுக்கள் பற்றியும் அவர்களது துருப்பிடித்த நிறுவனங்கள் பற்றியும் நீங்கள் சொல்லும் விமர்சனங்களில் நானும் ஒரு புள்ளியில் உடன்பாடு காண்கிறேன். ஆனால், உங்கள் கோட்பாடு என்று நான் கண்டடைந்த ஊகத்தினடிப்படையில் (அனானியியத்தைப் பொறுத்தவரை ஊகம் தானே எல்லாம்) அந்தக் கோட்பாடோடு பாரிய முரண்பாட்டையும் காண்கிறேன்.
இதுபற்றி பிறிதோரிடத்தில் நாம் சந்திக்கலாம், விவாதிக்கலாம்.

உங்கள் குட்டிக்கதை என்னுடைய சிறுவயதையும் சித்தியையும், பெரியம்மாவையும் ஏனோ நினைவூட்டி நெகிழ வைத்தது. :-)

நன்றி.

0 comments: